- Home
- உடல்நலம்
- உணவு
- Chennakunni Podi : ஒரு ஸ்பூன் சென்னாகுன்னி பொடி.. இட்லி, தோசை முதல் சாதம் வரை சுவை அசத்தும்!
Chennakunni Podi : ஒரு ஸ்பூன் சென்னாகுன்னி பொடி.. இட்லி, தோசை முதல் சாதம் வரை சுவை அசத்தும்!
Chennakunni Podi: சென்னாகுன்னி பொடி வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி? சென்னாகுன்னி, காய்ந்த மிளகாய், தனியா, சீரகம் உள்ளிட்ட பொருட்களுடன் மணமும் சுவையும் நிறைந்த பொடியை தயாரிக்கும் முறையை தெரிந்து கொள்ளுங்கள்.

சென்னாகுன்னி பொடி
சாதத்திற்கு ஒரு ஸ்பூன் போதும், மணமும் சுவையும் அசத்தும். கடல் உணவின் தனித்துவமான சுவை பிடித்தவர்களுக்கு சென்னாகுன்னி பொடி ஒரு சூப்பர் சைடிஷ். சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றி இந்தப் பொடியைச் சேர்த்துப் பிசைந்தும் சாப்பிடலாம். இட்லி, தோசை, தயிர் சாதம் என பலவற்றுக்கும் தொட்டுக்கொள்ளலாம். வீட்டிலேயே எளிமையாகத் தயாய் செய்யும் இந்த முறையை தெரிந்துக்கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
சென்னாகுன்னி (பொடி இறால்) - 1 கப்
காய்ந்த மிளகாய் - 10 முதல் 12
தனியா - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
பெருங்காயம் - 1\4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
சென்னாகுன்னியை வறுக்கவும்
முதலில் சென்னாகுன்னியை நன்றாகப் பார்த்து கல், தூசி போன்ற தேவையற்ற பொருட்கள் இருந்தால் நீக்கி சுத்தம் செய்யவும். ஈரப்பதம் இருந்தால் வெயிலில் சிறிது நேரம் உலர்த்திக் கொள்ளலாம்.
வாணலியை சூடாக்கி, எண்ணெய் இல்லாமல் சென்னாகுன்னியைப் போட்டு மிதமான தீயில் நன்றாக வறுக்கவும். சென்னாகுன்னியின் ஈரப்பதம் நீங்கி, நல்ல வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். கருகிவிடாமல் தொடர்ந்து கிளறவும். பின்னர் தனியாக எடுத்து ஆறவிடவும்.
மசாலாக்களை வறுக்கவும்
- அதே வாணலியில் தனியா, சீரகம், மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக அல்லது சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.
- நல்ல மணம் வந்ததும் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து லேசாக வறுக்கவும்.
- கடைசியாக பெருங்காயம் சேர்த்து அடுப்பை அணைக்கவும். அனைத்தையும் முழுமையாக ஆறவிடவும்.
பொடியாக அரைக்கவும்
- முதலில் வறுத்த மசாலாக்களை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
- பின்னர் வறுத்த சென்னாகுன்னி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் அரைக்கவும்.
- பொடியாக அரைக்கலாம் அல்லது சிறிது கொரகொரப்பாக வைத்தால் சாப்பிடும்போது நல்ல texture கிடைக்கும்.
- தயாரான சென்னாகுன்னி பொடி முழுமையாக ஆறிய பிறகு, ஈரப்பதம் இல்லாத காற்றுப்புகாத டப்பாவில் சேமிக்கவும்.
- எப்போதும் உலர்ந்த கரண்டியைப் பயன்படுத்தி எடுக்கவும்.
எப்படி சாப்பிடலாம்?
சூடான சாதத்தில் 1 ஸ்பூன் சென்னாகுன்னி பொடி, நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு பொடியாகவும் பயன்படுத்தலாம். சாதம், தயிர் சாதம் போன்றவற்றுக்கும் இது நல்ல சைட் டிஷாக இருக்கும்.
சுவையான டிப்ஸ்: சென்னாகுன்னியை நன்றாக வறுப்பது பொடியின் மணத்தையும் சுவையையும் அதிகரிக்கும். ஆனால் அதிகமாக வறுத்தால் கசப்பு ஏற்படலாம் என்பதால் மிதமான தீயில் வறுப்பது முக்கியம்.

