சும்மா மென்று தின்றால் கூட போதும்.. நோயின்றி வாழ வைக்கும் வல்லாரை கீரை மகிமைகள்..!
வல்லாரை கீரையில் பல ஆரோக்கிய நன்மைகள் மிகுந்து காணப்படுகின்றன.
வல்லாரை கீரையில் அமினோ அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் ஏ, பி, சி போன்றவை அதிகம் காணப்படுகிறது. நம் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கும். அதுமட்டுமில்லாமல் ஏராளமான நன்மைகள் காணப்படுகின்றன.
வல்லாரை கீரை உண்ணும்போது இரத்தத்தில் ஹூமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது. நரம்புகள் பலம் பெறுகின்றன. சருமம் பொலிவுற வல்லாரை பெரிதும் துணை புரிகிறது. அது மட்டுமா கறை படிந்த பற்களை கூட வல்லாரை கீரை குணப்படுத்துகிறது.
வல்லாரைகீரையின் இலைகளை நம் பற்களின் மீது வைத்து தேய்த்தால், மஞ்சள் கறை அழுக்கு எல்லாம் நீங்கி, பற்கள் முத்து போல மின்னும். வல்லாரை கீரை நம் ஞாபக சக்தியை அதிகரிக்கும். மூளையின் திறனையும் அதிகரிக்க செய்கிறது.
வாய்புண்ணுக்கு வல்லாரை கீரை நல்ல மருந்து. காலை, மாலை இருவேளையும் நான்கைந்து வல்லாரை கீரை இலைகளை சமைக்காமல் பச்சையாக வாயில்போட்டு மென்று தின்றால் வாய்ப்புண் நன்கு ஆறிவிடும்.
இதையும் படிங்க: தினமும் தூங்கமுடியாம அவஸ்தையா? இதை செய்தால் குழந்தைங்க மாதிரி செம்ம தூக்கம் வரும்.. மூளை சுறுசுறுப்பா மாறும்..
எப்படி உண்ணலாம்?
*கொஞ்சம் புளி, உப்பு, ஒரு மிளகாய் வைத்து துவையல் மாதிரி அரைத்தும் உண்ணலாம்.
*வல்லாரை இலையை நிழலில் நன்கு காய வைத்து இடித்து பொடியாக்கி, அதில் இரண்டு தேக்கரண்டி பாலுடன் சேர்த்து அருந்தலாம். இதனால் வயிற்று பூச்சிகள் நீங்கும்.
*வல்லாரை கீரையை துவரம் பருப்பு, மிளகு, சீரகம், வெங்காயம் ஆகியவை சேர்த்து சாம்பாரா சமைத்து சாப்பிடலாம்.
இதையும் படிங்க: டீ, காபி குடித்தால் அந்தரங்க உறுப்பில் வரும் பிரச்சனைகள்.. குறிப்பா பெண்கள் ரொம்ப கவனமா இருக்கணும்..!