வெள்ளரிக்காய்ல இப்படி ஒரு வகை இருக்கா? இனி வாங்கும்போது பார்த்து வாங்குங்க!!
கீரா (சாதாரண வெள்ளரி) vs ககாடி என்னும் ஊறுகாய் வெள்ளரி இவற்றில் எந்த வெள்ளரிக்காய் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக் கூடியது என இங்கு காண்போம்.

Kheera vs Kakdi Which Is Best Cucumber : கோடைகாலம் வந்துவிட்டாலே வெள்ளரிக்காய்களின் சீசனும் பரவலாகிவிடும். உடலில் நீரிழப்பு பிரச்சனையை சரி செய்வது தொடங்கி பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும் அருமருந்து என்றே வெள்ளரிக்காயை சொல்லலாம். அவ்வளவு சத்துக்கள் உள்ளன. வெள்ளரிக்காவை கடிக்கும்போது அதிலிருக்கும் நீர் காரணமாக குளிர்ச்சியை உணர்வோம். அதனை சாலட்டுகளில் சேர்ப்பது பலருக்கும் வாடிக்கையாக இருக்கும். வெள்ளரிக்காய் உடம்புக்கு நல்லது என்றாலும், எந்தவகை வெள்ளரிக்காவை உண்பது கூடுதல் ஆரோக்கியமானது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
கீரா vs ககாடி
வெள்ளரியின் வகைகள்:
வெள்ளரிக்காவில் சில வகைகள் நம் ஊர்களில் கிடைக்கும். வட இந்தியாவில் ககாடி என அழைக்கப்படும் ஊறுகாய் வெள்ளரி பார்பதற்கு நீளமாக இருக்கும். இதனை ரைத்தா, ஊறுகாய் போன்றவற்றில் பயன்படுத்துவார்கள். கீரா என்பது நாம் வாங்கி உண்ணும் சாதரண வெள்ளரிக்காய் ஆகும். இந்த இரு வெள்ளரிகளும் சுவையிலும், அமைப்பிலும் மட்டுமின்றி ஊட்டச்சத்துக்களிலும் கூட வித்தியாசம் கொண்டுள்ளன.
கீரா vs ககாடி
கீரா (எ) சாதாரண வெள்ளரி:
கீரா என்பது தான் இந்தியாவில் பரவலாக அறியப்படும் வெள்ளரி வகையாகும். அடர் பச்சை நிறம் கொண்ட குட்டையான வெள்ளரியாகும். மென்மையான தோலை உடையது. அதிக நீர்ச்சத்து, குறைந்த கலோரிகள் கொண்ட இந்த வெள்ளரி நீரேற்றம் தரக் கூடியது. உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். இதன் மென்மை காரணமாக சாலடுகள், குளிர்விக்கும் பானங்களில் பயன்படுத்துவார்கள். செரிமான அமைப்புக்கு நல்லது. நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் கொண்ட இந்த வெள்ளரி உடலின் நச்சுகளை அகற்ற உதவும். சருமத்தை மேம்படுத்துகிறது. காரமான உணவுகளால் ஏற்படும் பக்க விளைவுகளை குறைக்கும்.
கீரா vs ககாடி
ககாடி (எ) நீண்ட வெள்ளரி:
ககாடி நீளமான அமைப்பு. வெளிர் பச்சை நிறம் முதல் வெள்ளை நிறம் வரை காணப்படும். கரடுமுரடான தோலை உடையது. சற்று இனிப்பு சுவை கொண்டது. இதில் சிலிக்கா இருப்பதால் மூட்டு, சரும ஆரோக்கியத்திற்கு நல்லது. வெயில்காலத்தில் மதியம் சிறிது உப்பு அல்லது எலுமிச்சையுடன் இந்த வெள்ளரியை உண்ணலாம். சாதாரண வெள்ளரியை போலவே நீரேற்றம் கொண்டது.
கீரா vs ககாடி
கீரா (சாதாரண வெள்ளரி) vs ககாடி- எதை உண்ணலாம்?
இரண்டு வெள்ளரியிலும் அதிக நீர்ச்சத்து உள்ளது. இதில் குறைந்த சர்க்கரை உள்ளதால் நீரேற்றம் மற்றும் எடை மேலாண்மைக்கு நல்ல தேர்வு எனலாம். உடல் எடையை குறைக்க நினைப்போர் நிச்சயம் உண்ணலாம். கீராவில் வைட்டமின் சி கொஞ்சம் கூடுதலாக உள்ளது. பீட்டா கரோட்டின் சத்தும் கீராவில் உள்ளது. ககாடி வெள்ளரியில் பொட்டாசியம், மெக்னீசியம் அதிகம் உள்ளன. இரண்டு வெள்ளரிகளும் கோடை வெப்பம் தணிம்ம சிறந்ததாக அமைகிறது. இரண்டுமே ஊட்டச்சத்து மிகுதியாக கொண்டவை. எலும்புகளை வலுப்படுத்த, நீரேற்றம் ஆகிய காரணங்களுக்காக ககாடி உண்ணலாம். சரும ஆரோக்கியம், செரிமானத்திற்கு கீரா என்ற சாதாரண வெள்ளரி நல்ல தேர்வாகும். நீங்கள் விரும்பினால் இரண்டையும் உண்ணலாம்