தினமும் ஒரு வேளை கிரீன் டீ குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அதற்கான காரணங்களை இங்கே பார்க்கலாம்.
கிரீன் டீயில் கேட்டசின்கள் (Catechins), எல்-தியானைன் (L-theanine) போன்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுகின்றன.
கிரீன் டீயை தொடர்ந்து குடித்து வந்தால், கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் எல்.டி.எல் (LDL) அளவைக் குறைக்கும். மேலும், ரத்த அழுத்தத்தையும் சீராக வைத்திருக்க உதவும்.
இதில் உள்ள காஃபின் (Caffeine) மற்றும் அமினோ ஆசிட், மூளையின் செயல்பாட்டைப் பாதுகாக்கிறது. இதனால், வயது அதிகரிக்கும்போது ஏற்படும் டிமென்ஷியா போன்ற மறதி நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
உடல் எடையைக் குறைப்பதில் கிரீன் டீ ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. முறையான உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியுடன் சேர்த்து கிரீன் டீ குடிக்கும்போதுதான் பலன்களை பெற முடியும்.
கிரீன் டீ, உடலின் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. இதன் மூலம், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.
இதில் பாலிஃபீனால்கள் (Polyphenols) அதிகமாக இருப்பதால், உடலில் ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் பாதிப்பு மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. இது புற்றுநோய்கள் வரும் அபாயத்தைக் குறைக்கக்கூடும்.
கிரீன் டீயில் உள்ள EGCG மற்றும் காஃபின் (Caffeine) போன்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள், முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்தி முடி வளர்ச்சியைத் தூண்டுகின்றன.
சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தி, சருமத்திற்குப் பொலிவையும் புத்துணர்ச்சியையும் கொடுக்க கிரீன் டீ உதவுகிறது.
கிரீன் டீ குடிப்பதற்குச் சரியான நேரம், காலை உணவிற்குப் பிறகு 1-2 மணி நேரம் கழித்து அல்லது மதிய உணவிற்குப் பிறகுதான்.
கிரீன் டீயில் காஃபின் இருப்பதால், அது உங்கள் தூக்கத்தைப் பாதிக்கக்கூடும். எனவே, இரவு தூங்குவதற்கு 2-3 மணி நேரத்திற்கு முன்பே கிரீன் டீ குடிப்பதை நிறுத்திவிடுவது நல்லது.
கிரீன் டீயில் உள்ள டானின்கள் (Tannins), உணவில் இருந்து இரும்புச்சத்தை (Iron) உடல் உறிஞ்சுவதைத் தடுக்கலாம். அதனால், சாப்பிட்ட உடனேயே கிரீன் டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.