MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Murungai Thandu Rasam: காரசாரமான முருங்கை இலைத் தண்டு மிளகு ரசம்..சூடான சாதத்துக்கு செம காம்பினேஷன்!

Murungai Thandu Rasam: காரசாரமான முருங்கை இலைத் தண்டு மிளகு ரசம்..சூடான சாதத்துக்கு செம காம்பினேஷன்!

Murungai Thandu Rasam: முருங்கை இலைகளைப் பறித்த பிறகு மீதமாகும் மென்மையான தண்டுகளை இனி வீணாக்க வேண்டாம். மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து மணமணக்கும் முருங்கை இலைத் தண்டு மிளகு ரசத்தை வீட்டிலேயே எளிதாக செய்யலாம். ரசம் தயாரிக்கும் குறிப்புகள் இதோ.

2 Min read
Author : Vishnupriya
Published : Oct 06 2026, 08:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
முருங்கை இலைத் தண்டு ரசம்
Image Credit : Pinterest

முருங்கை இலைத் தண்டு ரசம்

முருங்கைக்காய் சாப்பிட்டிருக்கோம், முருங்கை இலை சாப்பிட்டிருக்கோம். ஆனால் முருங்கை இலைத் தண்டை வைத்து சமைக்கலாமா? என்று பலருக்கும் சந்தேகம் இருக்கும். இலைகளைப் பறித்த பிறகு மீதமாகும் மென்மையான முருங்கைத் தண்டுகளை வீணாக்காமல், சுவையான முருங்கை இலைத் தண்டு மிளகு ரசம் செய்து பாருங்க.

மிளகு, சீரகம், பூண்டு, புளி ஆகியவற்றின் சுவையுடன் இந்த ரசம் சாதத்துக்கு மட்டுமல்லாமல், சூடாகவும் அருந்தலாம். வீட்டில் கிடைக்கும் பொருட்களிலேயே எளிதாக செய்யக்கூடிய இந்த பாரம்பரிய ரசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
முருங்கை இலைத் தண்டு மிளகு ரசம்
Image Credit : Pinterest

முருங்கை இலைத் தண்டு மிளகு ரசம்

தேவையான பொருட்கள்

  • முருங்கை இலைத் தண்டு - 1 கப்
  • தண்ணீர் - 2 1\2 முதல் 3 கப்
  • மிளகு - 1 டீஸ்பூன்
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • தனியா - 1\2 டீஸ்பூன்
  • புளி - சிறிய எலுமிச்சை அளவு
  • தக்காளி - 1
  • பூண்டு - 4 முதல் 5 பல்
  • மஞ்சள் தூள் - 1\4 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • பெருங்காயத்தூள் - சிறிதளவு
  • கொத்தமல்லித்தழை - சிறிதளவு

தாளிக்க

  • எண்ணெய் அல்லது நெய் - 1 டீஸ்பூன்
  • கடுகு - 1\2 டீஸ்பூன்
  • சீரகம் - 1\2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • காய்ந்த மிளகாய் - 1
36
செய்வது எப்படி?
Image Credit : Gemini Ai

செய்வது எப்படி?

முருங்கைத் தண்டை தயார் செய்யவும்

  • முருங்கை இலைகளிலிருந்து கிடைக்கும் மென்மையான தண்டுகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். நன்றாகக் கழுவிய பிறகு சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
  • மிகவும் தடிமனாகவும், கடினமாகவும் இருக்கும் மரத்தன்மை கொண்ட தண்டுகளைத் தவிர்ப்பது நல்லது.
  • ஒரு பாத்திரத்தில் நறுக்கிய முருங்கைத் தண்டுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து, மிதமான தீயில் நன்றாக வேகவைக்கவும்.
  • தண்டு ஓரளவு மென்மையாகும் வரை வேகவைத்தால் போதும். அதிகமாக வேகவைத்து குழைய விட வேண்டாம்.
46
மிளகு ரசப் பொடி தயாரிக்கவும்
Image Credit : Gemini Ai

மிளகு ரசப் பொடி தயாரிக்கவும்

  • ஒரு சிறிய வாணலியில் மிளகு, சீரகம், தனியா, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை எண்ணெய் சேர்க்காமல் லேசாக வறுக்கவும்.
  • நறுமணம் வந்ததும் அடுப்பை அணைத்து, அவற்றை நன்றாக ஆறவிடவும். பின்னர் வறுத்த பொருட்களை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • புளியை வெந்நீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
  • இதில் நறுக்கிய தக்காளி, நசுக்கிய பூண்டு, உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
56
மிதமான தீயில் கொதிக்க விடவும்
Image Credit : Gemini Ai

மிதமான தீயில் கொதிக்க விடவும்

  • இந்த புளிக்கரைசலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும்.
  • பச்சை புளி வாசனை குறைந்து தக்காளி நன்றாக வெந்ததும், வேகவைத்த முருங்கைத் தண்டை சேர்க்கவும்.
  • தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ரசம் பதத்திற்கு கொண்டு வரவும்.
  • இப்போது அரைத்து வைத்துள்ள மிளகு ரசப் பொடியை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
66
மணமணக்கும் முருங்கை இலைத் தண்டு மிளகு ரசம் தயார்
Image Credit : Gemini Ai

மணமணக்கும் முருங்கை இலைத் தண்டு மிளகு ரசம் தயார்

  • ரசம் நன்றாக நுரை பொங்கி மேலே வரத் தொடங்கியதும், அதிக நேரம் கொதிக்கவிடாமல் உடனடியாக அடுப்பை அணைக்கவும்.
  • சிறிய வாணலியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • இதை ரசத்தில் ஊற்றி சிறிதளவு பெருங்காயத்தூள் மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்தால் மணமணக்கும் முருங்கை இலைத் தண்டு மிளகு ரசம் தயார்.

எப்படி சாப்பிடலாம்?

சூடான சாதத்தில் இந்த ரசத்தை ஊற்றி சிறிது நெய் சேர்த்து சாப்பிடலாம். அப்பளம், உருளைக்கிழங்கு வறுவல், பருப்பு உசிலி போன்றவற்றுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்.

குறிப்பு: முருங்கைத் தண்டில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், மிகவும் கடினமான தண்டுகளைப் பயன்படுத்தாமல் மென்மையான பகுதிகளை மட்டும் தேர்வு செய்வது நல்லது.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உணவு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரசம் சாதத்திற்கு அல்டிமேட் சைடிஷ்... மசாலா உதிராமல் நாவில் கரையும் மொறுமொறு இறால் தவா ஃப்ரை; சட்டுபுட்டுனு செய்வது எப்படி?
Recommended image2
Ashoka Halwa : நாக்குல பட்டா கரைஞ்சுடும்! திருவையாறு ஸ்பெஷல் அசோகா அல்வா செய்வது எப்படி?
Recommended image3
Kulfi : கடையில வாங்க வேண்டாம்! டேஸ்டியான 5 குல்ஃபி ரெசிப்பிகள்.. வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்!
Related Stories
Recommended image1
Murungakkai Rasam: மணக்க மணக்க முருங்கைக்காய் ரசம்..சூடான சாதத்துக்கு செம காம்பினேஷன்!
Recommended image2
kollu Rasam: கொள்ளு ரசம் இப்படி செஞ்சு பாருங்க! மணமும் சுவையும் அசத்தும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved