- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- White Hair : முடி நரைச்சு போக இந்த '1' ஊட்டச்சத்து குறைப்பாடு தான் காரணம்!! உடனே கண்டுபிடிச்சு சரி பண்ணுங்க
White Hair : முடி நரைச்சு போக இந்த '1' ஊட்டச்சத்து குறைப்பாடு தான் காரணம்!! உடனே கண்டுபிடிச்சு சரி பண்ணுங்க
இளம் வயதிலேயே முடி நரைப்பதற்கு ஒரு குறிப்பிட்ட வைட்டமின் குறைபாடு காரணமாகும். அது என்ன? அதை சரி செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

Gray Hair and Vitamin Deficiency
இப்போதெல்லாம் இளம் வயதிலேயே பலர் நரை முடி பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். இந்த வெள்ளை முடிகளை மறைக்க ஹென்னா, கலர் என பலவற்றைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், வைட்டமின் குறைபாட்டால் இந்த நரை முடி வருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், ஒரே ஒரு வைட்டமின் குறைபாட்டால் இளம் வயதிலேயே முடி நரைத்துவிடும். அதுதான் வைட்டமின் பி12.
வைட்டமின் பி12 குறைபாட்டால், முடி விரைவில் நரைக்கத் தொடங்குகிறது. இது தவிர, அதிக மன அழுத்தம், தூக்கமின்மை, தவறான உணவுப் பழக்கம் ஆகியவையும் இந்தப் பிரச்சனையை அதிகமாக்குகின்றன. சரியான உணவு, போதுமான தண்ணீர் மற்றும் இயற்கையான முடி பராமரிப்பு மூலம், இந்த நரை முடி பிரச்சனைக்கு தீர்வு காணலாம். உங்கள் முடியை நீண்ட காலத்திற்கு கருமையாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்கலாம்.
நரை முடிக்கு காரணம் என்ன?
முடியின் நிறம் மெலனின் என்ற நிறமியைப் பொறுத்தது. உடலில் வைட்டமின் பி12 குறைவாக இருந்தால், மெலனின் உற்பத்தி குறைந்து, உங்கள் முடி கருப்பு நிறத்தில் இருந்து மெதுவாக வெள்ளையாக மாறும். சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு வைட்டமின் பி12 மிகவும் அவசியம். இதன் குறைபாடு முடியை பலவீனப்படுத்துவதோடு, இளநரைக்கும் வழிவகுக்கிறது.
வைட்டமின் பி12 குறைபாட்டை குறைக்க என்ன செய்வது?
நீங்கள் வைட்டமின் பி12 குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவரை அணுகி இரத்தப் பரிசோதனை செய்வது அவசியம். அறிக்கையின் அடிப்படையில், உங்கள் மருத்துவர் பரிந்துரைத்தபடி சப்ளிமெண்ட்ஸ் அல்லது மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
வைட்டமின் பி12 அதிகம் உள்ள உணவுகள் யாவை?
முட்டை, பால், பால் பொருட்கள், இறைச்சி, மீன், காளான் போன்ற இயற்கையாக பி12 வழங்கும் உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த உணவுகள் பி12 குறைபாட்டைக் குறைக்கவும், ஆரோக்கியமான முடியை ஊக்குவிக்கவும் உதவுகின்றன.
இவையும் முக்கியம்...
முடி ஆரோக்கியத்திற்கு வைட்டமின் பி12 மட்டுமல்ல, சரிவிகித உணவும் மிகவும் அவசியம். தினமும் பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள், நிறைய தண்ணீர் குடியுங்கள். மன அழுத்தத்தைத் தவிர்க்கவும். நல்ல தூக்கம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை உங்கள் முடியை வலுவாக வைத்திருக்கவும், அதன் இயற்கையான நிறத்தை நீண்ட காலத்திற்கு தக்கவைக்கவும் உதவும்.
