- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Gray Hair : இந்த வயசுலயே நரை முடியா? இயற்கையா தலைமுடியை கருகருனு மாத்த டிப்ஸ்
Gray Hair : இந்த வயசுலயே நரை முடியா? இயற்கையா தலைமுடியை கருகருனு மாத்த டிப்ஸ்
உங்களுக்கு சீக்கிரமே நரை முடி வரக் கூடாதுன்னு நினைத்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள 5 விஷயங்களை இன்றிலிருந்து பின்பற்றுங்கள்.

Tips To Stop Early Graying of Hair
பொதுவாக வயதானவர்களுக்கு தான் நரை முடி வரும். ஆனால் இந்த காலத்துல பள்ளி செல்லும் சின்ன குழந்தைகள் முதல் இளம் வயது வாலிபர்கள் வரை என நிறைய பேருக்கு நரைமுடி வர ஆரம்பித்துவிட்டது. இதற்கு மரபணு உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் நம்முடைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் உள்ளிட்ட சில விஷயங்களை மாத்தினால், முடி சீக்கிரமே நரைப்பதை தடுக்கலாம், இல்லனா தள்ளிப்போடலாம். சரி, அது என்னென்ன விஷயங்கள் என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆரோக்கியமான உணவுகள் :
இளம் வயதிலேயே நரை முடி வருவதற்கு முக்கிய காரணம் உடலில் போதிய அளவு ஊட்டச்சத்து இல்லாதது தான். அதுவும் குறிப்பாக வைட்டமின் பி12, இரும்புச்சத்து, காப்பர், புரதம் இதுபோன்ற ஊட்டச்சத்துக்கள் தான் முடி ஆரோக்கியத்துக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. சத்தான உணவுகளை சாப்பிட்டால் முடி வலுவாக இருப்பது மட்டுமல்லாமல், நரை வருவதும் தடுக்கப்படும். எனவே, ஆரோக்கியமான கூந்தலை பெற கீரை வகைகள், பீன்ஸ், பருப்பு வகைகள், முட்டை, மீன், நட்ஸ், பயறுகள் போன்றவற்றை உங்களது உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி, தினமும் காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைய சாப்பிடுங்கள்.
மன அழுத்தத்தை குறைக்கவும்:
இன்றைய வாழ்க்கை முறையில மன அழுத்தம் என்பது தவிர்க்க முடியாதது ஒன்றாகும். ஆனால், அதிகமான மன அழுத்தம் முடி நரைப்பது முக்கிய காரணமாக அமையும். எனவே, மன அழுத்தத்தை குறைக்க தினமும் யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். கூடவே சமைப்பது நடனம் ஆடுவது பாடல் கேட்பது பாடுவது புத்தகங்களை படிப்பது போன்ற உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யுங்கள். மனம் நிம்மதியாக இருந்தால் மட்டுமே முடி சீக்கிரமாக நரைக்காது.
கெமிக்கல் பொருட்களை பயன்படுத்தாதே:
நம் முடிக்கு பயன்படுத்தும் ஷாம்பு, கண்டிஷனர், ஹேர் டை ஆகியவற்றில் நிறைய கெமிக்கல்ஸ் உள்ளதால், அது முடியின் வேர்களை பலவீனப்படுத்தி, முடி சீக்கிரமே நரைப்பதற்கு வழிவகுக்கும். எனவே, கெமிக்கல் கம்மியாக இருக்கும் பொருட்களை பார்த்து வாங்கி பயன்படுத்துங்கள். மேலும் தலைமுடிக்கு இயற்கையான ஹேர் பேக்ஸ் மற்றும் எண்ணெய்கள் பயன்படுத்துங்கள்.
எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யுங்கள் :
தலைமுடிக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் பண்ணுவது கூந்தலின் ஆரோக்கியத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது. இப்படி செய்வதன் மூலம் உச்சம் தலையில் ரத்த ஓட்டம் சீராகி முடியின் வேர்களுக்கு ஊட்டச்சத்து அப்படியே கிடைக்கும். இதற்கு நீங்கள் தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம். வாரத்திற்கு 2-3 முறை தலைமுடிக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து, பிறகு மைல்டான ஷாம்பு போட்டு குளியுங்கள். முடி ஆரோக்கியமாக இருக்கும்.
ஆல்கஹால் மற்றும் சிகரெட் குடிப்பதை தவிர்க்கவும் :
சிகரெட் பிடிப்பது மற்றும் மது அருந்துவது முடியின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். இவை உடம்பில் இருக்கும் அன்டிஆக்ஸிடன்ட்களை குறைத்து, முடி நரைக்க வழிவகுக்கும். கூடவே, முடியின் வேர்களை பலவீனப்படுத்திவிடும். மேலும் சீக்கிரமாக முடியும் நரைக்க ஆரம்பிக்கும். எனவே முடி ஆரோக்கியமாக இருக்க இந்த பழக்கத்தை உடனே விட்டு விடுங்கள்.
மேலே சொன்ன சின்ன சின்ன பழக்கங்களை உங்களது தினசரி வாழ்க்கையில் கொண்டு வந்தால் சீக்கிரமே முடி நரைப்பதை தள்ளி போடலாம் மற்றும் ஆரோக்கியமான கூந்தலையும் பெறலாம்.