ரெட்ரோ வாக்கிங் பற்றி தெரியுமா? சாதாரண நடைபயிற்சியை விட சிறந்தது!!
ரெட்ரோ வாக்கிங் என சொல்லப்படும் பின்னோக்கி நடத்தல், சாதாரண நடைபயிற்சியை விட ஏன் சிறந்தது என இங்கு காணலாம்.

Benefits of Walking Backwards
நாம் தினமும் முன்னோக்கி நடக்கிறோம். நடைபயிற்சி செய்யும்போது நம்முடைய உடல்கள் முன்னோக்கி இயங்கும் வகையில் தான் பயிற்சி மேற்கொள்கிறோம். ஆனால் ரெட்ரோ வாக்கிங் என சொல்லப்படும் பின்னோக்கி நடத்தல் உடலுக்கு கூடுதல் நன்மைகளை செய்கிறது. இந்தப் பதிவில் ஒருவர் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது பின்னோக்கி நடப்பதை ஏன் வழக்கப்படுத்த வேண்டும் என்பது குறித்து காண்போம்.
பின்னோக்கி நடப்பதன் நன்மைகள்:
நீங்கள் வழக்கமாக நடக்கும்போது தசைகள், கன்று (calf), தொடை எலும்புகள், பிட்டம், உடலின் மையப் பகுதி ஆகியவை செயல்படும். பின்னோக்கி நடந்தால் இவை தவிர செயல்படாத தசைகளும் இயக்கத்திற்கு உட்படும். உங்களுடைய தோரணை, ஈர்ப்பு மையத்தை பின்னோக்கி நடத்தல் மாற்றுகிறது. உடலுக்கு சமநிலை, ஒருங்கிணைப்பு, மூட்டுகள் உறுதி, முழங்கால்கள், இடுப்பைச் சுற்றி சதை குறைய உதவுகிறது.
முழங்கால் வலி:
உங்களுக்கு முழங்காலில் வலி அல்லது மூட்டு விறைப்பு பிரச்சனை இருந்தால் பின்னோக்கி நடப்பது நிவாரணமாக அமையும். பின்னோக்கி நடப்பது மூட்டுகளில் அழுத்தத்தைக் குறைக்கிறது. முழங்கால்களைச் சுற்றி அமைந்திருக்கும் தசைகளை உறுதியாக்கும். முழங்கால் காயங்கள், அறுவை சிகிச்சை செய்தோர், மூட்டு பிரச்சினைகளுக்கு சிகிச்சை எடுப்போர் பின்னோக்கி நடக்கலாம்.
எடை குறையும்!
முன்னோக்கி நடக்கும் சாதாரண நடைபயிற்சியை விட பின்னோக்கி நடத்தல் அதிக கலோரிகளை எரிக்கும். நாம் பின்னோக்கி நடக்கும்போது அதிக ஆற்றல் செலவிடப்படும். இதனால் அதிக ஆக்ஸிஜனைப் பயன்படுத்துவீர்கள். இதயத் துடிப்பு அதிகரிக்கும்.
மூளை செயல்பாடு;
உடலுக்கு நெகிவுத்தன்மை கிடைப்பதோடு மூளைக்கும் நல்லது. ஒரே திசையில் பழக்கப்பட்ட மாதிரி நடக்காமல் எதிர் திசையில் நடப்பது மூளை செயல்பாடுகளை துரிதமாக்கும். இதனால் சிந்தனைத் திறன் கூட மேம்படும்.
ஏன் சிறந்தது?
சாதாரணமாக நடக்குபோது குதிங்கால் முதலில் தரையில்படும். பின்னர் விரல்களை வைத்து நடப்போம். ஆனால் பின்னோக்கி நடக்குபோது இது எதிர்மறையாக நடக்கும். முதலில் விரல்கள் பின்னர் குதிங்கால் தரையில்படுமாறு நடப்போம். வழக்கத்தைவிட இதற்காக அதிக கவனம், மெனக்கெடுதல் தேவை. இதனால் உடலுக்கும் மூளைக்கும் ஒருங்கிணைப்பு கிடைக்கிறது. சாதாரண நடைபயிற்சியை விட 40 சதவீதம் அதிகமான கலோரிகள் எரிக்கப்படுவதாக ஆய்வுகளும் கூறுகின்றன.
மற்ற நன்மைகள்:
இதய ஆரோக்கியம், தசை வலிமைகால், நாள்பட்ட நோய்களின் அபாயம் குறைதல், கீழ் உடல் வலிமை பெறுவது, உடல் சமநிலை போன்ற நன்மைகளும் கிடைக்கின்றன.