- Home
- Lifestyle
- Cooker Biriyani : அரிசி ஒட்டாமல்-குழையாமல் குக்கரில் கச்சிதமாக மட்டன் பிரியாணி செய்வது எப்படி?
Cooker Biriyani : அரிசி ஒட்டாமல்-குழையாமல் குக்கரில் கச்சிதமாக மட்டன் பிரியாணி செய்வது எப்படி?
Cooker Biriyani : குக்கரில் சுவையான மட்டன் பிரியாணி சமைக்கும்போது, அரிசி அடிப்பிடிக்காமல் உதிரி உதிரியாக வருவதும், மட்டன் கச்சிதமாக வெந்து மென்மையாகவும் இருப்பதும் ஒரு கலை. அப்படி ஒரு பிரமாதமான பிரியாணியை தயாரிக்க சில எளிய டிப்ஸ்.

எலுமிச்சை சாறு
அரிசி உதிரி உதிரியாக வர, ஒரு கப் பாஸ்மதி அல்லது சீரக சம்பா அரிசிக்கு 1.25 முதல் 1.5 கப் தண்ணீர் என்பது மிக முக்கியம். அரிசியை 20 முதல் 30 நிமிடங்கள் ஊறவைத்த பின் நன்கு வடித்து, குக்கரில் சேர்த்து மெதுவாகக் கிளறவும். எலுமிச்சை சாறு சேர்ப்பது அரிசி ஒட்டாமல் உதிரி உதிரியாக வர உதவும்.
மட்டனின் சரியான பதம்
மட்டன் சரியாக வேகாமல் போவதால் பிரியாணியின் சுவையே கெட்டுவிடும். இதைத் தவிர்க்க, மட்டனை முதலில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு மற்றும் தயிர் சேர்த்து குறைந்தது 30 நிமிடங்கள் ஊறவைப்பது சிறந்தது. பின்னர், மட்டனை தனியாக ஒரு குக்கரில் வேக வைத்துக்கொள்ளலாம். மட்டனின் தன்மைக்கேற்ப 4 முதல் 7 விசில் வரும் வரை சமைக்கவும். மட்டன் மென்மையாகவும், ஆனால் குழையாமலும் இருப்பது அவசியம். முதல் விசில் வந்ததும் பர்னரை குறைத்து, மேலும் 10-12 நிமிடங்கள் சிம்மில் வேக விடலாம்.
வெங்காயம், தக்காளி
பிரியாணி சமைக்கும்போது குக்கரின் அடிப்பகுதி கனமானதாக இருப்பது அரிசி அடிப்பிடிப்பதைத் தவிர்க்க உதவும். வெங்காயத்தை பொன்னிறமாக வதக்குவது பிரியாணிக்கு நல்ல சுவையையும் நிறத்தையும் கொடுக்கும். தக்காளி அதிகமாகச் சேர்ப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது பிரியாணியின் சுவையை மாற்றலாம்.
Fridge Storage : பிரியாணியை எத்தனை நாள் ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்? பாதுகாப்பா சேமிப்பது எப்படி?
சரியான சமையல் முறை
மசாலா வதக்கி, மட்டன் சேர்த்த பிறகு, தண்ணீர் மற்றும் ஊறவைத்த அரிசியைச் சேர்க்க வேண்டும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், குக்கரை மூடிவிடவும். மிதமான தீயில் முதல் விசில் வந்ததும், அடுப்பை சிம்மில் (மிகக் குறைந்த தீயில்) வைத்து, மேலும் 10-12 நிமிடங்கள் வேகவிடவும். அதன் பிறகு, அடுப்பை அணைத்து, குக்கரில் உள்ள பிரஷர் தானாகவே முழுமையாக வெளியேறிய பின் மட்டுமே மூடியைத் திறக்க வேண்டும். இது அரிசி உதிரி உதிரியாகவும், மட்டன் கச்சிதமாகவும் வெந்து சரியான பதத்தில் பிரியாணி கிடைக்க உதவும்.
Vada Curry Recipe : ஹோட்டல் சுவையில் அட்டகாசமான வடகறி செய்வது எப்படி?
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

