சிக்கன் தந்தூரி சுவையை மிஞ்சும் காலிஃபிளவர் தந்தூரி! நீங்களும் இன்றே செய்து பாருங்க!
சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடும் காலிஃபிளவர் தந்தூரி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
காலிஃபிளவர் வைத்து பல்வேறு விதமான ரெசிபிக்களை செய்து சாப்பிட்டு இருப்போம். காலிஃபிளவர் பஜ்ஜி, காலிஃபிளவர் 65, காலிஃபிளவர் மஞ்சூரியன், காலிஃபிளவர் கிரேவி என்று செய்து சுவைத்து இருப்போம் ஒவ்வொன்றும் ஒருத் தனித்துவமான சுவையில் சூப்பராக இருக்கும். அந்த வகையில் இன்று நாம் அருமையான காலிஃபிளவர் தந்தூரி ரெசிபியை காண உள்ளோம்.
சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடும் காலிஃபிளவர் தந்தூரி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
காலிஃபிளவர் - 1
கெட்டி தயிர் - 300 மிலி
கடலை மாவு - 1/4 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் -1&1/2 ஸ்பூன்
தனியா தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
சீரகம் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
லெமன் ஜூஸ் - 1 ஸ்பூன்
எண்ணெய்-தேவையான அளவு
இப்படி 1 முறை கொங்கு சிக்கன் மசாலா செய்து அசத்துங்க! அப்பறம் எப்போதும் இதையே செய்து தர சொல்லுவாங்க!
செய்முறை:
முதலில் காலிஃபிளவரை சுத்தம் செய்து ஒரே மாதிரியான அளவில் அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அதில் அரிந்து வைத்துள்ள காலிஃபிளவரை சேர்த்து சுமார் 2 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின் அதனை தண்ணீர் இல்லாமல் வடிகட்டிக் கொள்ள வேண்டும்
அடுப்பில் ஒரு தவா வைத்து அதில் கடலை மாவு சேர்த்து டிரை ரோஸ்ட் செய்து கொள்ள வேண்டும். இந்த மாவினை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் கடலை மாவினில் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள்,தனியா தூள், மிளகாய் தூள், சீரகத் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு, கடலை மாவு மற்றும் லெமன் ஜூஸ் ஆகியவை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
இப்போது கலவையில் கெட்டி தயிர் கொஞ்சம் சேர்த்து நன்றாக பீட் செய்து கொள்ள வேண்டும்.
இப்போது இந்த மாவு கலவையில் காலிஃபிளவர் சேர்த்து நன்றாக பிரட்டிக் கொள்ள வேண்டும். பின் காலிஃபிளவரை சுமார் ஒரு மணி நேரம் பிரிட்ஜில் வைத்து குளிர வைக்க வேண்டும்.
அடுப்பில் ஒரு தவா வைத்து அதில் இந்த காலிஃபிளவரை சில துளி எண்ணெய் விட்டு பிரட்டி விட்டு பின் அதனை வெறும் தீயில் சுட்டு எடுத்தால் காலிஃபிளவர் தந்தூரி ரெடி!