Flax Seed Benefits: தினமும் 1 டீஸ்பூன் ஆளி விதை சாப்பிடுங்கள்!! எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்!!
பெண்கள் தங்களைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள ஆரோக்கியமான விஷயங்களைத் தேடுகிறார்கள். நீங்களும் இதே போன்று தேடுகிறீர்களா? உங்களுக்கா இதோ...
ஆளி விதையை தினமும் 1 டீஸ்பூன் சாப்பிட்டால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்திருப்பதால் ஆளி விதைகள் சூப்பர்ஃபுட்கள் என்று அழைக்கப்படுகின்றன. உங்களுக்கு தெரியுமா ஒரு தேக்கரண்டி ஆளி விதையில் நார்ச்சத்து, புரதம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.
ஆளி விதைகள் பொதுவாக தங்க மஞ்சள் நிறத்தில் இருந்து சிவப்பு-பழுப்பு நிறத்தில் இருக்கும். இது ஈஸ்ட்ரோஜனைப் போலவே பைட்டோ ஈஸ்ட்ரோஜனைக் கொண்டுள்ளது. இதில் கரையக்கூடிய நார்ச்சத்தும் உள்ளது. இவ்வாறு சொல்லிக் கொண்டே போகும் அளவிற்கு ஆளி விதையில் ஏராளமான நன்மைகள் உள்ளது.
மலச்சிக்கல் நிவாரணம்:
இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் எளிய முறையில் மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. மேலும் இது செரிமான அமைப்பை நன்றாக வைத்திருக்கிறது. ஆளி விதையில் இரண்டு முக்கிய நார்ச்சத்து வகைகள் உள்ளன. அவை கரையக்கூடிய நார் மற்றும் கரையாத நார். கரையக்கூடிய நார்ச்சத்தானது செரிமான விகிதத்தை குறைக்கிறது மற்றும் பல்வேறு குடல் உள்ளடக்கங்களின் நிலைத்தன்மையையும் அதிகரிக்கச் செய்கிறது. அதுபோல், இதில் உள்ள கரையாத நார்ச்சத்து அதிக தண்ணீரை மலத்துடன் பிணைக்க உதவுகிறது. இதன் விளைவாக மென்மையான மலம் ஏற்பட்டு, அவை மலமிளக்கியாக செயல்பட்டு மலச்சிக்கலை போக்க உதவுகிறது. வயிற்றுப்போக்கு அல்லது எரிச்சல் கொண்ட குடல் நோய் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மொத்தத்தில் ஆளி விதையில் உள்ள நார்ச்சத்து சீரான குடல் இயக்கத்தை ஊக்குவித்து, சிறப்பான செரிமானத்தை மேம்படுத்துகிறது.
எடை இழப்பு:
நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் ஆளிவிதைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் ஏனெனில் இது உடல் எடையை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. இது பசியை அடக்க உதவுகிறது. உணவுக்கு இடையில் சிற்றுண்டி சாப்பிட வேண்டும் அல்லது உணவு உட்கொள்ளலை குறைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் ஆளி விதைகள் சிறந்த தேர்வாகும்.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது:
ஆளி விதைகள் ஒமேகா -3 கொழுப்பு அமிலத்தின் சிறந்த மூலமாகும். ஒரு தேக்கரண்டி ஆளிவிதையில் சுமார் 1.8 கிராம் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. கூடுதலாக இந்த ஆளி விதையில் ஆல்பா-லினோலெனிக் அமிலம் (ALA) நிறைந்துள்ளது. இது ஒரு வகை ஒமேகா -3 கொழுப்பு அமிலமாகும்.
இதையும் படிங்க: Flax seed Milk: பாலில் ஆளி விதைகளை கலந்து குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
மூட்டு வலி குறைக்க உதவும்:
உங்கள் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க ஆளிவிதை உதவுகிறது. இந்த விதை எண்ணெயில் ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் (ALA) உள்ளதால் செல் அமைப்பு மற்றும் மூட்டுகளின் செயல்பாட்டைப் பராமரிக்கிறது. ALA உடலில் இரண்டு முக்கியமான சேர்மங்களான docosahexaenoic acid (DHA) மற்றும் eicosapentaenoic acid (EPA) ஆகிய இரண்டு சேர்மங்களாக உருவாகிறது. இவைஇரண்டும் இரத்தத்தில் புரோஸ்டாக்லாண்டின்கள் எனப்படும் அழற்சி எதிர்ப்பு பொருட்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
ஆளி விதையை எப்படி சாப்பிடுவது?
தேவையான பொருள்:
தண்ணீர் - 1 கிண்ணம்
ஆளி விதைகள் - 1 தேக்கரண்டி
செய்முறை:
ஆளி விதைகளை 1 கப் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்கவும். பிறகு அதை காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு அந்த தண்ணீரைக் குடிக்கவும். இவ்வாறு நீங்கள் ஆளி விதைகளை சாப்பிடுவதன் மூலம் பல நன்மைகளைப் பெறலாம்.