- Home
- உடல்நலம்
- உணவு
- Curd vs Yogurt: 90% பேருக்கு தெரியாத உண்மை... தயிருக்கும் யோகர்ட்டுக்கும் இவ்வளவு வித்தியாசமா?
Curd vs Yogurt: 90% பேருக்கு தெரியாத உண்மை... தயிருக்கும் யோகர்ட்டுக்கும் இவ்வளவு வித்தியாசமா?
Curd vs Yogurt : தயிர் பத்தி நமக்கு நல்லா தெரியும். ஆனா யோகர்ட்-னு சொன்னா, அது என்னனு பலரும் யோசிக்கிறாங்க. தயிரை விட யோகர்ட் விலை அதிகமா வேற இருக்கு. உண்மையில இந்த ரெண்டுக்கும் என்னதான் வித்தியாசம்? வாங்க பார்க்கலாம்.

யோகர்ட் எப்படி தயாராகிறது?
தயிர் மற்றும் யோகர்ட் இரண்டும் பாலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் ஆரோக்கியமான உணவுகள். வெளிப்படையாக பார்க்கும்போது இரண்டும் ஒரே மாதிரியாக தோன்றினாலும், தயாரிக்கும் முறை, ஊட்டச்சத்து மற்றும் உடலுக்கு தரும் நன்மைகளில் சில முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக, வீடுகளில் தயாரிக்கப்படும் தயிர், ஏற்கனவே உறைந்த தயிரை புளிப்பாக பயன்படுத்தி பாலில் கலந்து இயற்கையாக உறைய வைக்கப்படுகிறது. இந்த முறையில் இயற்கையாக உருவாகும் நல்ல பாக்டீரியாக்கள் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
Curd in Winter : குளிர்காலத்துல தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்குமா? உண்மை என்ன தெரியுமா?
எதில் சத்துக்கள் அதிகம்?
மறுபுறம், யோகர்ட் தொழில்முறையில் தயாரிக்கப்படுகிறது. குறிப்பிட்ட வகை நன்மை தரும் பாக்டீரியாக்கள் பாலில் சேர்க்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலையில் புளிக்க வைக்கப்படுகின்றன. இதனால் பாலில் உள்ள லாக்டோஸ், லாக்டிக் அமிலமாக மாறி, யோகர்ட்டிற்கு கெட்டியான அமைப்பும் தனித்துவமான சுவையும் கிடைக்கிறது. இரண்டிலும் குடலின் ஆரோக்கியத்திற்கு உதவும் புரோபயாடிக்ஸ் (Probiotics) நிறைந்துள்ளன. இருப்பினும், குறிப்பாக கிரீக் யோகர்ட் தயாரிக்கும்போது அதிகப்படியான நீர் நீக்கப்படுவதால், அதில் புரோட்டீன் மற்றும் கால்சியம் அளவு சாதாரண தயிரைவிட அதிகமாக இருக்கும். இதனால் தசை வளர்ச்சி மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு இது கூடுதல் பலன் அளிக்கக்கூடும்.
எது நல்லது?
மேலும், பால் சர்க்கரையான லாக்டோஸை முழுமையாக ஜீரணிக்க முடியாத சிலருக்கு, தயிரை விட யோகர்ட் எளிதாக செரிமானமாக வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், வீட்டில் தயாரிக்கப்படும் தயிர் உடல் சூட்டைக் குறைக்கவும், அன்றாட செரிமானத்தை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது. தினசரி உணவில் சேர்க்க வேண்டிய ஆரோக்கியமான தேர்வாக வீட்டுத் தயிர் கருதப்படுகிறது. மறுபுறம், உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள், அதிக புரோட்டீன் தேவைப்படுபவர்கள் அல்லது டயட்டில் இருப்பவர்கள் ப்ளெயின் யோகர்ட் அல்லது கிரீக் யோகர்ட்டை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆனால், சந்தையில் கிடைக்கும் சுவை சேர்க்கப்பட்ட (Flavoured) யோகர்ட்களில் சர்க்கரை மற்றும் பிற சேர்க்கைப் பொருட்கள் அதிகமாக இருக்கக்கூடும். எனவே, ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு சர்க்கரை சேர்க்காத ப்ளெயின் யோகர்ட் அல்லது வீட்டில் தயாரித்த இயற்கை தயிரை தேர்வு செய்வதே சிறந்தது.
தயிரில் உள்ள நன்மைகள் என்னென்ன?
உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க தினமும் ஒரு கப் தயிர் சாப்பிடலாம். தயிரில் வைட்டமின் பி12, பொட்டாசியம் அதிகமா இருக்கிறதால, மலச்சிக்கலைப் போக்கவும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் இது உதவுது. இது குடலில் உள்ள பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தும்.
ப்ரோபயாட்டிக்ஸ் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி, பதட்டத்தைக் குறைக்கவும் உதவுதுன்னு ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கு.
தினமும் தயிர் சாப்பிடுவது கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். இதன் மூலம், உயர் இரத்த அழுத்தம் வர்றதுக்கான அபாயத்தைக் குறைக்கலாம். இது கொலஸ்ட்ரால் அளவை சமநிலைப்படுத்தி, இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

