60 வயசுக்கு மேல 'இப்படி' நடங்க!! ஆயுளில் 1 ஆண்டு அதிகரிக்கும்
ஆயுளை நீட்டிப்பதில் நடைபயிற்சி எவ்வாறு உதவுகிறது என இங்கு காணலாம்.

சிலர் வேகமாக நடைபயிற்சி செல்ல நினைத்தாலும் அவர்களுக்கு அது சாத்தியமாகாது. மெதுவாக நடப்பதே வசதியாகவும், இயல்பானதாகவும் தோன்றும். ஆனால் விறுவிறுப்பான நடைபயிற்சிதான் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தப் பதிவில் விறுவிறுப்பான நடைபயிற்சி மேற்கொண்டு எவ்வாறு ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்பது குறித்து காணலாம்.
வரலாற்றில் நடைபயிற்சி ஆயுளை அதிகரிப்பதில் எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து பல குறிப்புகள் உள்ளன. சமீபத்திய ஆய்வுகளும் பல நோய்கள் வரும் வாய்ப்பைக் குறைத்து ஆயுள் காலத்தை நீட்டிக்க நடைபயிற்சி உதவுவதாக தெளிவுபடுத்துகின்றன. கிட்டத்தட்ட 8000 காலடிகளுக்கு மேல் தினமும் நடப்பது அகால மரணத்தின் ஆபத்தை பாதியாக குறைப்பதாக தெரியவந்துள்ளது.
நீங்கள் ஒரு நிமிடத்திற்கு 100 அடிகளுக்கு மேல் நடந்தால் கூடுதலாக நன்மைகள் கிடைக்கும். தினமும் ஏழு நிமிடங்கள் வேகமாக நடப்பது உங்களுடைய இதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்கும். இதய நோய் வருவதற்கான அபாயத்தை 14% குறைத்துவிடுகிறது.
ஒருவர் 60 வயதில் வேகமான நடைபயிற்சி செய்தாலும் ஆயுட்காலம் ஒரு வருடம் அதிகமாகும் என்பது உங்களுக்கு தெரியுமா? உங்களுடைய வாழ்க்கை முறை காரணிகளை காட்டிலும் நடைபயிற்சி சிறந்ததாக இருக்கும்.
விறுவிறுப்பான நடைபயிற்சி, மிதமான நடையுடன் ஒப்பிடும்போது புற்றுநோயின் அபாயம் குறையும். நடைபயிற்சி உங்களுடைய மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும். மனம் மற்றும் அறிவாற்றல் நன்மைகள் அதிகமாகும். நடைபயிற்சி செய்வது நீரிழிவு, இதய நோய் ஆகியவற்றை தவிர்க்க உதவும். தினசரி உடல் செயல்பாடு இருப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.