இன்று டின்னருக்கு அட்டகாசமான நீலகிரி சிக்கன் செய்து அசத்துங்க!
சப்பாத்தி, நாண்,புல்கா,தோசை, சாதம் என அனைத்திற்கும் சூப்பரான சைட் டிஷ்ஷாக இருக்கும் இந்த நாவூறும் நீலகிரி சிக்கன் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்
அசைவ பிரியர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த உனவு வகை எனில் அது கண்டிப்பாக சிக்கன் தான். சிக்கன் வைத்து பல்வேறு விதமான ரெசிபிக்கள் செய்து சாப்பிட்டு இருப்பேர்கள். சிக்கன் கிரேவி,சிக்கன் குருமா, சிக்கன் குழம்பு என்று செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான சுவையில் அட்டகாசமாக இருக்கும்.
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான சமையல் முறையை பின்பற்றுவார்கள். செட்டிநாடு,கொங்கு நாடு, மதுரை என்று ஒவ்வொரு ஊருக்கும் பல வகையான உணவுகள் பிரசித்தி பெற்ற இருக்கும். அந்த வகையில் இன்று நாம் நீலகிரி ஸ்டைலில் சிக்கன் ரெசிபியை செய்ய உள்ளோம். இது நாம் வழக்கமாக செய்து சாப்பிடும் சிக்கன் கிரேவிகளில் இருந்து சற்று வித்தியாசமாக இருக்கும். இதன் சுவைக்கு சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எத்தனை முறை செய்து கொடுத்தாலும் சலிக்காமல் சாப்பிடுவார்கள்.
சப்பாத்தி, நாண்,புல்கா,தோசை, சாதம் என அனைத்திற்கும் சூப்பரான சைட் டிஷ்ஷாக இருக்கும் இந்த நாவூறும் நீலகிரி சிக்கன் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன்-1/2 கிலோ
வெங்காயம் -1
பச்சை மிளகாய் -2
இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்
பூண்டு - 5 பற்கள்
மல்லித்தூள்- 1 ஸ்பூன்
சோம்புத்தூள்- 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்
மல்லித்தழை - கையளவு
புதினா - கையளவு
உப்பு- தேவையான அளவு
உடல் அசதியை போக்கும் ஆட்டு நல்லி எலும்பு சூப்!
செய்முறை :
முதலில் சிக்கனை சுத்தம் செய்து அலசி வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் மற்றும் மல்லித்தழையை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் அலசிய சிக்கனை போட்டு அதில் மஞ்சள் தூள், சோம்புத்தூள், மல்லித்தூள் ,இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக பிரட்டிக் கொண்டு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மிக்சி ஜாரில் பூண்டு, பச்சை மிளகாய், சோம்பு, புதினா, சிறிது மல்லித்தழை ஆகியவை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி ,எண்ணெய் சூடான பின் கிராம்பு, பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்துக் கொண்டு அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து ,வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு மாறும் வரை வதக்கி விட வேண்டும்.
இப்போது அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். பின் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து பிரட்டி எடுத்து உப்பு சேர்ப்பித்து சேடித்து தண்ணீர் ஊற்றி ஒரு தட்டு போட்டு மூடி வைத்து சிக்கனை சுமார் 20 நிமிடங்கள் வரை குறைந்த தீயில் வைத்து வேக வைக்க வேண்டும். பின்னர் தட்டு எடுத்து சிக்கன் வெந்துள்ளதை உறுதி செய்து அடுப்பில் இருந்து இறக்கி விட்டு மல்லித்தழையை தூவி பரிமாறினால் சூப்பரான சுவையில் நீலகிரி சிக்கன் கிரேவி ரெடி!