MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • நாளை லஞ்சுக்கு செட்டிநாடு ஸ்டைலில் பருப்பு உருண்டை செய்து பாருங்க!

நாளை லஞ்சுக்கு செட்டிநாடு ஸ்டைலில் பருப்பு உருண்டை செய்து பாருங்க!

இன்று நாம் காரைக்குடி செட்டிநாடு ஸ்டைலில் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

2 Min read
Author : Dinesh TG
Published : Mar 03 2023, 07:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

தமிழ்நாட்டில் உணவுக்கு புகழ் பெற்ற பல ஊர்கள் இருந்தாலும் காரைக்குடி எப்போதும் முதலிடத்தில் இருக்கும். காரைக்குடி சமையல் என்றாலே பலரும் அதனை ஆர்வமாக சுவைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் இன்று நாம் காரைக்குடி செட்டிநாடு ஸ்டைலில் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

குழம்பிற்கு:

சின்ன வெங்காயம் – 15
தக்காளி – 1
பூண்டு – 5 பற்கள்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
மல்லி தூள் – 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
கடுகு-1/4 ஸ்பூன்
சீரகம் -1/2 ஸ்பூன்
புளிக்கரைசல்-தேவையான அளவு

உருண்டை செய்வதற்கு:

சின்ன வெங்காயம் – 10 – 12
கடலை பருப்பு – 1/4 கப்
துவரம் பருப்பு – 3/4 கப்
வர மிளகாய் – 3
சோம்பு – 1 ஸ்பூன்
மல்லித்தழை - கையளவு

இன்று டின்னருக்கு அட்டகாசமான நீலகிரி சிக்கன் செய்து அசத்துங்க!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கடலைப்பருப்பு மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றை போட்டு தண்ணீர் ஊற்றி சுமார் 2 மணி நீரவ் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 2 மணி நேரத்திற்கு பிறகு தண்ணீர் இல்லாமல் வடிகட்டி அதனை மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் சோம்பு,வர மிளகாய் ஆகியவை சேர்த்து சாஃப்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்

.சின்ன வெங்காயத்தை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். தக்காளி மற்றும் மல்லித்தழையை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்தேங்காயை துருவி அதனை மிக்சி ஜாரில் சேர்த்து தேங்காய் பால்  எடுத்துக் கொள்ள வேண்டும். புளியை தண்ணீர் ஊற்றி ஊற வைத்து புளிக்கரைசல் எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த மாவினை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதில் பொடியாக அரிந்து 3வைத்துள்ள வெங்காயம் ,மல்லித்தழை ஆகியவை சேர்த்து உப்பு தூவி நன்றாக பிசைந்துக் கொண்டு சிறிது மாவினை (ஒரு உருண்டை அளவு மாவினை) தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

33

இப்போது அரைத்துள்ள மாவினை ஒரே அளவிலான உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து சுமார் 10 நிமிடங்கள் வரை (இட்லி பாத்திரத்தில் வைத்து) வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடான பின், அதில் கடுகு, சோம்பு , பூண்டு மற்றும் அரிந்து வைத்துள்ள சின்ன வெங்காயம் ஆகியவை சேர்த்து வதக்கி விட வேண்டும்.பின் அதில் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் ஆகியவை சேர்த்து வதக்கி விட்டு பின் அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள தக்காளியைச் சேர்த்து,தக்காளி மசியும் வரை வதக்கி விட வேண்டும்.

தக்காளி நன்றாக வதங்கிய பிறகு, புளிக்கரைசல் சேர்த்து அரைத்து வைத்துள்ள மாவினை சிறிது சேர்த்து நன்கு கலந்து கொண்டு அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.குழம்பு கொதிக்கும் போது தேங்காய் பால் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

பின் குழம்பு சற்று கெட்டியான பிறகு, அதில் வேக வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடங்கள் வைக்க வேண்டும். இறுதியாக அடுப்பில் இருந்து கடாயை இறக்கி பொடியாக அரிந்து வைத்துள்ள மல்லித்தழையை தூவினால் தூவினால் சூப்பரான செட்டிநாடு பருப்பு உருண்டை குழம்பு ரெடி!

About the Author

DT
Dinesh TG
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Milk Peda : பால் கோவா கஷ்டப்பட்டு கிண்ட வேண்டாம்! பால் பவுடரில் ஈஸியா பேடா செய்யலாம்!
Recommended image2
Ladies Finger with Rice: வெண்டைக்காயை கொத்தாக கட்டி சாதத்தோடு வேகவைப்பது ஏன்? இந்த வித்தியாசமான முறையின் ரகசியம் இதுதான்!
Recommended image3
Kulukku Roti: குலுக்கு ரொட்டி..கேழ்வரகு மாவில் இப்படி ஒரு இனிப்பா? கருப்பட்டி, தேங்காய்ப்பால் சேர்த்து செம டேஸ்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved