MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • Hair Fall Foods: முடி கொட்டுவதை நிறுத்தணுமா? முதலில் இந்த உணவுகளுக்கு 'நோ' சொல்லுங்க!

Hair Fall Foods: முடி கொட்டுவதை நிறுத்தணுமா? முதலில் இந்த உணவுகளுக்கு 'நோ' சொல்லுங்க!

இப்போதெல்லாம் முடி உதிர்வது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. எண்ணெய், ஷாம்பு மாற்றுவதால்தான் முடி கொட்டுகிறது என பலரும் நினைக்கிறார்கள். ஆனால், நாம் சாப்பிடும் சில உணவுகளாலும் முடி அதிகமாக உதிரும்.

3 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Apr 09 2026, 04:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இதை மொதல்ல தெரிஞ்சுக்கோங்க.!
Image Credit : Getty

இதை மொதல்ல தெரிஞ்சுக்கோங்க.!

முடி கொட்டுகிறது என்று பலரும் அடிக்கடி ஷாம்பு, எண்ணெய் போன்றவற்றை மாற்றிக்கொண்டு இருப்போம். ஆனால், நாம் தினசரி உணவில் சேர்க்கும் சில உணவுகளும் முடி கொட்டுவதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்பதை பலர் கவனிக்க மாட்டார்கள். அந்த உணவுகள் உடலுக்கு தேவையான சத்துக்களை குறைத்து, முடியின் வேர்களை பலவீனப்படுத்தி, முடி உதிர்வை அதிகரிக்கச் செய்கின்றன. இதனால், வெளிப்புற பராமரிப்புடன் சேர்த்து, உணவு பழக்கங்களிலும் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். குறிப்பாக, சில தீங்கான உணவுகளை தவிர்ப்பது மூலம் முடி ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

25
இனிப்பு புடிக்குமா உங்களுக்கு?
Image Credit : stockPhoto

இனிப்பு புடிக்குமா உங்களுக்கு?

இனிப்புப் பொருட்கள் உடலுக்கு அளவுக்கு மீறினால் பல தீமைகளை ஏற்படுத்தும். பொதுவாக இது உடல் எடையை அதிகரிக்கும் என்று தெரிந்த விஷயம் தான். ஆனால் அதைவிட முக்கியமாக, இது முடியின் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடியது. நாம் அதிக அளவில் சர்க்கரை கொண்ட உணவுகளை சாப்பிட்டால், உடலில் இன்சுலின் அளவு திடீரென உயர்கிறது. இந்த மாற்றம் ஹார்மோன் சமநிலையை பாதித்து, ஆண்ட்ரோஜன் என்ற ஹார்மோன் அளவை அதிகரிக்கச் செய்கிறது.

ஆண்ட்ரோஜன் அதிகரித்தால், அது நேரடியாக முடியின் வேர்களை பாதித்து, அவற்றை பலவீனமாக்குகிறது. இதனால் முடி மெதுவாக உதிரத் தொடங்கும். சிலருக்கு முடி மெல்ல மெல்ல மெல்லியதாகி, வளர்ச்சி குறையும். குறிப்பாக பெண்களில் இது அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும், PCOD மற்றும் PCOS போன்ற ஹார்மோன் பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு, இனிப்புகளை அதிகம் சாப்பிடுவது நிலையை இன்னும் மோசமாக்கும். ஏற்கனவே ஹார்மோன் சமநிலை பாதிக்கப்பட்டிருப்பதால், சர்க்கரை அதிகரிப்பு முடி உதிர்வை வேகமாக அதிகரிக்கலாம்.

அதனால், தினசரி உணவில் இனிப்புகளை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்து, சர்க்கரை உட்கொள்ளுதலை குறைத்தால், முடி உதிர்வை கட்டுப்படுத்தி, முடி ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.

Related Articles

Related image1
Hair Growth: முடி கொட்டுதா? அடர்த்தியான கூந்தலுக்கு உதவும் 11 சூப்பர் உணவுகள்! இன்றே டயட்டில் சேர்த்திடுங்க!
Related image2
Hair Fall Tips : சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தலைமுடியைப் பாதுகாப்பது எப்படி? வறட்சியைத் தடுக்க 4 சிம்பிள் டிப்ஸ்!
35
மைதா பொருட்கள், பிரெட் துண்டுகள்.!
Image Credit : Getty

மைதா பொருட்கள், பிரெட் துண்டுகள்.!

மைதாவால் செய்யப்பட்ட உணவுகளும், வெள்ளை பிரெட்டும் உடலுக்கு நல்லதல்ல. மைதா மற்றும் பிற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். இதனால் உடலில் ஆண்ட்ரோஜன் ஹார்மோன்கள் அதிகரித்து, முடி உதிரத் தொடங்கும். அதனால மைதா உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது.பேக்கேஜ் செய்யப்பட்ட மற்றும் ஜங்க் உணவுகள்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிப்ஸ், பீட்சா, பர்கர் போன்ற ஜங்க் உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் இவற்றில் டிரான்ஸ் ஃபேட் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம். இவை உடலில் அழற்சியை ஏற்படுத்துவதோடு, முடிக்குத் தேவையான சத்துக்கள் வேர்களுக்குச் செல்வதையும் தடுக்கும். இதனால் முடி பலவீனமடைந்து உதிரத் தொடங்கும்.
45
மசாலாவும் மசாலா பொருட்களும்.!
Image Credit : Getty

மசாலாவும் மசாலா பொருட்களும்.!

சிலர் உப்பு, மசாலா அதிகம் உள்ள உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால், உப்பு ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. உப்பை அதிகம் சாப்பிட்டால், உடலில் சோடியம் அளவு அதிகரித்து, முடி வறண்டு, உயிரற்றதாக மாறும். முடி அதிகமாக உதிரவும் செய்யும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சிப்ஸ், பாப்கார்ன், ஊறுகாய் போன்றவற்றில் உப்பு அதிகம். எனவே, இவற்றை அளவோடு சாப்பிட வேண்டும். ஆல்கஹால் ஆல்கஹால் குடிப்பதால் உடல் நீர்ச்சத்தை இழக்கும். இதன் பாதிப்பு முடியிலும் தெரியும். இதனால் முடி பலவீனமடைந்து, வறண்டு போகும். கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள் கொழுப்பு அதிகம் உள்ள பால் பொருட்கள் முடியின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இவை உடலில் செபம் (Sebum) உற்பத்தியை அதிகரிக்கும். செபம் என்பது ஒருவித எண்ணெய் பசை. இது முடியின் துளைகளை அடைத்து, முடி வளர்ச்சியைத் தடுத்து, முடி உதிர்வுக்கு வழிவகுக்கும். உங்களுக்கு முடி உதிர்தல் பிரச்சனை இருந்தால், குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

55
கூல் டிரிங்ஸ் மற்றும் சோடாக்கள்.!
Image Credit : Getty

கூல் டிரிங்ஸ் மற்றும் சோடாக்கள்.!

கூல் டிரிங்க்ஸ், சோடா, எனர்ஜி டிரிங்க்ஸ் போன்றவற்றை அதிகம் குடித்தாலும் முடி கொட்டும். இவற்றில் 'ஹை ஃபிரக்டோஸ் கார்ன் சிரப்' (High Fructose Corn Syrup) அதிகமாக உள்ளது. இது முடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை தடுப்பதால், முடி அதிகமாக உதிரும்.முடி உதிராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?முடி உதிராமல் இருக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். குறிப்பாக முட்டைக்கோஸ், கீரை, கேரட் போன்ற காய்கறிகளை சாப்பிட வேண்டும். பாதாம், வால்நட்ஸ், தயிர், தேன், ஃப்ரெஷ் பழங்கள், உப்பு குறைவாக உள்ள உணவுகளை சாப்பிட்டால் உங்கள் முடி வலுவாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
முடி வளர்ச்சி
முடி உதிர்தல் தடுப்பு
உலர்ந்த கூந்தலுக்கான ஹேர் மாஸ்க்
குழாயில் முடி அடைப்பு
உணவு
உணவு சேர்க்கைகள்
உடற்பயிற்சிக்கான உணவுகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tomato Face Packs : சரும அழுக்கை நீக்கி 'முகத்தை' பளீச்னு மாத்தும் 'தக்காளி' பேஸ்பேக்!
Recommended image2
முடி உதிர்தலை நிறுத்த '6' சிறந்த வழிகள்
Recommended image3
Winter Skincare Mistakes : குளிர்கால சரும பராமரிப்பில் இதை மட்டும் செய்யாதீங்க! சருமத்தை கெடுக்கும் '5' விஷயங்கள்
Related Stories
Recommended image1
Hair Growth: முடி கொட்டுதா? அடர்த்தியான கூந்தலுக்கு உதவும் 11 சூப்பர் உணவுகள்! இன்றே டயட்டில் சேர்த்திடுங்க!
Recommended image2
Hair Fall Tips : சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தலைமுடியைப் பாதுகாப்பது எப்படி? வறட்சியைத் தடுக்க 4 சிம்பிள் டிப்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved