ஐதராபாத் பிரியாணியை ஈஸியாக செய்வதற்கு இப்படி ஒரு shotcut இருக்கா?
பிரியாணி செய்வது என்பது ஒரு கலை என்றே சொல்லலாம். இது சரியான சுவையில் அனைவருக்கும் சமைக்க வந்து விடாது. பிரியாணி செய்வது மிகவும் கஷ்டம் என நினைத்து பலரும் இதை செய்ய தவிர்த்து வருவது உண்டு. ஆனால் ஐதராபாத் பிரியாணியை ஈஸியா வீட்டிலேயே செய்வதற்கு shotcut இருக்குன்னு தெரியுமா?

ஐதராபாத் பிரியாணி hyderabadi biryani:
பிரியாணி செய்வது சிரமமானம் காரியம் என்று பல நினைக்கிறார்கள். அதுவும் ஹைதராபாத் ஸ்டைல் என்றால், நேரம் பிடிக்கும், எல்லாம் தனி தனியாக வேக வைக்கணும் என்று பயமாக இருக்கலாம். ஆனால் இது மிகவும் சுலபமான ஒன்றாகும். பொருட்களின் சரியான அளவு, சரியான, சரியான அளவு தண்ணீர், சரியான பதம் ஆகியவற்றை மட்டும் கவனமாக சேர்த்தாலே போதும் உங்களுக்கு சமையலே தெரியாது என்றாலும் நீங்கள் பிரியாணி ஸ்பெஷலிஸ்ட் ஆகி விட முடியும். இங்கே ஒரு simple shortcut method – ஒரு பானையில் (one-pot) பிரியாணி எப்படி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1/2 கிலோ
தயிர் – 1/2 கப்
இஞ்சி-பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு – தேவையான அளவு
மல்லித்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
புதினா, கொத்தமல்லி – சிறிது

மற்ற பொருட்கள்:
பாஸ்மதி அரிசி – 1 கப் (30 நிமிடங்கள் ஊறவைக்கவும்)
வெங்காயம் – 2 (நறுக்கி, பொரித்து வைத்துக் கொள்ளவும்)
எண்ணெய், நெய் – 2 டேபிள் ஸ்பூன்
முழு மசாலா (ஏலக்காய், பட்டை, லவங்கம்) – சிறிது
தண்ணீர் – 1 3/4 கப்
மேலும் படிக்க: ஆம்பூர் பிரியாணி – பாரம்பரிய முறையில் இப்படி செய்யுங்க

செய்முறை :
- சிக்கன் ஊற வைப்பதற்கு மேலே உள்ள எல்லா பொருட்களுடன் சிக்கனை நன்றாக கலக்கி 30 நிமிடங்கள் வைக்கவும். நேரம் இல்லையென்றால், குறைந்தது 10 நிமிடங்கள் வைத்தால் போதும்.
- one pot rice ஆக செய்வதற்கு கடாயில் எண்ணெய், நெய் ஊற்றி, அனைத்து மசாலாக்கள், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- அதோடு ஊற வைத்த சிக்கனை சேர்த்து 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- ஊற வைத்த அரிசி, புதினா, கொத்தமல்லி, கொஞ்சம் பொரித்த வெங்காயம் சேர்க்கவும்.
- தேவையான தண்ணீர் ஊற்றி, லேசாக கொதி வந்ததும் சிம்மில் வைத்து மூடி 15–20 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- மணக்க மணக்க சிக்கனுக்குள் ஊறிய மசாலாவுடன் சுடசுட ஹைதராபாத் ஸ்டைல் பிரியாணி ரெடி.
- இது ஒரே பாத்திரத்தில் சமைக்கக்கூடிய, சுலபமான பிரியாணி. மிகக் குறைந்த நேரத்தில் மிகவும் ருசியான பிரியாணியை செய்து விடலாம்.

சுவை கூட்ட குறிப்பு :
- பிரியாணி வேகும் போது அடிக்கடி கிளறி விடக் கூடாது. இதனால் அரிசி உடைந்து, குழைந்து விடும்.
- சிக்கன் already தண்ணீரும் விடும், அதற்கேற்ப தண்ணீர் அளவு சரி பண்ணுங்க.
- வெங்காயம் பச்சையாக இருக்கக் கூடாது. நல்லா பிரவுன் ஆகும் வரை பொரிக்கணும்.
- வெங்காயம், இஞ்சி-பூண்டு எந்த அளவிற்கு பச்சை வாசம் போகும் வரை வதங்கி வருகிறதோ அந்த அளவிற்கு பிரியாணியில் சுவை கூடும்.