MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Egg: தினமும் முட்டை சாப்பிடலாமா? இந்த விஷயம் மட்டும் தெரிஞ்சுக்கோங்க!

Egg: தினமும் முட்டை சாப்பிடலாமா? இந்த விஷயம் மட்டும் தெரிஞ்சுக்கோங்க!

Egg: தினமும் முட்டை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகமாகுமா? உடலுக்கு ஆபத்தா? அல்லது இது வெறும் பயமா? யாரெல்லாம் முட்டையை தினமும் சாப்பிடலாம்? யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Vishnupriya
Published : Aug 28 2026, 12:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
தினமும்  முட்டை சாப்பிடலாமா?
Image Credit : magnific

தினமும் முட்டை சாப்பிடலாமா?

காலை உணவில் முட்டை என்பது பலருக்கும் தவிர்க்க முடியாத உணவாகிவிட்டது. புரதம், வைட்டமின்கள் என பல முக்கியமான சத்துக்கள் முட்டையில் இருப்பதால், தினமும் உணவில் முட்டையை சேர்த்துக்கொள்வது பொதுவாக ஆரோக்கியமான பழக்கமாகவே கருதப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
முட்டையில் உள்ள சத்துக்கள்
Image Credit : magnific

முட்டையில் உள்ள சத்துக்கள்

ஒரு பெரிய முட்டையில் சுமார் 6 கிராம் புரதம் இருப்பதுடன், கோலின் (Choline),வைட்டமின் A, பயோட்டின் உள்ளிட்ட முக்கிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இவை தசை வளர்ச்சிக்கும் உடல் வலிமைக்கும் உதவுகிறது. குறிப்பாக, முட்டையின் வெள்ளைக்கருவில் அதிகளவில் புரதமும்,மஞ்சள் கருவில் கொலஸ்ட்ராலும் அதிகமாக உள்ளது.

36
தினமும் முட்டை சாப்பிடக்கூடாதா?
Image Credit : magnific

தினமும் முட்டை சாப்பிடக்கூடாதா?

அப்படியென்றால், தினமும் முட்டை சாப்பிடக்கூடாதா? என்றால் அப்படி கிடையாது. கடந்த 2019-ம் ஆண்டு அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (American Heart Association - AHA) வெளியிட்ட அறிவியல் ஆலோசனையில், ஆரோக்கியமானவர்கள் தினமும் ஒரு முழு முட்டை சாப்பிடலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

46
முட்டையை எப்படி சாப்பிடனும்?
Image Credit : magnific

முட்டையை எப்படி சாப்பிடனும்?

முக்கியமாக முட்டையை எப்படி சாப்பிடுறோம் என்பதும் ரொம்ப முக்கியம். முட்டையில இருக்கிற சத்துக்களை முழுமையாக பெற, வேகவைத்த முட்டை அல்லது குறைந்த எண்ணெயில் சமைத்த முட்டையை சாப்பிடலாம்.

அதே நேரம், அதிக எண்ணெய், வெண்ணெய், உப்பு சேர்த்து சாப்பிடுறதை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. குறிப்பாக, முட்டையுடன் அதிக வெண்ணெய், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பேக்கன், சாசேஜ் போன்ற அதிக நிறைவுற்ற கொழுப்பு கொண்ட உணவுகளை அடிக்கடி சேர்த்துக்கொள்வது தவிர்க்கவும்.

56
யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?
Image Credit : magnific

யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?

  1. கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பவர்கள் – குறிப்பாக LDL (கெட்ட கொலஸ்ட்ரால்) அதிகமாக இருந்தால், முட்டையின் மஞ்சள் கருவை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.
  2. இதய நோய் உள்ளவர்கள் அல்லது இதய நோய் அபாயம் அதிகம் உள்ளவர்கள்
  3. நீரிழிவு நோய் உள்ளவர்கள்.
  4. முட்டைக்கு அலர்ஜி இருப்பவர்கள்.

இவர்கள் தினமும் எத்தனை முட்டை சாப்பிடலாம் என்பதை தனிப்பட்ட உடல்நிலை மற்றும் உணவுமுறையைப் பொறுத்து மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரிடம் ஆலோசிப்பது நல்லது. குறிப்பாக நீரிழிவு அல்லது அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அரிவுறுத்துகின்றனர்.

66
முடிவு
Image Credit : magnific

முடிவு

முட்டை நல்லதா, கெட்டதா? என்பதை மட்டும் பார்க்காமல், எவ்வளவு சாப்பிடுகிறோம், எப்படி சமைக்கிறோம், அதனுடன் என்ன சாப்பிடுகிறோம் என்பதையும் கவனிப்பதே முக்கியமாகும்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
ஆரோக்கிய குறிப்புகள்
உணவு
முட்டை நன்மைகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
7 Most Dangerous Foods: சாப்பிடுவது சுகம்.. பறிப்பது நரகம்: ஒரு நொடி பிசகினாலும் உயிருக்கே உலைவைக்கும் 7 விசித்திர உணவுகள்!
Recommended image2
Fish and Curd: மீன் குழம்புடன் தயிர் சாப்பிடலாமா? பலரும் சொல்வது உண்மையா? தெரிஞ்சுக்கோங்க..!
Recommended image3
Butter Chicken : ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பட்டர் சிக்கன்... ஈஸியா வீட்டிலேயே செய்வது எப்படி?
Related Stories
Recommended image1
கேரளா ஸ்டைல் முட்டை ரோஸ்ட்...முட்டை இருந்தால் இதை டிரை பண்ணுங்க
Recommended image2
Kitchen Gadget: முட்டை மஞ்சக்கருவை ஒதுக்கிறாங்களா? இந்த கேட்ஜெட் இருந்தா எல்லாமே கோல்டன் எக் தான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved