கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கும் பாகற்காய்.. மிஸ் பண்ணாம சாப்பிட்டால் பறந்திடும் பல நோய்கள்!
பாகற்காய் உண்ணும்போது பலவிதமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
பாகற்காய் கசப்பான சுவை கொண்டிருந்தாலும், பல நூற்றாண்டுகளாக பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்காக தவிர்க்க முடியாமல் பயன்படுத்தப்படுகிறது. இதில் பாலிபெப்டைட்-பி எனப்படும் இன்சுலின் மாதிரியான கலவைகள் இருக்கிறது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். அதனால் நீரிழிவு நோயாளிகள் அதிகம் எடுத்து கொள்ளலாம். இதில் இருக்கும் மற்ற பல நன்மைகள் குறித்து இங்கு காணலாம்.
பாகற்காயில் இருக்கும் நார்ச்சத்து கார்போஹைட்ரேட்டுகளின் செரிமானத்தை இளகுவாக்க உதவுகிறது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. சீரான குடல் இயக்கத்தை பாகற்காய் ஊக்குவிக்கும். மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும்.
பாகற்காயில் வைட்டமின் சி உள்பட பல வைட்டமின்கள் காணப்படுகின்றன. நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம் ஆகிய பிற முக்கிய தாதுக்கள் இதில் உள்ளது. அவை ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க அவசியமாக கருதப்படுகிறது. இந்த தாதுக்கள் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுவதோடு, இதய நோய், பக்கவாதம் போன்ற நோய்கள் அபாயத்தையும் குறைக்கிறது.
இதையும் படிங்க: மகா சிவராத்திரி 2023: சிவபெருமானின் மகிமையை பெற எப்போது பூஜை, விரதம் கடைபிடிக்க வேண்டும்? முழுவிவரம்!
எல்லா பலன்களையும் விட முக்கியமாக பாகற்காய் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் சக்தி கொண்டது. இது இதய ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும் மற்றொரு காரணியாகும்.
பாகற்காயில் குறைந்த அளவே கலோரி உள்ளது. இதில் நார்ச்சத்தும் நிறைந்து காணப்படுவதால் உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு நல்ல பலனளிக்கும். இதை உண்ணும்போது நீண்ட காலத்திற்கு உங்களை முழுமையாகவும் திருப்தியாகவும் உணர உதவும். அதுமட்டுமில்லாமல் பாகற்காயில் இருக்கும் கசப்பூட்டும் கலவைகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். இதனால் எடை இழப்பு தூண்டப்படும்.
இதையும் படிங்க: பச்சை வாழைப்பழத்தை சாப்பிடலாமா சர்க்கரை நோயாளிகள்?