MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • காலை உணவாக இதை சாப்பிடுங்க.... எடை தானாக குறையும்..!!

காலை உணவாக இதை சாப்பிடுங்க.... எடை தானாக குறையும்..!!

நாம் காலையில் உண்ணும் உணவு, நாள் முழுவதும் நம்மை உற்சாகமாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. அதனால்தான் காலை உணவில் நல்ல ஊட்டச்சத்தை சேர்க்க வேண்டும் என்று சொல்லுவர்.  

2 Min read
Author : Kalai Selvi
| Updated : May 17 2023, 04:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தவறான உணவுப் பழக்கம் மற்றும் தவறான வாழ்க்கை முறை உடல் பருமனை அதிக்ரிக்கும். உடல் எடையைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் பலர் ஜிம்மில் மணிக்கணக்கில் வியர்க்கிறார்கள். மற்றவர்கள் காலை உணவைத் தவிர்க்கிறார்கள். காலை உணவைத் தவிர்ப்பது உண்மையில் எடை இழப்புக்கு பதிலாக எடை அதிகரிக்கும் என்பது பலருக்குத் தெரியாது.
 

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

காலை உணவு நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. இது நாள் முழுவதும் நம்மை உற்சாகமாக வைத்திருக்கும். காலை உணவைத் தவிர்ப்பது பசியை அதிகரிக்கும். இதனால் மதியம் அதிகமாக சாப்பிடலாம். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், உங்கள் காலை உணவில் சேர்க்க வேண்டிய சில உணவுகளை இப்போது பார்ப்போம். 

37

பீன்ஸ்:

இதில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்பு மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. காலை உணவில் துவரம் பருப்பை சேர்த்துக் கொள்வது, அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க உதவும். இதற்கு, பருப்புகளை சமைக்கலாம் அல்லது சாலட்டில் சேர்க்கலாம். 

47

முட்டை:

முட்டையில் புரதச்சத்து அதிகம் உள்ளதால் உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுப் பொருட்களில் முட்டையும் ஒன்று. தினமும் காலை உணவில் வேகவைத்த முட்டைகளை சாப்பிடுங்கள். முட்டையை ஆம்லெட்டாகவும் சாப்பிடலாம். புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதால் உடல் எடையை எளிதில் குறைக்கலாம். 

இதையும் படிங்க: டெங்கு காய்ச்சல்.. என்னென்ன சாப்பிட வேண்டும்? நிபுணர்கள் சொல்லும் முக்கிய தகவல்கள்!!

57
Cheese

Cheese

பாலாடைக்கட்டி:

சீஸ் புரதம், கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது. நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், காலை உணவில் பல வழிகளில் சீஸ் சாப்பிடலாம். பாலாடைக்கட்டியை கறியாகவோ அல்லது ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடலாம். இது உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமின்றி உடலுக்கு ஆற்றலையும் அளிக்கிறது.
 

67

ஓட்ஸ்:

ஓட்ஸ் கொழுப்பைக் குறைக்கவும் நன்மை பயக்கும். இதில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. காலை உணவில் ஓட்ஸ் சேர்த்துக் கொள்வதால் பசி குறைவது மட்டுமின்றி கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது.
 

77
idly

idly

இட்லி :

இட்லி சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட. ஏனெனில் இதில் புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இட்லி எளிதில் ஜீரணமாகும். சாம்பார் மிகவும் ஆரோக்கியமாக இருக்க வண்ணமயமான காய்கறிகளைச் சேர்க்கவும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
உணவு
ஆரோக்கிய குறிப்புகள்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
முட்டை பிரியர்கள் கவனத்துக்கு! தினமும் முட்டை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா? ஆய்வு சொல்வது என்ன?
Recommended image2
Crispy Spicy Thattai : மொறு மொறு கார தட்டை..கடைகளில் வாங்க வேண்டாம்! வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்
Recommended image3
Sweet Somas : தீபாவளி ஸ்பெஷல் மொறுமொறுப்பான ஸ்வீட் சோமாஸ்..தேங்காய் பூரணத்துடன் அசத்தல் ரெசிபி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved