மதுரை ஸ்பெஷல் கறி தோசை : வாசனை கமகமக்க வீட்டிலேயே செய்யலாம்
மதுரை, அசைவ உணவுகளுக்கு பெயர் பெற்ற ஊர்களில் ஒன்று. இங்கு வித்தியாசமான முறையில் கிராமத்து மணம், சுவை மாறாமல் தயாரிக்கப்படும் கறி தோசை மிகவும் பேமஸ். இந்த கறி தோசையை வீட்டிலேயே எப்படி செய்வது என வாங்க தெரிந்து கொள்ளலாம்.

கறி தோசையின் சிறப்புகள் :
- மதுரை கையேந்தி பவன் முதல் பெரிய ஓட்டல் வரை கறி தோசையை விதவிதமான சுவைகளில் ருசிக்கலாம்.
- முட்டை, மசாலா, தோசை என மூன்று அடுக்குகளில் வரும் மடிப்பு.
- தோசைக்கு கீழே கருவாட்டு சுவை கொண்ட கறி பரவி இருக்கும்.
- சைட் டிஷ் கூட இல்லாமல் அப்படியே சாப்பிடலாம்.
தோசை மாவு தயாரிக்க...
அரிசி - 2 கப் (6 மணி நேரம் ஊறவைத்தது)
உளுந்து - 1/2 கப் (3 மணி நேரம் ஊறவைத்தது)
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிக்காய் (மசாலா) தயாரிக்க:
மட்டன் அல்லது கோழி கறி (நறுக்கியது) - 250 கிராம்
சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது)
தக்காளி 2 - (நன்றாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது -1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 1
புதினா, கொத்தமல்லி – சிறிதளவு
இந்த 3 பொருட்களை மென்று சாப்பிட்டால்... உடல் எடை சரசரவென்று குறையும்
மாவு, கறி மசால் செய்முறை :
அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து, தண்ணீர் தேவையான அளவு வைத்து மிருதுவாக அரைத்து, 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
- கடாயில் நெய் ஊற்றி, சீரகம், கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். - பின்னர் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- கறியை சேர்த்து, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி வேகவிடவும். சிறிது தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் 15 நிமிடங்கள் மூடி வைத்து வேகவைக்கவும். முடிவில் புதினா, கொத்தமல்லி தூவி, திரட்டி கொள்ளவும்.
தோசை செய்யும் முறை :
- தோசைக் கல்லை சூடாக்கி, ஒரு கரண்டி தோசை மாவை ஊற்றி, தோசையை பரப்பவும்.
- தோசை பாதி வெந்தவுடன், ஒரு முட்டையை உடைத்து தோசை மீது பரப்பவும்.
- கொஞ்சம் நெய் தேய்த்து, தயாரித்த கறி மசாலாவை தோசையின் நடுவில் பரப்பவும்.
- கீழ்புறம் சிறிது பொன்னிறமாகிவிட்டால், மறுபக்கம் திருப்பி, 1 நிமிடம் மட்டும் வேக விடவும்.
- மீண்டும் திருப்பி மடித்து பரிமாறலாம்.