MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • வெயில் காலத்தில் மாவு, தயிர் ரொம்ப நாட்கள் புளிக்காமல் ப்ரெஷ்-ஆ இருக்க..இந்த ஒரு விஷயத்தை செய்யுங்க போதும்..!

வெயில் காலத்தில் மாவு, தயிர் ரொம்ப நாட்கள் புளிக்காமல் ப்ரெஷ்-ஆ இருக்க..இந்த ஒரு விஷயத்தை செய்யுங்க போதும்..!

இட்லி மாவு, தயிர் சீக்கிரம் புளிச்சு போகுதா? ஒரு வாரம் வரை புளிக்காமல் இருக்க டிப்ஸ்.. 

2 Min read
Author : maria pani
| Updated : Mar 11 2023, 11:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

கோடைகாலம் வந்துவிட்டது. இந்த நேரத்தில் பலரும் வீட்டு மாவு, தயிர் எல்லாம் புளித்து போகுது என புலம்புவார்கள். அதிக வெப்பத்தின் காரணமாக இப்படி சீக்கிரம் புளித்து பொங்கி வாய்க்கு ருசிக்காமல் போகும். இந்த மாதிரி வீணாகாமல் எப்படி ரொம்ப நாள் அரிசி மாவையும், தயிரையும் பயன்படுத்தலாம் என்பதை இங்கு காணலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இட்லி மாவு ரொம்ப நாள் புளிக்காமல் இருக்க வேண்டுமென்றால் மாவு அரைக்கும்போதே கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இட்லியோ தோசையோ அதற்கு மாவு அரைக்கும்போது முதலில் மொத்தமாக ஒரு பாத்திரத்தில் எடுத்து ப்ரிட்ஜில் பாதுகாக்க வேண்டும். மொத்தமாக உப்பு போடக் கூடாது. தேவைப்படும் மாவை கலக்கும்போது மட்டும் தான் உப்பு போடவேண்டும்.

அடிக்குற வெயிலில் மொத்தமாக உப்பு போட்டால் மாவு சீக்கிரம் புளித்து போகும். இது தான் எங்களுக்கே தெரியும் என்கிறீர்களா? அதுமட்டுமில்லை, ப்ரிட்ஜில் வைக்கும் மாவில் வெற்றிலையை காம்பு நீக்காமல் போட்டு வையுங்கள். அப்படி செய்தால் மாவு சீக்கிரம் புளிக்காது. குறிப்பாக வெற்றிலையின் காம்பு மாவினுள் அழுத்தி இருக்க வேண்டும். 

36

வெற்றிலை மட்டுமில்லை மாவு புளிக்காமல் இருக்க கற்பூரவல்லி எனும் ஓமவல்லி செடியும் நமக்கு உதவும். ஓமவல்லியில் மருத்துவகுணங்கள் அதிகம் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். ஒமவல்லி செடியில் இருந்து 4 அல்லது 5 இலைகளை பறித்து அதனை மாவுக்குள் போட்டு வையுங்கள். இதில் இருக்கும் காரத்தன்மை மாவை புளிக்கவைக்காமல் இருக்குமாம். என்ன யோசனை பண்றீங்க.. கற்பூரவள்ளியின் வாசனை மாவில் வராது. உடம்புக்கும் நல்லது. 

46

தயிர் வெயில் நேரத்தில் நம் உடலுக்கு உற்ற நண்பன். அதனை அதிகம் நாட்கள் கெடாமல் வைத்திருக்க எளிய டிப்ஸ் இருக்கு. தயிரை உறையூற்றி வைத்துள்ள 2 நாட்களுக்குள் புளிக்கும் தன்மை கொண்டது. தயிரை பொறுத்தவரை கெட்டியாக புளிப்பு இல்லாமல் இருந்தால் ஒரு சட்டி சோறு கூட சாப்பிடலாம் என்பார்கள் உழைப்பாளிகள்.  

56

இங்கு சொல்லப்பட்டுள்ள முறையில் பாலை உறையுட்ட முதலாவதாக கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி தயிரை சேர்க்க வேண்டும். அதனுடன் ஒரு டம்ளர் மிதமான சூட்டில் உள்ள பாலை ஊற்றி டீ ஆற்றுவது மாதிரி அந்த பாலை ஆற்றிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் வீட்டில் உள்ள பீங்கானால் செய்யப்பட்ட ஜாடி அல்லது மண்பாண்டம் இரண்டில் ஏதாவது ஒன்றில் இதனை ஊற்றி மூடி வைத்துவிட வேண்டும் இப்படி செய்தால் தயிர் கெட்டியாக ஆவதுடன் ரொம்ப நாள் புளிக்காமல் கடையில் கிடைக்கும் தயிர் போலவே ருசியாக இருக்கும். 

இதையும் படிங்க: வீட்டில் பல்லி தொல்லை நிரந்தரமா போகனுமா? ஒரு எலுமிச்சை போதும்.. பல்லியை ஓட ஓட விரட்டி அடிக்கலாம்

66

பாலை காய்ச்சி வைத்திருக்கும் அதே பாத்திரத்தில் தயிருக்காக உறையூற்றும் தவறை ஒருபோதும் செய்யாதீர்கள். பால் காய்ச்சிய பின்னர் அதனை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி அதன் பின்னர்தான் உறையூற்ற எடுக்க வேண்டும். இந்த டிப்ஸ் உங்களுக்கு வெயில் காலத்தில் மாவு மற்றும் தயிர் சீக்கிரம் புளிக்காமல் இருக்க உதவும். 

இதையும் படிங்க: உங்க குலதெய்வ கோயிலிலிருந்து இந்த 1 பொருளை கொண்டு வந்தால் போதும்.. கஷ்டங்கள் இருந்த இடம் தெரியாம காணம போகும்

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MP
maria pani
Latest Videos
Recommended Stories
Recommended image1
Baba Vanga: 2028 முதல் 5079 வரை என்ன நடக்கும்? பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் பகீர் கணிப்புகள்!
Recommended image2
Ceiling Decor: உங்கள் வீட்டை 5 ஸ்டார் ஹோட்டல் போல மாற்றுங்கள்.! இந்த 10 சீலிங் டிசைன்களை ட்ரை பண்ணி பாருங்க.!
Recommended image3
மாடிப்படிக்கு கீழ் காலியாக இருக்கும் இடத்தில் இவ்வளவு பண்ணலாமா? இதோ 7 அசத்தல் ஐடியாக்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved