கர்ப்பிணிகள் மட்டுமல்ல இவங்களும் கத்தரிக்காய் சாப்பிடக் கூடாது! ஏன் தெரியுமா?
கத்தரிக்காயில் பல சத்துக்கள் மிகுந்து காணப்பட்டாலும் சிலருக்கு உடல் நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
கத்தரிக்காய் இல்லாத சைவ உணவுகள் வெகு குறைவு. அசைவ உணவுகளில் கத்தரிக்காய் போட்ட கருவாட்டு குழம்பு மிகுந்த சுவையுடன் இருக்கும். சாம்பார், பொரியல், தொக்கு என அனைத்து வகை உணவுகளிலும் கத்தரிக்காய் பிரதானம். இதில் வைட்டமின் ஏ, பி1, பி2, கால்சியம், மாங்கனிசு, பொட்டாசியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் காணப்படுகின்றன. ஆனாலும் சிலர் கத்தரிக்காவை எடுத்து கொள்ளும்போது உடல்ரீதியான பிரச்சனைகள் ஏற்படுகிறது. அது குறித்து இங்கு காணலாம்.
யாரெல்லாம் எடுத்து கொள்ளக் கூடாது?
மாதவிடாயில் அதிக ரத்தப்போக்கு ஏற்படும் பெண்கள் கத்தரிக்காய் உண்பதை தவிர்க்க வேண்டும். இது ரத்தப்போக்கை அதிகரிக்கும் காரணியாக செயல்படுகிறது.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல கத்தரிக்காயை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது நெஞ்சு எரிச்சல், வாயு தொந்தரவு, செரிமான பிரச்சனை ஏற்படுகிறது. பொட்டாசியம், போலிக் அமிலம் இதில் காணப்படுவதால் வயிற்று பிரச்சனைகள் உண்டாகும்.
கருவுற்ற பெண்கள் மருத்துவ ஆலோசனையை பெற்று கத்தரிக்காயை உண்ண வேண்டும். கத்தரிக்காய் சத்து மிகுந்து காணப்பட்டாலும் கருச்சிதைவுக்கு வழிவகுக்கும்.
சிறுநீரக பிரச்சனைகள் இருப்பவர்கள் கத்தரிக்காயை சாப்பிடவேண்டாம்.
குறைந்த ரத்த அழுத்தத்தால் அவதிப்படுபவர்கள் கத்தரிக்காயை எடுத்து கொள்ளக் கூடாது.
இதையும் படிங்க: வீட்டில் விளக்கு ஏற்றும் போது இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க!
யார் உண்ணலாம்?
நினைவாற்றல் அதிகமாக விரும்புபவர்கள் உண்ணலாம். சர்க்கரை வியாதி இருப்பவர்கள், நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள், மூலநோயால் அவதியுறுபவர்கள், மண்ணீரல் வீக்கம் உள்ளவர்கள் எடுத்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: Pongal wishes 2023: பொங்கல் போலவே இன்பம் பொங்கட்டும்... உங்களுக்கான பொங்கல், போகி பண்டிகை வாழ்த்துகள் இதோ...