- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- முகத்துக்கு சோப்பு யூஸ் பண்றீங்களா? சோப்புல இருக்க 'இந்த' பொருள் பத்தி தெரியுமா?
முகத்துக்கு சோப்பு யூஸ் பண்றீங்களா? சோப்புல இருக்க 'இந்த' பொருள் பத்தி தெரியுமா?
முகத்திற்கு சோப்பு பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Side Effects Of Soap On Face : நான் தினமும் குளிக்கும் போது அல்லது ஃபேஸ் வாஷ் பண்ணும் போது முகத்திற்கு கண்டிப்பாக சோப்பை தான் பயன்படுத்துவோம். ஆனால் முகத்திற்கு சோப்பு போடுவது ஆபத்து தெரியுமா? இதனால் சில விளைவுகள் நேரிடும் என்று அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளன.
முகத்திற்கு சோப்பு ஏன் போடக்கூடாது?
முகத்தில் சோப்பு பயன்படுத்தக் கூடாது என்று சொல்வதற்கு முக்கிய காரணம் சோப்பில் பலவிதமான ரசாயன பொருட்கள் இருக்கிறது என்பதால் தான். தேங்காய் எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் சோப்பு சருமத்திற்கு எந்த வித தீமையும் விளைவிக்காது. ஆனால் இன்றைய நவீன உலகில் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக கண்ட கண்ட தரம் மற்றும் இமைகள் கொண்டு சோப்பு தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் விளைவாக பலவிதமான சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
இதையும் படிங்க: பிறப்புறுப்பில் சோப்பு போடுறப்ப இந்த '1' விஷயம் கவனம்.. 'இப்படி' சுத்தம் பண்றது தான் பெஸ்ட்!!
சோப்பின் ஆபத்து!
சோப்பில் நம் சருமத்தின் pH அளவை மாற்றக்கூடிய தன்மை உள்ளன. உண்மையில் நம்முடைய சருமத்தில் இருக்கும் pH சருமத்தின் பாதுகாப்பு அமில கவசமாக செயல்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் நாம் தினமும் சோப்பு பயன்படுத்தினால் pH அளவு குறைய வாய்ப்பு அதிகம் உள்ளது. இதன் காரணமாக வறண்ட சருமம், அரிப்பு, எரிசல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆக மொத்தத்தில் சருமமானது அதன் இயற்கை எண்ணெய் மற்றும் மென்மையை இழந்து கடுமையாக மாறிவிடும். மேலும் சருமம் உலர்ந்ததாகவும் வந்ததாகவும் மாறிவிடும் மற்றும் செதில்கள் , விரிசல்கள் ஏற்படும்.
இதையும் படிங்க: சோப்பு சுத்தம் தரும்.. ஆனா இந்த '6' பொருள்களை சோப்பு போட்டு கழுவினால் பாதிப்பு வரும்!!
முகத்திற்கு எது சிறந்தது?
முகத்திற்கு சோப்பை பயன்படுத்துவதற்கு பதிலாக நீங்கள் ஃபேஸ் வாஷ் பயன்படுத்தலாம். சோப்பு அழுக்கை மட்டுமல்ல, சருமத்தின் இயற்கை அணை ஈரப்பதத்தை அகற்றிவிடும். ஆனால் ஃபேஸ் வாஷ் அழுக்கை மட்டுமே நீக்கும் மற்றும் சருமத்தின் pH அளவை பராமரிக்கும். எனவே நீங்கள் உங்களது முகத்திற்கு சோப்பிற்கு பதிலாக உங்களுடைய முகவகைக்கு ஏற்ப ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது சிறந்தது என்று பரிந்துரைக்கப்படுகிறது. தினமும் இரண்டு முறை ஃபேஸ் வாஷ் கொண்டு உங்களது முகத்தை கழுவினால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் அனைத்தும் முற்றிலும் நீங்கிவிடும். ஆக, இனியாவது ஆபத்து விளைவிக்கும் சோப்பை முகத்திற்கு சோப்பு பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.