MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • முருங்கை கீரையை இப்படி சாப்பிட்டால் போதும்.. சில நோய்க்கு மாத்திரையே போட வேண்டாம் தெரியுமா?

முருங்கை கீரையை இப்படி சாப்பிட்டால் போதும்.. சில நோய்க்கு மாத்திரையே போட வேண்டாம் தெரியுமா?

முருங்கை கீரையை நம் அன்றாட உணவில் சேர்த்து கொண்டால் கிடைக்கும் ஏராளமான நன்மைகளை இங்கு காணலாம். 

1 Min read
Author : maria pani
Published : Feb 03 2023, 04:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

கிராமங்களில் பெரும்பாலான வீடுகளில் முருங்கை மரம் வளர்ப்பர். அதன் கீரை, காய் சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள்கள். இதன் மணமும் சுவையும் அலாதியானது. இதை உணவில் சேர்ப்பதால் ஆன்டி ஆக்சிடண்ட் அதிகம் உள்ளது. இதை உண்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காணலாம். 

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

உடல் பருமன், நீரிழிவு நோய், ரத்த சோகை, இதய நோய்கள், மூட்டு வலி, கல்லீரல் தொடர்பான நோய்களால் அவதிபடுபவர்களுக்கு முருங்கை கீரை மிகவும் நல்லது. இதனை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு பற்கள் வலிமை பெறும். ஈறுகளில் பிரச்சனை இருந்தால் சீராகும். 

35

சிலருக்கு உடலில் உள்ள வெப்பத்தால் வாயில் புண் வரும். இந்த புண்களுக்கு முருங்கை கீரை எடுத்து கொள்வது நல்லது. புண்கள் விரைவில் குணமாகும். முருங்கை கீரையை சாப்பிடும்போது சருமத்தில் வரும் சுருக்கங்கள் விரைவில் குறையும். சரும பிரச்சனைகளுக்கு ஏற்றது. 

45

முருங்கை கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து கொஞ்சம் மிளகு, உப்பு சேர்த்து அருந்தினால் மலச்சிக்கலுக்கு முடிவு வரும். இதனால் உடல் வெப்பமும் தணியும். முருங்கை இலையை காம்புகள் இல்லாமல் கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் இரும்புச்சத்து அதிகமாகும். தாய்ப்பால் சுரப்பு குறைவாக உள்ள பெண்களுக்கு முருங்கை இலையை சமைத்து கொடுக்கலாம். இதனால் தாய்ப்பால் சுரப்பு அதிகமா வாய்ப்புள்ளது. 

இதையும் படிங்க: கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கும் பாகற்காய்.. மிஸ் பண்ணாம சாப்பிட்டால் பறந்திடும் பல நோய்கள்!

 

 

55

முருங்கை இலைகளை மிளகு ரசமாக செய்து சாப்பிடலாம். இதனால் உடல் சோர்வு, கை, கால் வலி குணமாகும். புத்துணர்வு கிடைக்கும். கொஞ்சம் நெய்விட்டு முருங்கை இலைகளை வதக்கி சாப்பிட்டால் ரத்தசோகையை கூட விரட்டலாம். வாரம் ஒரு முறை முருங்கைக் கீரையை சாப்பிட்டு வந்தால் உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். எண்ணற்ற பலன்களை கொண்ட முருங்கை இலையை தவறாமல் சாப்பிடுங்கள்.

இதையும் படிங்க: தினமும் வெங்காயத்துல டீ போட்டு குடித்தால்.. இத்தனை நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாம் தெரியுமா?

About the Author

MP
maria pani
Latest Videos
Recommended Stories
Recommended image1
Dark Chocolate: சொன்னா நம்பமாட்டீங்க.! டார்க் சாக்லேட் என்னென்ன நன்மைகள் இருக்கு தெரியுமா?
Recommended image2
Bitter Gourd: சர்க்கரை நோய் முதல் இதய நோய் வரை! பாகற்காய் கொட்டி கிடக்கும் மருத்துவ குணங்கள்!
Recommended image3
Hydrating Vegetables: ACயை விட ஜில்லுனு வைக்கும் 4 காய்கறிகள்! வெயிலுக்கு இதான் சரியான சாய்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved