Chicken : கர்ப்பிணிகள் சிக்கன் சாப்பிட்டால் பல நன்மைகள்.. ஆனால்?
கோழிக்கறி நல்ல ஊட்டச்சத்து மூலமாகும். இது கர்ப்பிணிப் பெண்களுக்கும் வளரும் குழந்தைக்கும் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. ஆனாலும், கர்ப்பிணிகள் சிக்கன் சாப்பிடும்போது சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஏன்?
கர்ப்ப காலத்தில் பெண்கள் சத்தான உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். கருவுற்றிருக்கும் தாய் தன் குழந்தைக்கும் சேர்த்தே உணவு எடுத்துகொள்கிறாள். அதனால் தான் சிலர் கர்ப்பக்காலத்தில் அதிகம் சாப்பிடுவார்கள். சிலருக்கு வித்தியாசமான உணவு பழக்கம் ஏற்படும். முன்பு விரும்பாத உணவுகளை கூட கருவுற்றிருக்கும் சமயம் உண்பார்கள். இந்த வரிசையில் கோழிக்கறி (chicken) உண்பதால் கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் நன்மைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
புரதச்சத்து
சிக்கன் சாப்பிட்டால் புரதச்சத்து கிடைக்கும். இது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. சிக்கனில் இருக்கும் புரதம் குழந்தை செல்கள் மற்றும் திசுக்கள் உருவாக உதவியாக உள்ளது.
இரும்புச்சத்து
நம் ரத்தத்தில் ஹீமோகுளோபின் உருவாவதற்கு இரும்புச்சத்து அவசியம். இந்த சத்து சிக்கனில் அதிகம் உள்ளது. உடலின் உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்வதற்கு ஹீமோகுளோபின் தான் காரணமாக உள்ளது. ஒவ்வொரு பெண்ணும் கர்ப்ப காலத்தில் இரத்த சோகை பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். சிக்கன் சாப்பிடும் கர்ப்பிணிகள் இரத்த சோகையில் இருந்து தப்பலாம்.
வைட்டமின்கள், தாதுக்கள்
சிக்கனில் வைட்டமின் பி12, வைட்டமின் ஏ, ஜிங்க் ஆகிய அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளன. இவை அனைத்தும் குழந்தையின் உறுப்புகள், பார்வை, நோயெதிர்ப்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு அவசியம். தவறாமல் சிக்கன் சாப்பிடுங்க.!
குறைந்த கொழுப்பு
சிக்கனில் கொழுப்புச் சத்து குறைவாக உள்ளது. கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான எடையை பராமரிக்க முயற்சிக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்..!
உணவு பாதுகாப்பு
சால்மோனெல்லா மாதிரியான உணவு மூலம் பரவும் நோய்களைத் தடுக்க சிக்கனை நன்கு சமைக்கவும். கர்ப்பிணிகள் வேகவைக்காமல் பச்சையாக சிக்கன் சாப்பிடக் கூடாது. ஏனெனில் இது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் தீங்கு விளைவிக்கும். வீட்டில் வளர்க்கும் நாட்டுக் கோழிகளை சாப்பிடுவது தாய்க்கும் சேய்க்கும் நல்லது.
இதையும் படிங்க: வீட்டிலே மருந்து.. இந்த 3 செடிகளை வளர்த்துங்க போதும்!! ஒவ்வொரு செடியும் எத்தனை நோய்களை விரட்டும் தெரியுமா?
பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியில் சோடியம் அதிகமாக இருக்கும். இது கர்ப்பிணிகளுக்கு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. ஆகவே அந்த மாதிரி இறைச்சியை தவிர்க்க வேண்டும்.
இதையும் படிங்க: பிரெட் சாப்பிடுறவங்களா நீங்க! வாங்கும் முன் இந்த 1 விஷயத்தை பாக்கெட் மேல தவறாமல் பாருங்க! உங்க நல்லதுக்குதான்!