Banana benefits: வாழைப்பழம் ஒரு வாரம் ஆனாலும் அழுகாமல் ப்ரெஷ்ஷா இருக்க..இந்த சின்ன விஷயத்தை செய்தால் போதும்
bananas: பல மருத்துவ நன்மைகளை கொண்டுள்ள வாழைப்பழத்தை ஒருவாரம் ஆனாலும் அழுகாமல் வைத்திருக்க சில டிப்ஸ் உள்ளது.
பலருக்கு காலை உணவாக வாழைப்பழம் உள்ளது. உடல் எடை குறைக்க நினைக்கும் சிலரும் வாழைப்பழம் எடுத்து கொள்கின்றனர். நம் உடலுக்கு தேவையான சத்துக்கள், வைட்டமின் சி, வைட்டமின் பி6, பல முக்கிய தாதுக்கள், போலேட் ஆகியவை வாழைப்பழத்தில் அளவில்லாமல் கிடைக்கின்றன. இதை தினமும் காலையில் உண்பதால் நமக்கே தெரியாத பல உடல்நலப் பிரச்சனைகள் கூட தீரும்.
வாழைப்பழத்தில் ஆன்டி ஆக்சிடண்டுகள் ரொம்பவே நிரம்பி காணப்படுகிறது. இதயம் சார்ந்த நோய்கள் உள்பட பல நோய்களுக்கு எதிராக போராடும் வாழைப்பழத்தை அழுகாமல் வைக்க சில டிப்ஸை இந்த பதிவில் காணலாம்.
வாழைப்பழத்தை பிரெஷ்ஷாக வைக்க டிப்ஸ்
வாழைப்பழத்தை நாம் குறைந்த விலையில் மொத்தமாக வாங்கிவிடுகிறோம். ஆனால் அதை நீண்ட நாட்களுக்கு ஃப்ரெஷ்ஷாக வைத்திருப்பதை பற்றி நமக்கு தெரிவதில்லை. அதனால் சிலர் ப்ரிட்ஜில் அதை வைக்கிறார்கள். அது தவறு. அது ப்ரிட்ஜில் வைக்க வேண்டிய உணவு பொருள் அல்ல. கோடை காலத்தில் ரொம்ப சீக்கிரமே வாழைப்பழம் அழுகி போய்விடும். சிரமம் பார்க்காமல் சில விஷயத்தை செய்துவிட்டால் அது அழுகாமல் காக்க முடியும்.
நீண்ட நாட்களுக்கு வாழைப்பழத்தை வாடாமல் சுருங்காமல் பிரெஷ்ஷாக வைத்திருக்க அதை சீப்பாக வாங்கி வீட்டில் தொங்கவிடலாம். அதன் தண்டு முனை வாடாமல் இருந்தால் பழம் விரைவில் அழுகாது. ஆனால் எல்லோரும் பெரிதாக வாங்கமாட்டார்கள். சில்லறையாக 5 அல்லது 10 என சில வாழைப்பழங்களை வாங்குபவர்களுக்கும் ஒரு வழி இருக்கிறது.
இதையும் படிங்க: வெயில் காலத்தில் மாவு, தயிர் ரொம்ப நாட்கள் புளிக்காமல் ப்ரெஷ்-ஆ இருக்க..இந்த ஒரு விஷயத்தை செய்யுங்க போதும்..!
வாழைப்பழம் ரொம்ப நாள் அழுகாமல் இருக்க அதனுடைய தண்டு முனைப்பகுதியில் பிளாஸ்டிக் கவர் அல்லது செல்லோ டேப்பை வைத்து சுற்றி மூடி வைக்க வேண்டும். இதை செய்தால் வாழைப்பழம் ரொம்ப நாட்கள் பிரெஷ்ஷாக இருக்குமாம். வைட்டமின் சி மாத்திரையை நீரில் போட்டு அதில் வாழைப்பழத்தை போட்டு வைத்தாலும் ரொம்ப நாள் அழுகாமல் இருக்கும்.
இதையும் படிங்க: தலைமுடி காடு மாதிரி அடர்த்தியா வளர.. வாரம் இருமுறை கிராம்பு.. இப்படி பண்ணுங்க முடி கட்டுக்கடங்காம வளரும்...