MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா? கட்டுகதைகளும், உண்மையும்..!!

குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா? கட்டுகதைகளும், உண்மையும்..!!

குளிர்காலம் ஆரம்பமாகிவிட்டது. குளிர் காற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வது மிகவும் அவசியம். சீசன் மாறும்போதெல்லாம், உண்ணும் உணவில் கவனமாக இருங்கள்...

2 Min read
Author : Kalai Selvi
Published : Oct 23 2023, 03:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

குளிர்காலம் வந்துவிட்டது. இந்த சீசனில்..உணவு, சருமம், கூந்தல் போன்றவற்றில் சரியான கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் முடி, தோல் மற்றும் உடல் உயிரற்றதாகி, உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்படும். மேலும் இந்த சீசனில் சூடான பொருட்கள் தான் சாப்பிடுவது நல்லது. குறிப்பாக பனி மற்றும் குளிர் காற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வது மிகவும் அவசியம். சீசன் மாறும் போதெல்லாம் சாப்பிடும் உணவு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். அந்தவகையில், குளிர் காலத்தில் பலர் தயிரை சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். ஏனெனில் தயிர் சாப்பிட்டு மோர் குடித்தால் சளி, காய்ச்சல், தொண்டை வலி வரும் என்பது நம்பிக்கை. மேலும் இது உண்மையா..? இப்போது கண்டுபிடிப்போம்.
 

26

தயிரில் உள்ள சத்துக்கள்: தயிரில் பல ஊட்டச்சத்து மதிப்புகள் உள்ளன. குறிப்பாக கெட்ட பாக்டீரியாக்களை நீக்கி நல்ல பாக்டீரியாக்களை அதிகப்படுத்துகிறது. இதில் பல வைட்டமின்கள், புரதங்கள், மெக்னீசியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது.

36

ஆயுர்வேதத்தின் படி: ஆயுர்வேதத்தின் படி, குளிர்காலத்தில் தயிர் சாப்பிடுவதை தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் இது சளி சுரப்பு மற்றும் பிற சுரப்பிகளின் சுரப்பை அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி சைனஸ், ஆஸ்துமா, சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். குறிப்பாக இரவில் தயிர் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

46

அறிவியலின் படி: அறிவியலின் படி, தயிரில் குடலுக்குத் தேவையான நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, தயிர் சேர்த்து புளித்த உணவும் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தயிரில் கால்சியம், வைட்டமின் பி12 மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. தயிர் உட்கொள்வது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் சுவாசக் கோளாறு உள்ளவர்கள் மாலை 5 மணிக்கு மேல் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
 

56

ஆனால் தயிரில் வைட்டமின் சி இருப்பதால், சளியால் அவதிப்படுபவர்களுக்கு உதவுகிறது என்றும், தயிரை அறை வெப்பநிலையில் வைத்து சாப்பிடுவது நல்லது என்றும் சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
 

66

இதன்படி.. முழு தயிரையும் ஒதுக்கி வைக்க வேண்டிய அவசியமில்லை. குளிர்காலத்தில் தயிர் குறைந்த அளவு எடுத்துக்கொள்ளலாம். மேலும் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கும் தயிரை விட அறை வெப்பநிலையில் வைத்திருக்கும் தயிரை சாப்பிடலாம்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
தயிர் நன்மைகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
டயட்டில் இருப்பவரா நீங்கள்.? வெள்ளை அரிசி vs பழுப்பு அரிசி – எது எடை குறைக்க உதவும்?
Recommended image2
Uric Acid : மூட்டு வலியை நீக்கும் சூப்பர் 'சட்னி' ஒருமுறை சாப்பிட்டு பாருங்க! அற்புத பலன்கள் இருக்கு
Recommended image3
Kambu Paniyaram : கம்பு பணியாரத்திற்கு 'சர்க்கரை' நோயை கட்டுப்படுத்துற சக்தி இருக்கு.. ரொம்ப ஈஸியான ரெசிபி இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved