ஆண்களே விந்தணுக்கள் அதிகரிக்கனுமா? அப்போ முதல்ல இந்த பழத்தை சாப்பிடுங்க... மிஸ் பண்ணிடாதீங்க..!!
கருப்பு திராட்சை பழத்தில் பலவிதமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளதால், இவற்றை சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதமான நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
கருப்பு திராட்சையை தினமும் சாப்பிடுவதால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். இதனால் உணவு எளிதில் செரிமானமாகும். மேலும் இது, வயிற்றில் ஏற்படும் எரிச்சல், வயிற்று உப்புசம், அஜீரண கோளாறு போன்ற பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது.
கருப்பு நிற திராட்சையில் அதிகளவு சர்க்கரை, செல்லுலோஸ் மற்றும் ஆர்கானிக் அமிலம் ஆகியவை உள்ளது. இவை மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுத்து, உடலில் இருந்து கழிவுகளை எளிதில் இருந்து வெளியேற உதவுகிறது.
கருப்பு திராட்சையில் வைட்டமின் சி உள்ளது. இது தொற்று நோய்களை எதிர்த்து போரட உதவுகிறது. மேலும் இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் அபாயத்தை கணிசமாக குறைக்க உதவுகிறது.
இதையும் படிங்க: கருப்பு திராட்சை கண்டால் சாப்பிடாமல் விடாதீர்கள்.. அவ்வளவும் சத்துக்கள்..!
கருப்பு திராட்சையில் எல்லாவிதமான சத்துக்கள் இருப்பதால் இது குழந்தை பெற்றெடுத்த பெண்கள், மாதவிடாய் காலத்தில் கை, கால் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
கருப்பு திராட்சையில் சோடியம் குறைவாக இருப்பதால், இது இரத்த அழுத்த பிரச்சனைகளை குறைக்கிறது. அதுபோல் இதில் இருக்கும் பொட்டாசியம் உயர் இரத்த அழுத்த ஆபத்தை குறைக்கிறது. மேலும் இது உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை அகற்றி, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
கருப்பு திராட்சை ஆண்களின் விந்தணுக்களை அதிகப்படுத்தவும், அவர்கள் ஆரோக்கியமாக இருக்கவும் ARGININE உள்ளது.
இதையும் படிங்க: கருப்பு திராட்சை விதைகள் என்னமாதிரியான மருத்துவப் பணிகளை செய்கிறது?
குழந்தைகள் தினமும் கருப்பு திராட்சை சாப்பிட்ட வேண்டும். ஏனெனில், இது இரத்த சிவப்பணுக்களை அதிகப்படுத்தி ரத்தசோகை வராமல் பாதுகாக்கிறது. மேலும் வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலி, கை கால் வலி போன்ற வழிகளில் இருந்து அவர்களுக்கு நிவாரணம் அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது.