MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • உடல் பருமனால் 17 கோடி குழந்தைகள் பாதிப்பு: பெற்றோர்கள் செய்யக் கூடாத 5 தவறுகள்; உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

உடல் பருமனால் 17 கோடி குழந்தைகள் பாதிப்பு: பெற்றோர்கள் செய்யக் கூடாத 5 தவறுகள்; உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

குழந்தைகளின் தோற்றத்தை மட்டும் வைத்து உடல் எடையை மதிப்பிடாமல், மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உலகளவில் 5 முதல் 19 வயதுக்குட்பட்ட சுமார் 17 கோடி குழந்தைகள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Oct 20 2026, 03:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
குழந்தை பருவ உடல் பருமன்: மருத்துவரை அணுக WHO அறிவுறுத்தல்
Image Credit : chatgpt

குழந்தை பருவ உடல் பருமன்: மருத்துவரை அணுக WHO அறிவுறுத்தல்

குழந்தைகள் பார்க்க எப்படி இருக்கிறார்கள் என்பதை மட்டுமே அடிப்படையாக வைத்து அவர்களின் உடல் எடையை மதிப்பிடக் கூடாது என்றும், குழந்தைகளின் வளர்ச்சி அல்லது எடையில் சந்தேகம் இருந்தால் பெற்றோர்கள் உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரை அணுக வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரித்துள்ளது.

குழந்தை பருவ உடல் பருமனைச் சமாளிப்பதற்காகத் தனது முதல் சர்வதேச வழிகாட்டுதல்களை அக்டோபர் 7, 2026 அன்று WHO வெளியிட்டுள்ளது. அதில் சத்தான உணவு, உடற்பயிற்சி மற்றும் மனநல ஆதரவு ஆகியவற்றை ஒருங்கிணைத்த முழுமையான அணுகுமுறை அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
4 மடங்கு அதிகரித்த பாதிப்பு
Image Credit : chatgpt

4 மடங்கு அதிகரித்த பாதிப்பு

2024-ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி, உலகளவில் 5 முதல் 19 வயதுக்குட்பட்ட சுமார் 17 கோடி குழந்தைகள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1990-ஆம் ஆண்டிலிருந்து ஒப்பிடுகையில், இந்த பாதிப்பு விகிதம் 2 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக, அதாவது 4 மடங்கு உயர்ந்துள்ளது.

உடல் நலனைப் போலவே குழந்தைகளின் மனநலம், சமூகம் அவர்களை அணுகும் விதம் மற்றும் பிறர் கேலி செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் தீவிரக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

35
உடல் பருமனுக்கு உணவு மட்டுமே காரணமல்ல
Image Credit : chatgpt

உடல் பருமனுக்கு உணவு மட்டுமே காரணமல்ல

உடல் பருமன் என்பது அதிக உணவு உண்பதால் மட்டுமே ஏற்படுவதில்லை. மரபணுக்கள், உடல் சார்ந்த காரணிகள், வாழும் உணவுச் சூழல், உடற்பயிற்சி செய்யப் போதிய வாய்ப்பின்மை, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் ஆகியவையும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக பதட்டம், மனச்சோர்வு மற்றும் குறைந்த தன்னம்பிக்கை போன்றவை குழந்தைகளின் உணவுப் பழக்கத்தையும் அன்றாடச் சுறுசுறுப்பையும் பாதிக்கக் கூடும். குறிப்பிட்ட எந்த ஒரு அறிகுறியும் உடல் பருமனை நேரடியாக உறுதி செய்யாது என்பதால், வெறும் தோற்றத்தை மட்டும் நம்பாமல் மருத்துவ ஆலோசனையைப் பெறுவதே சரியானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

45
வழங்க வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்
Image Credit : chatgpt

வழங்க வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்

குழந்தைகளின் சீரான வளர்ச்சிக்கு மிகக் குறைவாகப் பதப்படுத்தப்பட்ட, சமச்சீரான உணவுகள் தேவை. பருவகாலப் பழங்கள், கேரட் மற்றும் கீரை போன்ற காய்கறிகள். நார்ச்சத்து மற்றும் நீடித்த ஆற்றல் தரும் ஓட்ஸ், முழு கோதுமை ரொட்டி, சிறுதானியங்கள், கைக்குத்தல் அரிசி உள்ளிட்ட முழு தானியங்கள். தசை வளர்ச்சிக்குத் தேவையான பருப்பு, பீன்ஸ், கொண்டைக்கடலை, முட்டை, தயிர் மற்றும் பாதுகாப்பான அளவில் நட்ஸ், விதைகள்.

அதே சமயம், அதிக சர்க்கரை கலந்த குளிர்பானங்கள், பாக்கெட் நொறுக்குத் தீனிகள், அதிக உப்பு மற்றும் கெட்ட கொழுப்பு நிறைந்த உணவுகளைக் குறைக்க வேண்டும். மருத்துவரின் வழிகாட்டுதலின்றி உணவை அதீதமாகக் கட்டுப்படுத்துவதோ அல்லது சில உணவுகளை முற்றிலும் தவிர்ப்பதோ கூடாது.

55
இயல்பான உடற்பயிற்சி, வாழ்வியல் முறைகள்
Image Credit : chatgpt

இயல்பான உடற்பயிற்சி, வாழ்வியல் முறைகள்

உடற்பயிற்சியை ஒரு தண்டனையாக மாற்றாமல், குழந்தைகள் விரும்பி ஏற்கும் சூழலை உருவாக்க வேண்டும். நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நடனம், நீச்சல் மற்றும் வெளிப்புற விளையாட்டுகளில் அவர்களை ஈடுபடுத்தலாம். தினமும் சீரான நேரத்திற்குத் தூங்குவது, தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதைத் தவிர்ப்பது, குடும்பமாக இணைந்து அன்றாட வேலைகளைச் செய்வது போன்றவை நல்ல பலன் தரும்.

மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவம்

உடல் எடையை வைத்து குழந்தைகளைக் கேலி செய்வதும் ஒதுக்குவதும் அவர்களின் தன்னம்பிக்கையைப் பெரிதும் சிதைக்கும். எனவே உடலமைப்பை மையப்படுத்தி குழந்தைகளைத் திட்டவோ அவமானப்படுத்தவோ கூடாது. குழந்தைகளின் உணர்வுகளுக்கு உரிய மதிப்பளித்து, தீவிர மன உளைச்சலோ அல்லது உணவு சார்ந்த சிக்கல்களோ நீடித்தால் உடனடியாக மனநல ஆலோசகர்கள் அல்லது மருத்துவர்களின் உதவியை நாட வேண்டும் என்று அந்த வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உணவு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
White Sorghum balls : வெள்ளை சோள உருண்டை சாதம்.. நாட்டு கோழி குழம்புடன் சாப்பிட்டால் அசத்தல் சுவை!
Recommended image2
Selavu Rasam: புளி, தக்காளி இல்லாமல் கொங்குநாட்டு செலவு ரசம்! காரசாரமான ரெசிபி இதோ!
Recommended image3
Meen Kozhungurai : மீன் கொழுங்குறை சாதம்..புளி இல்லாமல் மாங்காய் அரைத்து செய்யும் சங்ககால ஸ்பெஷல் ரெசிபி!
Related Stories
Recommended image1
White Sorghum balls : வெள்ளை சோள உருண்டை சாதம்.. நாட்டு கோழி குழம்புடன் சாப்பிட்டால் அசத்தல் சுவை!
Recommended image2
Selavu Rasam: புளி, தக்காளி இல்லாமல் கொங்குநாட்டு செலவு ரசம்! காரசாரமான ரெசிபி இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved