MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உடற்பயிற்சி
  • மூளையை சுறுசுறுப்பாக்கும் வாக்கிங்!! எத்தனை நிமிஷம் நடக்கனும் தெரியுமா?

மூளையை சுறுசுறுப்பாக்கும் வாக்கிங்!! எத்தனை நிமிஷம் நடக்கனும் தெரியுமா?

தினமும் வெறும் 5 நிமிடங்கள் நடந்தால் மூளையின் செயல்பாடு சிறப்பாக மாறும். அதை குறித்த டிப்ஸ் இங்கே..

1 Min read
Author : Kalai Selvi
| Updated : Jun 10 2025, 08:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Freepik

How Walking For Just 5 Minutes Improves Brain : நடைபயிற்சி உங்களுடைய மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிலும் வயதானவர்கள் சுறுசுறுப்பாக நடைபயிற்சி செய்வது அவர்களுடைய இதயத்துடிப்பை அதிகரிப்பதோடு, இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது. மூளைக்கு இரத்த ஓட்டம் சீராக செல்வதால் மூளையின் செயல்பாடு மேம்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Image Credit : stockPhoto

உங்களுடைய மூளை செயல்பாட்டை நீங்கள் மேம்படுத்த விரும்பினால் அதற்கு வெறும் உடற்பயிற்சிகளும், நடைபயிற்சியும் மட்டும் போதாது. நல்ல உணவு, சிறந்த தூக்கம் போன்றவையும் அவசியம்.

36
Image Credit : stockPhoto

ஆய்வில் தகவல் :

அண்மையில் 65 முதல் 80 வயதுக்குட்பட்ட 585 முதியோரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அவர்களுடைய தூக்கம், உடல் செயல்பாடு, 24 மணி நேரத்திற்கும் மேலாக அமர்ந்திருக்கும் நடத்தை ஆகியவை கவனிக்கப்பட்டது. இது அவர்களின் அறிவாற்றல் செயல்திறனுடன் ஒப்பிடப்பட்டது. இதில் தினமும் உடற்பயிற்சி செய்தவர்கள் சிறந்த மூளை ஆரோக்கியம் கொண்டிருந்ததாக கண்டறியப்பட்டது. இதில் குறிப்பிட்ட சில விஷயங்களை ஆராய்ந்தபோது, ​சுறுசுறுப்பான நடைபயிற்சி கவனிக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

46
Image Credit : our own

போதுமான உடல் செயல்பாடுகளின்றி உடற்பயிற்சியும் செய்யாமல் தவிர்ப்பது மூளை ஆரோக்கியத்தை மோசமாக மாற்றுகிறது. நாள் முழுக்க அமர்ந்தே இருப்பது உங்களுடைய எலும்புகள், நரம்புகள், இதயம், தசைகள் மூளை ஆகியவற்றை மோசமாக பாதிக்கிறது.

56
Image Credit : Getty

வெறும் 5 நிமிடங்கள் போதுமா?

ஆய்வுகளின்படி, தினமும் மிதமான முதல் தீவிரமான உடல் செயல்பாடுகளை செய்பவர்கள் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. அத்துடன் மனம் மற்றும் மூளை ஆரோக்கியம் முன்னேறுகிறது. குறைந்தபட்சம் வெறும் 6 நிமிடங்கள் வேகமாக நடந்தாலும் அவர்களுடைய அறிவாற்றல் மேம்படும்.

66
Image Credit : Google

சுறுசுறுப்பான நடைபயிற்சி:

வேகமாக நடப்பதை தான் சுறுசுறுப்பாக நடைபயிற்சி செய்வதாகக் கூறுகிறார்கள். இது உங்களுடைய இதயத் துடிப்பை அதிகரிக்கும். மெதுவாக நடப்பதை விடவும் வேகமாக நடப்பதால் மூளை துரிதமாக செயல்படுகிறது. சிந்தனை மேம்படுகிறது.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்
நடைப்பயிற்சியின் நன்மைகள்
நடைப்பயிற்சி குறிப்புகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Cold Water After Exercise: உடற்பயிற்சிக்குப் பிறகு குளிர்ந்த தண்ணீர் ஏன் அதிக சுவையாகத் தெரிகிறது? இதுதான் காரணம்!
Recommended image2
Ear health tips: தினமும் Earphone-ல் பாட்டு கேட்கிறீங்களா? காதுகளை காப்பாற்றும் Simple Tips!
Recommended image3
Men dieting: ஆண்கள் டயட் பின்பற்றுவதில் ஏன் சிரமப்படுகிறார்கள்? உணவை விட இதுதான் முக்கிய காரணம் என்கிறது புதிய ஆய்வு
Related Stories
Recommended image1
70 வயசுக்கு மேல இருக்குறவங்க இப்படி வாக்கிங் போங்க; இதய நோய் வராது!
Recommended image2
தினமும் 1 மணி நேரம் வாக்கிங்; 5000 அடிகள் நடப்பதன் நன்மைகள்!!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved