பெண்கள் இடப்பக்கம் மூக்குத்தி அணிவதால் இவ்ளோ நன்மைகளா?
மூக்குத்தி பெண்களுக்கு அழகாக இருந்தாலும், அதில் மருத்துவ பலன்களும் உண்டு என கூறப்படுகிறது.
மூக்கு குத்துவது பெண்களுக்கு கூடுதல் அழகு மட்டும் சேர்க்கும் விஷயம் என பலரும் நினைத்து கொள்கின்றனர். பெண்களுடைய மூக்கில் துளையிட்டு தங்க மூக்குத்தி அணியும்போது உடல் வெப்பம் கிரகிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கெட்ட வாயு வெளியேறவும் மூக்குத்தி அணிவது உதவியாக உள்ளது.
மூக்குத்தி அணியும்போது சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு தொடர்புடைய நோய்கள், பார்வையில் வரும் தொந்தரவு, நரம்பு தொடர்புடைய நோய்களையும் தடுக்க முடிகிறது. இந்தியாவில் உள்ள இந்து சமயத்தோர் மூக்கு குத்துவதை அதிகமாக பின்பற்றுகின்றனர். மூக்கு குத்தி கொள்ளும் பெண் திருமணத்திற்கு தயாராக இருப்பதை குறிக்கிறது. திருமணமானவர்களும் மூக்குத்தி அணிகின்றனர்.
ஆனால் எந்த பக்கம் மூக்கு குத்தி கொள்வது என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது. இந்தியாவின் வடதிசையில் உள்ள பெண்கள் மூக்கின் இடப்பக்கமும், தென்னிந்திய பெண்கள் மூக்கின் வலப்பக்கமும் மூக்குத்தி அணிந்துகொள்கின்றனர்.
எந்த பக்கம் அணிதல் நல்லது?
பெண்கள் இடது பக்கம் மூக்கு குத்தி கொள்வதுதான் நல்லது. ஆண்களுக்கு வலப்பக்கமும், பெண்களுக்கு இடப்பக்கமும் வலுவான பகுதியாக உள்ளது. இப்படி இடப்பக்கம் பெண்கள் மூக்கு குத்தி கொள்ளும்போது தான் அவர்களது வலது பக்க மூளை நன்றாக இயங்கும் என கூறப்படுகிறது.
மூக்குத்தியை இடது பக்கம் அணிந்து கொள்ளும் பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகள் நன்றாக செயல்படும். ஏனெனில் மூக்கின் இடப்பக்கதோடு தொடர்புள்ளது என ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. ஆகவே கர்ப்பிணிகள் பிரசவ நேரத்தில் குறைந்த வலியை சந்திக்கின்றனர். எளிதாக குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. சில பெண்கள் மாதவிடாய் பிரச்சனைகளோடு அவதிபடுவர். அவர்களுக்கு நல்லது.
இதையும் படிங்க; பெண்களை மயக்கும் இந்த முத்தங்கள் பத்தி தெரியுமா?
பெண்களுடைய மூக்கில் உள்ள மடல் பகுதியில் துவாரம் இடுவதால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் இருக்கும் கெட்ட வாயு நீங்கும். வலது பக்கமும் சிலர் மூக்குத்தியை அணிந்து கொண்டாலும் இடப்பக்கமே நல்ல பலன்களை தருவதாக சிறந்தது.