- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Urad Dal Face Pack : ஒரு பைசா செலவில்லாம முகத்தை ஜொலிக்க வைக்கும் உளுந்து!! இப்படி யூஸ் பண்ணுங்க
Urad Dal Face Pack : ஒரு பைசா செலவில்லாம முகத்தை ஜொலிக்க வைக்கும் உளுந்து!! இப்படி யூஸ் பண்ணுங்க
வீட்டில் உள்ள உளுந்து வைத்து முகத்தை பராமரிக்கும் அட்டகாசமான பேஸ் பேக் டிப்ஸ்..

Urad Dal Face Pack
உளுந்து வீட்டில் டிபன் செய்ய இட்லி, ஆப்பம் போன்ற மாவுகளில் பயன்படுத்துவார்கள். இதை உணவுக்கு மட்டுமின்றி முகத்திற்கும் பயன்படுத்தலாம். சருமத்தை நீரற்றமாக வைத்து முக அழகை பராமரிக்க உளுந்து உதவுகிறது. இந்தப் பதிவில் செலவில்லாமல் வெறும் உளுந்து வைத்து முகத்தை எவ்வாறு அழகு படுத்துவது என்பதை காணலாம்.
உளுந்தை பயன்படுத்தி ஃபேஸ் பேக் போடும்போது முகம் இயற்கையாகவே ப்ளீச்சிங் செய்தது போல பளபளக்கும். உளுந்தில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சருமத்தை ஜொலிக்க செய்யும். முகத்தில் உள்ள இறந்த செல்கள், கரும்புள்ளிகள் ஆகியவற்றை குறைப்பதில் உளுந்து உதவுவதாக நம்பப்படுகிறது. எண்ணெய் வழியும் சருமம் உள்ளவர்களுக்கு நல்ல பலனளிக்கும். முகப்பருக்களை நீக்க உதவும்.
ஜொலிக்கும் சருமம்
உளுந்து ஃபேஸ் பேக் போடுவதால் முகத்தில் உள்ள இறந்த சரும செல்கள் நீங்கும். மென்மையாக, ஜொலிப்பாக சருமம் மாறும். கரும்புள்ளிகள், மங்கு போன்றவை குறைய உதவும்.
முகப்பருக்கள்:
உளுந்தில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராட உதவுகிறது. முகத்தில் உள்ள துளைகளை சுத்தம் செய்து முகப்பருக்களை குறைக்க உதவுகிறது.
கருமை நீங்க!
வெயிலில் செல்லும் போது முகம் கருத்துவிடும். இதை தவிர்க்க உளுந்து ஃபேஸ் பேக் உதவுகிறது. உளுந்தில் உள்ள குளிர்ச்சியான பண்புகள் வெயிலில் கருத்த சருமத்தை பராமரிக்க உதவும்.
உளுந்து ஃபேஸ் பேக்
உளுந்தை ஊறவிட்டு அதை அரைத்து பேஸ்ட் ஆக எடுத்துக் கொள்ளவும். இதனுடன் அரிசி பொடி, தயிர் ஆகியவை கலந்து முகத்தில் பூசிக் கொள்ளவும். இதனை 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் புத்துணர்வுடன் பளபளப்பாக மாறும்.