- Home
- உடல்நலம்
- உணவு
- Chicken Storage Tips: சிக்கனை எத்தனை நாள் பிரிட்ஜில் வைக்கலாம்? 90 சதவீதம் பேருக்கு தெரியாத சீக்ரெட்
Chicken Storage Tips: சிக்கனை எத்தனை நாள் பிரிட்ஜில் வைக்கலாம்? 90 சதவீதம் பேருக்கு தெரியாத சீக்ரெட்
Chicken Storage Tips : சிக்கன் வாங்கிட்டு வந்து அப்படியே பிரிட்ஜில் வைக்கிறீங்களா? சிக்கனை எத்தனை நாள் பிரிட்ஜில் வைக்கலாம், சரியான வெப்பநிலை என்ன, ஃப்ரீசரில் வைத்த சிக்கனை எப்படி சமைக்க வேண்டும் என பலருக்கும் தெரிவதில்லை.

சிக்கன் வாங்கிட்டு வந்து பிரிட்ஜில் வைக்கிறீங்களா?
சிக்கனை வாங்கி அப்படியே பிரிட்ஜில் வைப்பது மட்டும் போதாது. சரியான வெப்பநிலை, பேக்கிங், சுத்தம் ரொம்ப முக்கியம். தப்பாக ஸ்டோர் செய்தால், பிரிட்ஜில் இருந்தாலும் சிக்கன் சீக்கிரம் கெட்டுப்போயிடும். மொத்தமாக சிக்கன் வாங்குபவர்கள் இந்த விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்.
பிரிட்ஜ் வெப்பநிலை எவ்வளவு இருக்கணும்?
பச்சை சிக்கனை வைக்கும் பிரிட்ஜின் வெப்பநிலை 5°C அல்லது அதற்கும் குறைவாக இருக்கணும். முடிஞ்சா பிரிட்ஜ் தெர்மாமீட்டர் வெச்சு செக் பண்ணுங்க. பிரிட்ஜை அடிக்கடி திறந்தாலோ, நிறைய பொருட்களை அடைத்து வைத்தாலோ வெப்பநிலை மாறலாம். சிக்கனை எப்போதுமே பிரிட்ஜின் கீழ் தட்டில் வைங்க. பாக்கெட்டை பிரித்துவிட்டால், காற்று புகாத டப்பாவில் வைப்பது நல்லது.
Chicken vs Fish: சிக்கனா, மீனா? எது உடம்புக்கு ரொம்ப நல்லது? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே.!
சிக்கனை எத்தனை நாள் வைக்கலாம்?
பொதுவாக, சிக்கனை வாங்கிய 1 அல்லது 2 நாட்களுக்குள் சமைத்து விடுவது நல்லது. இது முழு சிக்கன், லெக் பீஸ், விங்ஸ் என எல்லாத்துக்கும் பொருந்தும். அந்த நேரத்துக்குள் சமைக்க முடியலைன்னா, ஃப்ரீசரில் வெச்சிடுங்க. சீல் செய்யப்பட்ட வேக்யூம் பேக் சிக்கன் கொஞ்சம் அதிக நாள் தாங்கும். ஆனால், பாக்கெட்டை பிரித்த பிறகு சீக்கிரம் சமைச்சிடணும்.
மசாலா தடவிய சிக்கன் அதிக நாள் தாங்குமா?
இல்லை. மசாலா தடவி வைத்தால் சிக்கனின் சுவையும் மிருதுத்தன்மையும் கூடும். ஆனால், அது அதிக நாள் கெடாமல் இருக்காது. வீட்டில் மசாலா தடவிய சிக்கனையும் 2 நாட்களுக்குள் சமைப்பதுதான் பாதுகாப்பானது.
சிக்கனை எப்படி பேக் செய்யணும்?
சீல் பிரிக்காத பாக்கெட்டை அப்படியே பிரிட்ஜில் வைக்கலாம். பாக்கெட்டை பிரித்துவிட்டால், காற்று புகாத டப்பா, கிளிங் ஃபிலிம் அல்லது ஜிப்-லாக் கவர் பயன்படுத்துங்க. அதிக நாள் ஃப்ரீசரில் வைக்கணும்னா, சிக்கனை சிறு சிறு பங்குகளாக பிரித்து பேக் செய்து, அதன் மேல் தேதியை எழுதி வைங்க.
ஃப்ரீசரில் வைத்த சிக்கனை எப்படி சமைக்க தயார் செய்வது?
சிக்கனை டீஃப்ராஸ்ட் செய்ய பாதுகாப்பான வழி, முதல் நாள் இரவே அதை ஃப்ரீசரில் இருந்து எடுத்து பிரிட்ஜின் கீழ் தட்டில் வைப்பதுதான். மூடிய டப்பாவில் வைங்க. அவசரமாக சமைக்க வேண்டும் என்றால், சீல் செய்யப்பட்ட கவரில் சிக்கனை வைத்து, குளிர்ந்த தண்ணீரில் போடுங்க. 30 நிமிடங்களுக்கு ஒருமுறை தண்ணீரை மாற்றுங்க. சுடுதண்ணீர் பயன்படுத்தக் கூடாது. மைக்ரோவேவ் ஓவனில் டீஃப்ராஸ்ட் செய்தால், உடனே சமைச்சிடணும். சாதாரண அறை வெப்பநிலையில் சிக்கனை வெளியே வைக்கக் கூடாது.
மற்ற உணவுகளில் பாக்டீரியா பரவாமல் தடுப்பது எப்படி?
பச்சை சிக்கனை சமைத்த உணவுகள் மற்றும் நேரடியாக சாப்பிடும் பொருட்களில் இருந்து தள்ளி வைங்க. கீழ் தட்டில் வைப்பதால், சிக்கனில் இருந்து வடியும் தண்ணீர் மற்ற உணவுகளில் படுவதை தடுக்கலாம். சிக்கன் நறுக்க தனி கட்டிங் போர்டு பயன்படுத்துங்க. அதை சுடுதண்ணீர் மற்றும் சோப்பு போட்டு கழுவுங்க. சிக்கனை தொடுவதற்கு முன்பும் பின்பும் கைகளை நல்லா கழுவணும். காய்கறி, சிக்கன் இரண்டையும் சமைக்கிறீங்கன்னா, முதலில் காய்கறிகளை நறுக்கிவிட்டு, அப்புறம் சிக்கனை எடுங்க.
சிக்கன் கெட்டுப்போனதை எப்படி கண்டுபிடிப்பது?
சமைக்கும் முன் சிக்கனின் வாசனை, நிறம், தன்மையை கவனிங்க. புளிப்பான அல்லது வித்தியாசமான வாசனை வந்தாலோ, சிக்கன் ரொம்ப பிசுபிசுப்பாக இருந்தாலோ சமைக்காதீங்க. சந்தேகம் இருந்தால், அதை தூக்கி எறிவதுதான் பாதுகாப்பானது.
Maharani Chicken: ரெஸ்டாரன்ட் ஸ்டைல் மகாராணி சிக்கன் ரெசிபி - சுவையான, ருசியாக செய்வது எப்படி?

