Instant Idli : பழைய சாதம் இருக்கா? 10 நிமிடத்தில் சூப்பரான இன்ஸ்டன்ட் இட்லி ரெடி!
நம்மில் பல வீடுகளில் தினமும் சாதம் வடிப்பது வழக்கம். சில நேரங்களில் சாதம் மிஞ்சிப்போனால், அதை வைத்து அடுத்த நாள் புளியோதரை அல்லது லெமன் சாதம் செய்வோம். ஆனால், அதே பழைய சாதத்தை வைத்து சூப்பரான இட்லி செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
19

உங்களுக்கு தெரியாத செம்ம ஐடியா.!
ஆமாம், முதல் நாள் மிஞ்சிய சாதத்தை காலையில் சாப்பிட பலருக்கும் பிடிக்காது. சிலர் அதை சூடு செய்து சாப்பிடுவார்கள், அல்லது வேண்டா வெறுப்பாக தூக்கி எறிந்துவிடுவார்கள். ஆனால் இனி நீங்கள் பழைய சாதத்தை வீணாக்கத் தேவையில்லை. ஏனென்றால், அந்த சாதத்தை வைத்து சூப்பரான, சாஃப்ட்டான இன்ஸ்டன்ட் இட்லி எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
29
பொருட்கள் காம்பினேஷன் இதுதான்.!
பழைய சாதத்தில் இட்லி செய்யத் தேவையான பொருட்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்ளுங்கள். 1 கப் பழைய சாதம், 1 கப் ரவை, 1/2 கப் தயிர், 1 டீஸ்பூன் எண்ணெய், 1 பாக்கெட் ஈனோ (Eno), தேவையான அளவு உப்பு, தண்ணீர்.
39
பஞ்சு போல சாப்ஃட்
இட்லி எல்லோருக்கும் பிடித்தமான உணவு. இது சுவையாக இருப்பதுடன், எளிதில் ஜீரணமாகும். ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஆனால் வழக்கமாக இட்லி செய்ய, பருப்பு, அரிசியை பல மணி நேரம் ஊறவைத்து, அரைத்து, புளிக்க வைக்க வேண்டும். ஆனால் இப்போது, இரவில் மிஞ்சிய சாதத்தை வைத்தே பஞ்சு போன்ற மென்மையான இட்லியை உடனே செய்யலாம்.
49
நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள்
பழைய சாதத்தில் இட்லி செய்ய, முதலில் மிஞ்சிய சாதத்தை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். இந்த பேஸ்ட் மிகவும் தண்ணீராகவோ அல்லது மிகவும் கெட்டியாகவோ இருக்கக்கூடாது. சாதாரண இட்லி மாவின் பதத்தில் இது இருக்க வேண்டும்.
59
ரவை, உப்பு, தயிர் சேர்க்கவும்
இப்போது அரைத்த விழுதை ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் ரவை, உப்பு, தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். எல்லாப் பொருட்களும் ஒன்றுடன் ஒன்று நன்கு கலந்திருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அப்போதுதான் இட்லி நன்றாக வரும்.
69
ஒன்றாகக் கலக்குங்கள்
தயாரான இட்லி மாவை நன்றாக அடித்து, எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலக்குங்கள். மாவு சரியான இட்லி மாவு பதத்தில் இருப்பதை உறுதி செய்யுங்கள். தேவைப்பட்டால் மட்டும் தண்ணீர் சேர்க்கவும். அதிக தண்ணீர் சேர்த்தால் இட்லி மென்மையாக வராது. அதனால் கவனமாக இருங்கள்.
79
தண்ணீர் ஊற்றி சூடு செய்யுங்கள்
இப்போது இட்லி தட்டுகளில் எண்ணெய் தடவி, இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடு செய்யுங்கள். மாவை தட்டில் ஊற்றுவதற்கு முன்பு, அதில் ஈனோ (Eno) சேர்த்து லேசாகக் கலக்குங்கள். இது இட்லி உப்பி வரவும், மென்மையாகவும் இருக்க உதவும்.
89
சீக்கரம் வெந்துவிடும் தெரியுமா?
இப்போது தயாரித்த மாவை இட்லி தட்டுகளில் ஊற்றி, மிதமான தீயில் பத்து நிமிடங்கள் ஆவியில் வேக வையுங்கள். இடையில் இட்லி பாத்திரத்தைத் திறக்க வேண்டாம். இந்த இன்ஸ்டன்ட் இட்லி செய்ய அதிக நேரமும் எடுக்காது.
99
மென்மையான இட்லி இப்போது தயார்.!
10 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். இட்லி ஆறிய பிறகு, ஒரு ஸ்பூன் உதவியுடன் தட்டுகளில் இருந்து இட்லியை எடுக்கவும். பழைய சாதத்தில் இருந்து மிக மென்மையான இட்லி இப்போது தயார். இதை சட்னி, சாம்பாருடன் சூடாகப் பரிமாறலாம்.
Latest Videos

