டீ, காபி குடித்தால் அந்தரங்க உறுப்பில் வரும் பிரச்சனைகள்.. குறிப்பா பெண்கள் ரொம்ப கவனமா இருக்கணும்..!

டீ, காபி அதிகம் குடித்தால் அந்தரங்க உறுப்பில் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். 

tea and coffee affects vaginal health tamil

நம் உடலில் உள்ள மற்ற உறுப்புகளைப் போலவே அந்தரங்க உறுப்பின் ஆரோக்கியம் கவனிக்கப்படக் கூடியது. இதில் அலட்சியம் காட்டினால் யோனி தொற்றுக்கு வழிவகுக்கும். மாதவிடாய் முதல் உடலுறவு வரை அனைத்திலும் பெண்கள் சுகாதாரத்தை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். ஆனால் அப்படி செய்தாலும் சில பானங்களை அருந்தும்போது யோனியின் ஆரோக்கியத்தை கெடுக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.  

காபியால் சத்துக்கள் குறையும்... 

பெரும்பாலான காபி பிரியர்கள் ஒரு நாளைக்கு 4 அல்லது 5 கப் காபி குடிக்கிறார்கள். இதனால் உடலில் நீர் இழப்பு ஏற்படுகிறது. அதிகமாக காபி குடிப்பதால், பெண்ணுறுப்பில் இருந்து கெட்ட வாசனை வர ஆரம்பிக்கிறது. உண்மையில், அடிக்கடி காபி குடிப்பது ஈஸ்ட் தொற்று அபாயத்தை அதிகரிக்கிறது. ஒரு நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை காபி குடிப்பது உடலில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். காபியில் காணப்படும் காஃபின் வைட்டமின்கள், தாதுக்களை அழிக்கிறது.  

Vaginal health tips tamil

மதுவால் கேடு..! 

போதை உடலுக்கு தீங்கு விளைவிக்கும். தினமும் மது அருந்துவது பிறப்புறுப்பின் ஆரோக்கியத்தை முற்றிலும் பாதிக்கும். தினமும் ஒயின் அருந்தினால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைகிறது. இது பிறப்புறுப்பு பகுதியில் உள்ள இயற்கையான லூப்ரிகண்டுகளை மெல்ல குறைக்கிறது. பிறப்புறுப்பில் வலி, பிறப்புறுப்பு வறட்சி ஆகிய பிரச்சனைகளை கூட ஏற்படுத்துகிறது. 

'டீ' கொடுக்கும் வயிற்றுப்போக்கு அலர்ட்

தேநீரில் கூட காஃபின் உள்ளது. அதையும் அதிகமாக குடிக்காதீர்கள். ஒரு நாளைக்கு பல முறை தேநீர் அருந்தினால் வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் விளைவாக, பிறப்புறுப்பு வறட்சியாக ஆகிவிடும். காஃபின் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் தீங்கு விளைவிக்கும். இதன் காரணமாக, பெண்களின் ஹார்மோன்களின் அளவும் குறைகிறது. அவர்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையத் தொடங்குகிறது. 

இதையும் படிங்க: தமிழகத்தில் புதியதாக பரவும் மர்ம காய்ச்சல்.. குணமான பின்னும் உடலை முடக்கி போடும் வைரஸ்... அறிகுறிகள் இதுதான்..

யோனியை பராமரிக்க குறிப்புகள்

•சிறுநீர் கழித்த பின் அந்தரங்க பாகங்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். 

•நிபுணர்களின் கூற்றுப்படி, பாதுகாப்பற்ற உடலுறவினால் யோனி ஆரோக்கியம் பாதிக்கிறது. இது பல வகையான தொற்றுநோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. 

•பிறப்புறுப்பைச் சுற்றி வியர்வை இருப்பதை தேங்க அனுமதிக்காதீர்கள். முறையாக சுத்தம் செய்யாவிட்டால் தொற்றுநோய்க்கு வாய்ப்பாகிவிடும்.

• தினமும் நிறைய தண்ணீர் குடிக்கவும். 

• இறுக்கமான உள்ளாடைகளை எப்போதும் அணிய வேண்டாம். பருத்தி உள்ளாடைகளை அணியுங்கள். 

இதையும் படிங்க: தினமும் தூங்கமுடியாம அவஸ்தையா? இதை செய்தால் குழந்தைங்க மாதிரி செம்ம தூக்கம் வரும்.. மூளை சுறுசுறுப்பா மாறும்..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios