வாழைப்பழம் தான நல்லதுனு சொல்வாங்க.. ஆனா வாழைத்தண்டு சாறு 1 டம்ளர் குடித்தால்.. இத்தனை நன்மைகள் கிடைக்கும்..!
banana stem: வாழைப்பழத்தை விடவும், வாழைத்தண்டு சாப்பிடுவதால் கோடையில் உங்களுடைய உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
வாழைப்பழத்தை அதன் சுவை, ஊட்டச்சத்துக்கள் காரணமாக நாம் அனைவருமே எடுத்துக் கொள்வோம். ஆனால் வாழைத்தண்டுக்கு நாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நீங்கள் வாழைத்தண்டை எப்போதாவது சாப்பிட்டிருக்கிறீர்களா? யாராவது வாழைத்தண்டை சாப்பிடுவாங்களா என்ற எண்ணம் உங்களுக்குள் இருந்தால் மாற்றி கொள்ளுங்கள். அதில் அவ்வளவு நன்மைகள் கொட்டி கிடக்கின்றன.
வாழைத்தண்டில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் பி6, வயதாவதை தடுத்து இளமையாக வைத்திருக்கும் சில பண்புகள் காணப்படுகின்றன. இதை உட்கொள்வதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கிவிடுகிறது.
உடலின் நச்சு நீக்கி..!
வாழைத்தண்டு சாறு குடித்தால் உடலை நச்சுத்தன்மை நீங்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைகிறது. நம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதன் மூலம் செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. இதில் நிறைய நார்ச்சத்து காணப்படுவதால் எளிதில் செரிமானம் ஆகும்.
குடல் இயக்கம்
வாழைத்தண்டில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கம் மேம்பட உதவும். நம் உடலை அமிலத்தன்மை பிரச்சனையில் இருந்து காப்பாற்றும். குடலை சுத்தம் செய்வதற்கும் நார்ச்சத்து மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
எடை இழப்பு
உடல் எடை அதிகம் இருப்பதை நினைத்து கவலை கொள்வோருக்கு வாழைத்தண்டு சாறு அற்புத கொடை. இது விரைவான எடை இழப்புக்கு உதவும். வாழைத்தண்டில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும். இதில் உள்ள கலோரிகளின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. ஆகவே நீங்கள் பல நன்மைகளைப் பெறலாம்.
இதையும் படிங்க: மூட்டு இடுப்பு வலி நொடியில் காணாமல் போக வேண்டுமா?
செய்முறை
வாழைத்தண்டு சாறு தயாரிக்க, முதலில் வாழைத்தண்டை நன்கு சுத்தம் செய்து எடுக்க வேண்டும். அதை சிறு துண்டுகளாக வெட்டி, தடிமனான வெளிப்புற அடுக்கை நீக்குங்கள். தண்டின் உள் பகுதியை தனியாக எடுத்து நறுக்கி அரைத்து கொள்ளுங்கள். ஒரு கப் தண்ணீரில் அரைத்து வடிகட்டி கொள்ளுங்கள். வாழைத்தண்டு சாற்றில் ஏலக்காய் பொடி கலந்தும் குடிக்கலாம். அதன் சுவையை அதிகரிக்க உதவும். இது தவிர, எலுமிச்சை அல்லது கருப்பு உப்பு சேர்க்கலாம். சிலருக்கு வாழைத்தண்டின் சுவை பச்சையாக குடிக்க பிடிக்காது. அவர்கள் சூப் மாதிரி செய்து அருந்தலாம்.
இதையும் படிங்க: முள்ளங்கியை எப்படி சாப்பிடணும் தெரியுமா? இந்த மாதிரி 1 தடவை சாப்பிடுங்க..! கேஸ், செரிமான பிரச்சனையே வராது..