- Home
- உடல்நலம்
- உணவு
- Cooker-இல் எத்தனை விசில் விட்டா சாதம் குழையாமல் உதிரி... உதிரியா வரும்? 90% பேருக்கு தெரியாத ரகசியம்...!
Cooker-இல் எத்தனை விசில் விட்டா சாதம் குழையாமல் உதிரி... உதிரியா வரும்? 90% பேருக்கு தெரியாத ரகசியம்...!
Pressure Cooker Rice : ப்ரஷர் குக்கரில் சாதம் சமைக்கும் போது அடிக்கடி சாதம் குழைந்துவிடுகிறதா? கவலையை விடுங்க, இனி இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க சாதம் உதிரி உதிரியா வரும்.

Rice Cooking Tips
தமிழர்களின் அன்றாட உணவில் முக்கிய இடம் பிடிப்பது அரிசிதான். தென்னிந்தியா மட்டுமல்லாமல், வட இந்தியா, சீனா மற்றும் பல ஆசிய நாடுகளிலும் அரிசி பிரதான உணவாக பயன்படுத்தப்படுகிறது. தினமும் சாப்பிடப்படும் இந்த அரிசியை சரியான முறையில் சமைப்பது மிகவும் முக்கியம். அரிசியில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருந்தாலும், அதோடு புரதம், நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்களும் உள்ளன. பல வகையான அரிசிகள் சந்தையில் கிடைக்கின்றன. ஒவ்வொரு வகை அரிசிக்கும் சமைக்கும் நேரமும், தண்ணீரின் அளவும் மாறுபடும்.
பெரும்பாலானோர் சாதத்தை பாத்திரத்தில் அல்லது பிரஷர் குக்கரில் சமைக்கிறார்கள். குறிப்பாக குக்கரில் சாதம் விரைவாக வெந்துவிடுவதால் பலர் அதையே தேர்வு செய்கிறார்கள். ஆனால், "எத்தனை விசில் வந்தால் சாதம் சரியாக வெந்துவிடும்?" என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இதோ, அரிசி வகைக்கு ஏற்ப சரியான குக்கிங் டிப்ஸை இங்கே பார்க்கலாம்.
Pressure Cooker: அலுமினியம் குக்கர் vs ஸ்டீல் குக்கர்.! சமையலுக்கும், ஆரோக்கியத்திற்கும் எது பெஸ்ட்?
அரிசிக்கு ஏற்ப மாறுபடும் அளவு
வெள்ளை அரிசி (White Rice)
பொதுவாக தினசரி பயன்படுத்தப்படும் வெள்ளை அரிசிக்கு 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் என்ற அளவு போதுமானது. இதை 2 முதல் 3 விசில் வரும் வரை சமைத்தால் சாதம் மென்மையாகவும் உதிரியாகவும் இருக்கும்.
பாஸ்மதி அரிசி (Basmati Rice)
பாஸ்மதி அரிசி விரைவாக வெந்துவிடும். எனவே 1 கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து 1 அல்லது 2 விசில் மட்டுமே விடுவது நல்லது. அதற்கு மேல் வேக வைத்தால் அரிசி பிசைந்து அதன் தனித்தன்மையை இழக்கக்கூடும்.
அதிக விசில் வைக்க வேண்டும்
புழுங்கல் அரிசி
புழுங்கல் அரிசி சற்று கடினமாக இருப்பதால், 1 கப் அரிசிக்கு இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து 4 முதல் 5 விசில் வரை வேகவைத்தால் சரியான பதத்தில் இருக்கும்.
பழுப்பு அரிசி (Brown Rice)
பழுப்பு அரிசி அதிக நார்ச்சத்து கொண்டதால் வெந்துவர சற்று அதிக நேரம் தேவைப்படும். 1 கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் சேர்த்து 6 முதல் 7 விசில் வரை வேகவைப்பது சிறந்தது.
கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்
அரிசியை முன்கூட்டியே 20 முதல் 30 நிமிடங்கள் ஊறவைத்தால், ஒரு விசில் குறைவாகவே சமைக்கலாம். தண்ணீரின் அளவு அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ, சமைக்கும் நேரமும் மாறும். பெரிய அளவிலான பிரஷர் குக்கர் பயன்படுத்தினால், வெப்பநிலை வேறுபாட்டால் விசில் எண்ணிக்கையிலும் மாற்றம் இருக்கலாம். ஒவ்வொரு அரிசி பிராண்டின் தன்மையும் வேறுபடும் என்பதால், முதல் சில முறை சமைக்கும் போது தண்ணீர் மற்றும் விசில் அளவை தேவைக்கேற்ப சரிசெய்வது நல்லது. சரியான அளவு தண்ணீரும், பொருத்தமான விசில் எண்ணிக்கையும் பயன்படுத்தினால், எந்த வகை அரிசியாக இருந்தாலும் சுவையான, உதிரியான சாதத்தை எளிதாக சமைக்க முடியும்

