முள்ளங்கியை எப்படி சாப்பிடணும் தெரியுமா? இந்த மாதிரி 1 தடவை சாப்பிடுங்க..! கேஸ், செரிமான பிரச்சனையே வராது..
முள்ளங்கி செரிமானத்திற்கு நல்லது என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். ஆனாலும், சிலர் அதை சாப்பிட்ட பின்னர் செரிமான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். ஏன்? வாங்க பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அனைத்து வகையான காய்கறிகளும் நம்மை பல நோய்களின் ஆபத்தில் இருந்து காக்கிறது. ஆகவே காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். அந்த வகையில் முள்ளங்கி பல ஆரோக்கிய நன்மைகளை தன்னுள் வைத்திருக்கிறது. ஆனாலும் சில நேரங்களில் முள்ளங்கி சாப்பிடுவதும் பிரச்சனைகளை உண்டாக்கும். சரியான நேரத்தில் சாப்பிடாததால் தான் இந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது. எந்த நேரத்தில் முள்ளங்கியை உண்ண வேண்டும்? எப்படி எடுத்து கொண்டால் அதன் பலன்களை அனுபவிக்கலாம் என்பதை இங்கு காணலாம்.
பொதுவாக முள்ளங்கி ஜீரணிக்க இரண்டு மணி நேரத்திற்கும் மேல் ஆகும். இந்த நேரத்தில் நீங்கள் சாப்பிடும் மற்ற காய்கறிகள் வாயு உருவாவதை தடுக்க உதவும். அனைத்து காய்கறிகளையும் மெல்லியதாக நறுக்கி, அதில் கருப்பு உப்பு சேர்த்து உண்ணவும்.
சில காய்கறிகளை தொடர்ந்து சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் அவை நம்முடைய வயிற்றுக்கு கெடுதல் தான். இதில் முள்ளங்கியும் அடங்கும். முள்ளங்கியை ஒருபோதும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. முள்ளங்கியை இரவு உணவில் சாலட்டாக சாப்பிடவே கூடாது. இப்படி சாப்பிடுவதால் செரிமான மண்டலத்தில் அழுத்தம் ஏற்படுகிறது.
எப்போதும் பச்சை காய்கறிகளை சமைத்த காய்கறிகளுடன் சேர்த்து உண்ணக் கூடாது. முள்ளங்கியை மதிய உணவுக்கும், இரவு உணவிற்கும் இடையில் சாப்பிடலாம். இந்த நேரத்தில் சாப்பிடுவதால், அதில் உள்ள அனைத்து சத்துக்களும் கிடைக்கும். உடலுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.
சுகாதார நிபுணர்களின் கருத்துப்படி.. மலம் கழிக்கும் போது வலி இருப்பவர்கள் முள்ளங்கியை சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதை சாப்பிட்டால் வயிற்று பிரச்சனைகள் உள்ளிட்ட பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். முள்ளங்கி சாப்பிட்ட உடனே உட்காரக் கூடாது. இதனால் வயிற்றில் பிரச்சனை ஏற்படுகிறது. முள்ளங்கு சாப்பிட்ட பிறகு உடல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.
இதையும் படிங்க: புதினா இலையை சும்மா நினைக்காதீங்க.. கொஞ்சம் வாயில் போட்டு மென்று சாப்பிட்டால், இத்தனை நன்மைகள் இருக்கு!
முள்ளங்கியை பொதுவாக சாலட்டாக பச்சையாக சாப்பிடுவார்கள். வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை தவிர்க்க முள்ளங்கியை, மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுங்கள். இப்படி சாப்பிடுவதால் இரைப்பை பிரச்சனை வராது. இதில் கெட்ட வாசனையும் இல்லை. சிறிய முள்ளங்கியை வெள்ளரிக்காய், கேரட், தக்காளி, வேர்க்கடலை, எலுமிச்சை சாறு சேர்த்து சாலட்டாக உண்ணவும். இதனால் முள்ளங்கியில் எந்த பிரச்சனையும் வராது.
இதையும் படிங்க: சீதாப் பழத்தின் இனிப்பு, நீரிழிவு நோயாளிகளுக்கு கூட தீங்கு செய்யாது..கொட்டி கிடக்கும் சத்துக்கள் அப்படி..!