MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Maggi Masala : டேஸ்டியான மேகி மசாலாவை வீட்லயே ரெடி பண்ணலாம்! 10 நிமிஷம் போதும்!

Maggi Masala : டேஸ்டியான மேகி மசாலாவை வீட்லயே ரெடி பண்ணலாம்! 10 நிமிஷம் போதும்!

Maggi Masala : எல்லாருக்கும் பிடித்த மேகி மசாலாவை, வெறும் 10 நிமிடத்தில் மிக எளிதாக வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்! மேகிக்கு மட்டுமின்றி, நூடுல்ஸ், காய்கறி வறுவல் உள்ளிட்ட பல உணவுகளுக்கும் இந்த மசாலாவை பயன்படுத்தலாம்.

2 Min read
Author : Arun Mozhi Varman
Published : Sep 29 2026, 09:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
வீட்டிலேயே மேகி மசாலா செய்வது எப்படி?
Image Credit : Chatgpt

வீட்டிலேயே மேகி மசாலா செய்வது எப்படி?

பசி எடுத்தவுடன் சட்டென நினைவுக்கு வருவது மேகி நூடுல்ஸ் தான்! சமைக்கப் போதுமான நேரம் இல்லாத அவசர காலங்களில் இது நமக்குக் பெரிதும் கைகொடுக்கிறது.

இந்த மேகியின் சூப்பர் டேஸ்டுக்கும் தனித்துவமான மணத்திற்கும் முக்கியக் காரணம் அதனுடன் கொடுக்கப்படும் மசாலா பாக்கெட்தான். இந்தச் சுவையான மசாலாவை மேகிக்கு மட்டுமின்றி, நமது அன்றாட மற்ற சமையல் வகைகளிலும் கூட சுவை கூட்டப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கடைசியில் பாக்கெட்டுகளில் வாங்குவதைத் தவிர்த்து, மிகக் குறைந்தே நிமிடங்களில், வெறும் 10 நிமிடத்தில் வீட்டிலேயே சுலபமாக இந்த மேகி மசாலாவை எப்படித் தயாரிப்பது என்று கீழே விரிவாகப் பார்க்கலாம்.

இதையும் படிங்க : Garlic : தலையணைக்கு அடியில் பூண்டு வைப்பதன் ரகசியம் தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
மேகி மசாலா ரெசிபி - தேவையான பொருட்கள்
Image Credit : our own

மேகி மசாலா ரெசிபி - தேவையான பொருட்கள்

கோடைக் காலத்தில் நீண்ட நேரம் சமையலறையில் நிற்பது யாருக்கும் எளிதான காரியமாக இருக்காது. அதைக் கருத்தில் கொண்டு, இந்த மசாலாவை மிகக் குறுகிய நேரத்தில் சுலபமாகத் தயாரித்து விடலாம்.

தேவையான பொருட்கள்:

  • மல்லி (தனியா)
  • சீரகம்
  • சோம்பு
  • கிராம்பு
  • பட்டை
  • வெங்காயப் பொடி
  • பூண்டுப் பொடி
  • மாங்காய் பொடி (ஆம்சூர் தூள்)
  • சோள மாவு (கார்ன்ஃப்ளார்)
  • உப்பு
  • சர்க்கரை

இந்த எளிய பொருட்கள் அனைத்தையும் கையில் வைத்துக் கொண்டால் போதும்; அருமையான மேகி மசாலாவை அசால்ட்டாக வீட்டிலேயே தயார் செய்துவிடலாம்!

இதையும் படிங்க : Flipkart : ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை தள்ளுபடி! இந்த பொருட்களுக்கு பண்டிகை காலத்தில் செம ஆஃபர்!

33
செய்முறை விளக்கம்
Image Credit : our own

செய்முறை விளக்கம்

வறுக்கும் முறை

முதலில் மல்லி, சீரகம், சோம்பு, கிராம்பு மற்றும் பட்டை ஆகியவற்றை வாணலியில் (பேன்) சேர்த்து மிதமான தீயில் லேசாக வறுத்துக் கொள்ளவும். அப்போது மசாலா கருகிவிடாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

முதல் முறை அரைத்தல்

வறுத்த பொருட்களை நன்றாக ஆறவைத்த பின், மிக்ஸியில் சேர்த்து நைசாக (மென்மையாக) அரைத்துக் கொள்ளவும்.

மசாலா கலவை

இப்போது இதனுடன் வெங்காயப் பொடி, பூண்டுப் பொடி, ஆம்சூர் பொடி, சோள மாவு, உப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்து மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். அவ்வளவுதான், சுவையான மேகி மசாலா தயார்!

சேமிப்பு மற்றும் பயன்கள்

  • இந்த மசாலாவை ஒரு காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலில் போட்டுப் பாதுகாத்தால், பல மாதங்கள் வரை கெடாமல் பயன்படுத்தி வரலாம்.
  • கடைகளில் வ வாங்குவதை விட இது மிகவும் சுவையானது மட்டுமல்லாமல், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
  • காய்கறி அல்லது உருளைக்கிழங்கு வறுவல் (ஃப்ரை) செய்யும்போது இந்த மசாலாவைச் சிறிதளவு தூவி விட்டால், அதன் சுவை அட்டகாசமாக இருக்கும்!

ஒருமுறை உங்கள் வீட்டிலும் இதைத் தயாரித்து முயற்சித்துப் பாருங்கள்!

இதையும் படிங்க : Egg Puff : குக்கர்ல முட்டை பப்ஸ் செய்வது எப்படி? பேக்கரி டேஸ்ட்ல வீட்டிலேயே செய்யலாம்!

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உணவு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
karuveppilai kuzhambu: மணமணக்கும் கருவேப்பிலை குழம்பு..ஒரு முறை செய்து பாருங்க!
Recommended image2
Onion: வெங்காயத்தில் கருப்பு பூஞ்சை..சாப்பிடலாமா? தூக்கி எறியணுமா? அதிர்ச்சி தகவலை தெரிஞ்சுக்கோங்க!
Recommended image3
Egg Puff : குக்கர்ல முட்டை பப்ஸ் செய்வது எப்படி? பேக்கரி டேஸ்ட்ல வீட்டிலேயே செய்யலாம்!
Related Stories
Recommended image1
Egg Puff : குக்கர்ல முட்டை பப்ஸ் செய்வது எப்படி? பேக்கரி டேஸ்ட்ல வீட்டிலேயே செய்யலாம்!
Recommended image2
Cake : ஓவன் தேவையில்லை! இட்லிப் பானையை வைத்து சாஃப்ட்டான கேக் செய்வது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved