வீட்டில் பல்லி தொல்லை நிரந்தரமா போகனுமா? ஒரு எலுமிச்சை போதும்.. பல்லியை ஓட ஓட விரட்டி அடிக்கலாம்
பல்லிகளை வீட்டில் இருந்து வெளியேற்ற சில எளிய டிப்ஸ்களை இங்கு காணலாம்.
பல்லியை கண்டால் அருவருப்பு கொள்பவர்கள் அல்லது அதைக் கண்டு பயப்படுபவர்கள் தான் அதிகம். சமையலறை, வீட்டின் சுவர்களில் ஊர்ந்து செல்லும் பல்லிகள் நமக்கு எரிச்சலை உண்டாக்கும். அதை சில எளிய முறைகளால் விரட்டலாம்.
சமையலறை, வீட்டின் ஜன்னல், சுவர், மூலைகளில் பல்லிகள் அதிகம் தெரியும். அந்த இடங்களைக் குறிக்கவும். அங்கு வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை வெட்டி வைக்கவும். பல்லிக்கு அவற்றின் வாசனையே பிடிக்காது. அதனால் அங்கு வராது.
முட்டை ஆம்லெட் தயாரிக்கும் போது, அந்த ஓடுகளை நுனியில் இருந்து உடையுங்கள். இந்த முட்டை ஓடுகளை பல்லி நடமாடும் இடங்களில் தொங்கவிடவும். முட்டை ஓட்டின் வாசனை பிடிக்காமல் பல்லிகள் அந்த இடத்தை விட்டுச் செல்கின்றன.
ஒரு மூடி அளவு டெட்டாயில், அரை மூடி அளவில் எலுமிச்சை சாறு எடுத்து கொள்ளுங்கள். இவற்றை கலந்து கொள்ளுங்கள். நான்கு பூண்டு பல், பாதி வெங்காயத்தை நன்கு இடித்து வைத்து ஒரு துணியால் பிழிந்து சாறு எடுங்கள். புதினா இருந்தால் அந்த இலைகளையும் சேர்க்கலாம்.
இந்த சாறும், டெட்டாயில் எலுமிச்சை கலவையும் ஒன்றாக சேர்த்து ஒரு பாட்டிலில் ஊற்றி பல்லி இருக்கும் இடத்தில் ஸ்ப்ரே செய்யலாம். அல்லது டிஸ்யூ பேப்பரில் இந்த கலவையை தொட்டு பல்லி இருக்கும் இடத்தில் வைக்கலாம். பல்லி தொல்லை நீங்கும். வாரம் இருமுறை செய்யலாம். இதனால் கரப்பான் பூச்சி கூட ஒழிந்துவிடும்.
வீட்டிலேயே கருப்பு மிளகு ஸ்ப்ரே தயார் செய்யலாம் அல்லது கடைகளில் வாங்கலாம். இந்த ஸ்பேரே பல்லிகள் மீது அடித்தால் அவை அசையாது. தொல்லையும் குறையும்.
உங்கள் வீட்டில் ஏசி இருந்தால், பல்லியை விரட்ட ஏர் கண்டிஷனரின் வெப்பநிலையைக் குறைத்துவிடுங்கள். குளிர்ச்சியான சூழலை பல்லிகள் விரும்பாததால், அங்கிருந்து போய்விடும்.