mint: புதினா இலையை சும்மா நினைக்காதீங்க.. கொஞ்சம் வாயில் போட்டு மென்று சாப்பிட்டால், இத்தனை நன்மைகள் இருக்கு!
Mint leaves benefits in tamil: புதினாவின் மருத்துவ நன்மைகளை இத்தொகுப்பு முழுமையாக விளக்குகிறது.
Tamil health updates Mint leaves benefits: புதினா இலைகள் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி, நம்முடைய ஆரோக்கியத்திலும் முக்கிய பங்காற்றுகின்றன. புதினா எல்லா பருவங்களிலும் கிடைக்கும் அற்புத பொருள். இதனை வீட்டிலே வளர்க்க முடியும். வீட்டு தொட்டிகளில் புதினாவை வளர்க்கும்போது, தினமும் கூட பயன்படுத்த முடியும். இதிலுள்ள மருத்துவ பயன்பாடுகளை இங்கு காணலாம்.
புதினாவில் அதிக ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. ஒவ்வாமைக்கு நல்ல மருந்தாக பயன்படும். செரிமான கோளாறுகளுக்கு நல்லது. அசைவ உணவுக்கு பிறகு புதினா நீர் குடிக்க அதுவும் ஒரு காரணம்.
புதினா இலைகள் வயிற்று பிரச்சனைகளை சுகப்படுத்தும். வீக்கம், வாயு, மாதவிடாய் வலிக்கு கூட நிவாரணம் அளிக்கும். புதினா இலைகளை சாப்பிட்டால் பித்த சுரப்பை அதிகரிக்கிறது. உடலில் பித்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. இது செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது.
தாய்ப்பால் ஊட்டும் அம்மாக்களின் முலைக்காம்பு விரிசலை சரி செய்கிறது. தாய்ப்பாலுடன் வரும் வலியைக் குறைக்கிறது. தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். வாய் துர்நாற்றத்தை முற்றிலும் நீக்குகிறது. குடல் எரிச்சல் நோயிலிருந்து விடுதலை அளிக்கிறது. குமட்டலைத் தடுக்கிறது.
புதினாவில் இருக்கும் மெந்தோல் எனும் பொருள் மூக்கடைப்பைப் போக்க உதவுகிறது. நாள்பட்ட இருமல் உண்டாக்கும் எரிச்சலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. ஜலதோஷத்திற்கும் நல்ல மருந்து. மெந்தோல் தொண்டை வலியையும். காய்ச்சலையும் கூட குறைக்கும் வல்லமை கொண்டது. சருமத்தை மென்மையாக்கும். சருமத்தில் உள்ள தொற்று, அரிப்புகளை குணப்படுத்துகிறது. முகப்பருவையும் நீக்கும்.
இதையும் படிங்க: தர்பூசணியை இந்த 1 பொருளுடன் சேர்த்து சாப்பிட்டால்... ரெண்டு மடங்கு நன்மை கிடைக்கும்.. நிபுணர் சொல்றத கேளுங்க!!
புதினா தேநீர் மகிமை
புதினா தேநீர் அருந்துவதால் மோசமான மனநிலை, வயிற்று வலி, சோர்வு, ஜலதோஷம் ஆகியவை நீங்குகிறது. சுமார் 7முதல் 10 புதினா இலைகளை ஒரு டம்ளர் தண்ணீரில் 5 நிமிடம் கொதிக்க வைத்து, வடிகட்டி, காலையில் குடியுங்கள். இது உங்கள் எல்லா நோய்க்கும் எதிராக போராட உதவும்.
இதையும் படிங்க: சுகர் நோயாளிகளே! இந்த தவறை மறந்தும் பண்ணாதீங்க..1 நிமிஷத்துல சர்க்கரை அளவு எகிறிடும்