MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • tiffin recipes: டிபன் செய்ய நேரமில்லையா? இந்த 5 உணவுகளை டிரை பண்ணுங்க...15 நிமிடத்தில் செய்து விடலாம்

tiffin recipes: டிபன் செய்ய நேரமில்லையா? இந்த 5 உணவுகளை டிரை பண்ணுங்க...15 நிமிடத்தில் செய்து விடலாம்

பரபரப்பான காலை வேலையில் டிபன் செய்வதற்கு பலருக்கும் நேரம் இருக்காது. அந்த மாதிரி டிபன் செய்வதற்கு கஷ்டப்படுபவர்கள் தென்னிந்தியாவின் பிரபலமான இந்த 5 உணவுகளை டிரை பண்ணலாம். வெறும் 15 நிமிடங்களிலேயே டிபன் தயார் செய்து விடலாம்.

2 Min read
Author : Priya Velan
Published : Jun 16 2025, 01:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரவா தோசை :
Image Credit : our own

ரவா தோசை :

ஒரு பாத்திரத்தில் ரவை, அரிசி மாவு, உப்பு, சீரகம், நசுக்கிய மிளகு சேர்த்து கலக்கவும். அதனுடன் தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கட்டியில்லாமல் கரைக்கவும். மாவு சற்று நீர்க்க இருக்க வேண்டும். பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்கு கலக்கவும். தோசை கல்லை சூடாக்கி, மெல்லிய தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடன் சூடாகப் பரிமாறவும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ரவா உப்புமா :
Image Credit : stockPhoto

ரவா உப்புமா :

ஒரு கடாயில் ரவையை லேசாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே கடாயில் எண்ணெய்/நெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து பொரிய விடவும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். காய்கறிகள் சேர்ப்பதென்றால் அதையும் சேர்த்து வதக்கவும். 2 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும், அடுப்பை சிம்மில் வைத்து, வறுத்த ரவையை மெதுவாக சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும். தண்ணீர் வற்றி, ரவை வெந்ததும், அடுப்பை அணைத்து, எலுமிச்சை சாறு பிழிந்து பரிமாறவும். சட்னி அல்லது ஊறுகாயுடன் சுவையாக இருக்கும்.

35
சேமியா உப்புமா :
Image Credit : stockPhoto

சேமியா உப்புமா :

கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், காய்கறிகள் சேர்த்து வதக்கவும். 1.5 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும், வறுத்த சேமியாவை சேர்த்து நன்கு கிளறி, மூடி போட்டு, சேமியா வெந்து தண்ணீர் வற்றும் வரை சிம்மில் வைக்கவும். அவ்வப்போது கிளறி விடவும். சூடான சேமியா உப்புமாவை தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம்.

45
இன்ஸ்டன்ட் இட்லி :
Image Credit : our own

இன்ஸ்டன்ட் இட்லி :

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, வறுத்த ரவையுடன் சேர்க்கவும். தயிர், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும். மாவு கெட்டியாக இருந்தால் 5-10 நிமிடங்கள் ஊற விடலாம். இறுதியாக ஈனோ அல்லது பேக்கிங் சோடா சேர்த்து கலக்கி, இட்லி தட்டுகளில் ஊற்றி 10-12 நிமிடங்கள் ஆவியில் வேக விடவும். சட்னி மற்றும் சாம்பாருடன் அருமையாக இருக்கும்.

55
பன்னீர் டோஸ்ட் / வெஜிடபிள் டோஸ்ட் :
Image Credit : stockPhoto

பன்னீர் டோஸ்ட் / வெஜிடபிள் டோஸ்ட் :

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் நறுக்கிய காய்கறிகள் (சேர்ப்பதென்றால்), மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும். காய்கறிகள் வெந்ததும் துருவிய பன்னீர் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். கடைசியாக கொத்தமல்லி தழை தூவவும். இந்த கலவையை பிரட் துண்டுகளின் மேல் பரப்பி, சூடான தவாவில் எண்ணெய்/வெண்ணெய் விட்டு, இருபுறமும் பொன்னிறமாக டோஸ்ட் செய்யவும். கெட்சப் அல்லது சட்னியுடன் பரிமாறவும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
உணவு
ஆரோக்கியம்
சமையலறை குறிப்புகள்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
வழக்கமான சட்னி சாப்பிட்டு சலிச்சு போச்சா? 10 நிமிடத்தில் சுவையான 'காரைக்குடி ஸ்பெஷல்' சட்னி!
Recommended image2
குளிர்ந்த நீரா, வெந்நீரா? சாப்பிட்டதும் நீங்கள் செய்யும் இந்தத் தவறு செரிமானத்தைப் பாதிக்குமா?
Recommended image3
Vatha Kuzhambu Sadam : மணத்தக்காளி வத்தல், சின்ன வெங்காயம் இருந்தால் போதும்..சுவையான வத்தக்குழம்பு சாதம் ரெடி!
Related Stories
Recommended image1
school tiffin box ideas: காலையில் லேட்டாக எழுந்துட்டீங்களா? குழந்தைகளுக்கு லஞ்ச் ரெடி பண்ண கேரளா ஐடியா இதோ
Recommended image2
breakfast recipes: சட்டென ரெடி பண்ணக் கூடிய 8 தென்னிந்திய உணவுகள்...இட்லி, தோசை கிடையாது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved