MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • பிரெட் சாப்பிடுறவங்களா நீங்க! வாங்கும் முன் இந்த 1 விஷயத்தை பாக்கெட் மேல தவறாமல் பாருங்க! உங்க நல்லதுக்குதான்!

பிரெட் சாப்பிடுறவங்களா நீங்க! வாங்கும் முன் இந்த 1 விஷயத்தை பாக்கெட் மேல தவறாமல் பாருங்க! உங்க நல்லதுக்குதான்!

Bread: பிரெட் வாங்கும்போது சில விஷயங்களை கவனித்து வாங்க வேண்டும். இல்லையென்றால் வீண் உடல் பாதிப்புகளில் மாட்டிக் கொள்வோம்.  

2 Min read
Author : maria pani
Published : Apr 01 2023, 01:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பிரெட்டை பெரும்பாலான பேச்சிலர்கள் காலை, மாலை உணவாக எடுத்து கொள்கிறார்கள். உடல் எடை குறைப்பவர்களும், சில நோய் பாதிப்பு உள்ளவர்களும் கூட பிரெட்டை அடிக்கடி எடுத்து கொள்கிறார்கள். ஆனால் அதன் உற்பத்தி முறை குறித்து நாம் அறிந்திருப்பதில்லை. எந்த மாதிரியான பொருள்களால் பிரெட்டை செய்வார்கள்? எந்த பொருள்கள் உடல்நலத்திற்கு ஏற்றது என்பதை இந்த பதிவில் முழுமையாக காணலாம். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

பாரம்பரியமாக சின்ன பேக்கரிகளில் பிரெட் தயார் செய்வார்கள். மாவு, தண்ணீர், ஈஸ்ட், உப்பு ஆகிய பொருட்கள் பிரெட் செய்ய தேவையான பொருள்கள். இந்த மாதிரி செய்யும் பிரெட்களை சில நாள்கள் தான் பயன்படுத்த முடியும். அதனால் பேக்கரிகளில் தினசரி அடிப்படையில் விற்பார்கள். ஆனால் வணிகரீதியாக சூப்பர் மார்க்கெட் மற்ற கடைகளில் விற்கும் பெரிய பிரெட் பாக்கெட்களில் மாவு, தண்ணீர், ஈஸ்ட், உப்பு தவிர சில பொருள்களை சேர்த்திருப்பார்கள். சர்க்கரை, எண்ணெய், அமிலத்தன்மை நிறைந்த சேர்மானங்கள் போன்றவை அந்த பிரெட்களில் இருக்கும். இவை பிரெட்டை ரொம்ப நாள் கெடாமல் வைத்திருக்கும். ஆனால் நம் உடலை? 

35

பெரிய அளவில் பிரெட் தயாரிக்கும் நிறுவனங்களின் முக்கிய நோக்கம், செலவுகளைக் குறைத்து, பிரெட்டை ரொம்ப நாள் நீடிக்கச் செய்வதுதான். நீங்கள் சந்தையில் வாங்கும் பாக்கெட்டுகளில் பொதுவாக 7 முதல் 10 நாட்கள் வரை பிரெட் காலாவதி தேதி இருக்கும். ஒரு பொருளை ரொம்ப நாள் பதப்படுத்தினால் அதில் எவ்வளவு வேதி பொருள்கள் இருக்கும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். முதலாவதாக, பிரெட்டில் சேர்க்கப்படும் மைதா மாவு உடலுக்கு எந்த நன்மையும் தராது. இது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. 

45

வணிக ரீதியாக தயார் செய்யப்படும் பிரெட்களில் சேர்க்கும் மற்றொரு மூலப்பொருள் ஈஸ்ட் பூஸ்டர். ஈஸ்டுடன் சர்க்கரை கலந்திருப்பது மாவை விரைவாக உப்பி வர செய்கிறது. ஆனால் இந்த பொருள்கள் நமக்கு வீக்கம், செரிமான பிரச்சனைகள், மற்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். பிரெட் கெட்டு போகாமல் இருக்க சேர்க்கப்படும் பாதுகாப்புக்கான வேதிப்பொருள்கள் பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கும். அதனால் நீண்ட நாள் பிரெட் கெடாமல் இருக்கும். அப்படி சேர்க்கப்படும் சோடியம் பென்சோயேட், பொட்டாசியம் சோர்பேட் ஆகியவை ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது புற்றுநோயுடன் தொடர்புடையது. 

இதையும் படிங்க: வீட்டிலே மருந்து.. இந்த 3 செடிகளை வளர்த்துங்க போதும்!! ஒவ்வொரு செடியும் எத்தனை நோய்களை விரட்டும் தெரியுமா?

55

இந்த பதிவின் நோக்கம் உங்களை பயமுறுத்துவது கிடையாது. பிரெட் வாங்கும் முன்பு நீங்கள் அந்த பாக்கெட்டுகளை ஒருமுறை பாருங்கள். பிரெட் பாக்கெட்டின் லேபிளைப் பார்த்து, அதில் நாங்கள் சொல்லும் வேதிப்பொருள்கள் பெயர் இருந்தால் தவிர்த்துவிடுங்கள். மைதா மட்டுமில்லை, ரீஃபைண்டு ஃப்ளார் என்று போட்டிருந்தால் கூட தவிர்க்க வேண்டும். அதுவும் மைதாதான். 2 அல்லது 3 விதமான மாவு சேர்த்திருந்தால், சர்க்கரை சேர்க்காமல் இருந்தால் வாங்குங்கள். தினமும் சாப்பிட வேண்டாம். உள்ளூர் பேக்கரிகளில் இப்போது கோதுமை மாவில் செய்யும் பிரெட்கள் வந்துள்ளன. கவனமாக வாங்கி பயன்படுத்துங்கள். 

இதையும் படிங்க: மணமேடையில் துப்பாக்கியுடன் போஸ்... திடீரென மணமகள் முகத்தில் வெடித்த துப்பாக்கி.. உடனே மணமகன் செய்த காரியம்..!

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Recommended image1
Immunity Foods: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சூப்பரான 7 உணவுகள்
Recommended image2
Heart Health: ஹார்ட் பேஷன்ட்ஸ் முட்டை சாப்பிடலாமா, கூடாதா? உண்மை என்ன?
Recommended image3
Moringa Water: தினமும் முருங்கைக்கீரை தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்? நன்மைகள் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved