உடல் உஷ்ணத்தை தணிக்க வேண்டுமா? இந்த 4 உணவுகளுக்கு 'டாடா' சொல்லுங்க.. முழு விவரம்!
Summer Health Tips: கோடைக்காலத்தில் உடலை கூலாக வைத்திருக்க குறிப்பிட்ட சில உணவுகளுக்கு நீங்கள் டாடா சொல்ல வேண்டும். அவை என்னென்ன உணவுகள்? என்பது குறித்து பார்க்கலாம்.

கோடையில் வாட்டும் உஷ்ணம்
தமிழகம் முழுவதும் கோடை வெயில் வெளுத்துக் கட்ட தொடங்கியுள்ளது. வெளியில் இருக்கும் வெப்பம் மட்டுமல்ல, நாம் சாப்பிடும் சில உணவுகளும் நம் உடல் சூட்டை அதிகரிக்கின்றன. உடலுக்குள் இருக்கும் இந்த சூட்டைக் குறைக்க வேண்டுமென்றால், நம்முடைய டயட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சில உணவுகளைத் தவிர்த்தால், இந்த கோடையிலும் ஆரோக்கியமாக இருக்கலாம். சில உணவுகள் உடல் வெப்பநிலையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், டீஹைட்ரேஷன் (dehydration) மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தக்கூடும். சரி, கோடைக்காலத்தில் எந்தெந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று பார்ப்போம்.
அதிக காரமான உணவுகள்
கோடைக்காலத்தில் நீங்கள் சிவப்பு மிளகாய், கரம் மசாலா மற்றும் அதிக காரம் உள்ள உணவுகளை சாப்பிடுபவராக இருந்தால், உடனடியாக அதை நிறுத்துங்கள். ஏனென்றால், இவை உடல் சூட்டை அதிகரித்துவிடும். இதனால், அதிகமாக வியர்ப்பதுடன், வயிற்றில் எரிச்சலும் ஏற்படலாம்.
பொரித்த மற்றும் ஜங்க் ஃபுட்
கோடைக்காலத்தில் பொரித்த உணவுகள் மற்றும் ஜங்க் ஃபுட்களுக்கும் குட்பை சொல்லிவிடுங்கள். சமோசா, பக்கோடா, ஃப்ரெஞ்ச் ஃபிரைஸ் போன்ற எண்ணெயில் ஆழமாகப் பொரித்த உணவுகளைத் தொடவே வேண்டாம்.
ஏனென்றால், இவை உடலில் சூட்டையும், ஒருவித மந்தநிலையையும் உண்டாக்கும். அதுமட்டுமல்ல, ஜீரணமாகவும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். உங்களுக்குப் பிடித்த உணவை சாப்பிட வேண்டும் என்று தோன்றினால், ஏர் ஃபிரையர் பயன்படுத்தி குறைந்த எண்ணெயில் சமைத்துச் சாப்பிடலாம்.
கோடையில் காஃபினுக்கு பை பை சொல்லுங்கள்
டீ, காபி போன்ற காஃபின் உள்ள பானங்களை நிறுத்த வேண்டும் அல்லது அவற்றின் அளவை மிகவும் குறைக்க வேண்டும். காஃபின் உடலை உள்ளிருந்து சூடாக்குகிறது. இந்த அதிகப்படியான சூட்டினால் சில நேரங்களில் சருமத்தில் கொப்புளங்கள் கூட வரலாம்.
ரெட் மீட் மற்றும் அதிக புரோட்டீன்
ரெட் மீட் உடலுக்கு ஊட்டச்சத்துக்களைக் கொடுத்தாலும், அது ஜீரணிக்க மிகவும் கடினமானது மற்றும் உடல் வெப்பநிலையை அதிகரிக்கும். எனவே, கோடைக்காலத்தில் ரெட் மீட் மற்றும் அதிக புரோட்டீன் உள்ள உணவுகளிலிருந்து விலகி இருப்பது நல்லது. இதனுடன், உப்பு, சிப்ஸ் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் குறைத்துக் கொள்ளுங்கள்.
ஏனென்றால், அதிக உப்புள்ள உணவுகள் உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை, அதாவது டீஹைட்ரேஷனை ஏற்படுத்தும். உப்பை சற்றுக் குறைவாகப் பயன்படுத்துங்கள். கோடையில் அதிக சர்க்கரை உள்ள பானங்கள் மற்றும் இனிப்புகளையும் குறைக்கலாம், ஏனெனில் இவை உடலில் சோம்பலை அதிகரிக்கும்.
கோடைக்காலத்தில் உடலை 'கூலாக' வைத்திருக்க சரியான டயட்டைத் தேர்ந்தெடுங்கள். வெள்ளரிக்காய், தர்பூசணி, தயிர் போன்ற குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிடுங்கள். இளநீர் மற்றும் எலுமிச்சை ஜூஸையும் குடியுங்கள். எளிதில் ஜீரணமாகக்கூடிய, வீட்டில் சமைத்த உணவே உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

