தினமும் இரவு தூங்கும் முன் 'இத' முகத்தில் தடவுங்க... இனி முக சுருக்க பிரச்சினை வராது!
முக சுருக்கத்தை தடுக்க நீங்கள் விலையுயர்ந்த கிரீம்களை பயன்படுத்துவதற்கு பதிலாக 'தேங்காய் எண்ணெய்' பயன்படுத்துவது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.
தோல் சுருக்கமாக இருக்கிறதா..? ஆரம்ப நிலையிலேயே சருமத்தை கவனித்துக்கொள்வதன் மூலம் வயதான அறிகுறிகளை தடுக்கலாம். உண்மையில், தோல் சுருக்கம், நெற்றியில் சுருக்கங்கள், கண்களுக்குக் கீழே கரும்புள்ளிகள் போன்றவை வயதானதன் அறிகுறிகளாகும்.
சன் ஸ்கிரீன் இல்லாமல் சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருந்தால், உங்கள் சருமம் விரைவில் சுருக்கம் அடைந்துவிடும். அதுமட்டுமின்றி, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் ஆகியவை சருமத்திற்கு அதிக தீங்கை விளைவிக்கும். இவையே விரைவில் முகத்தில் சுருக்கங்களை ஏற்படுத்துகின்றன.
சுருக்கங்களைப் போக்க பலர் விலையுயர்ந்த கிரீம்களைப் பயன்படுத்துகிறார்கள். இது நல்ல வேலை செய்தாலும், சுருக்கங்களை முற்றிலுமாக அகற்றாது. எனவே, நீங்கள் விலையுயர்ந்த கிரீம்களை பயன்படுத்துவதற்கு பதிலாக 'தேங்காய் எண்ணெய்' பயன்படுத்துவது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.
தேங்காய் எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. இது சருமத்தில் கொலாஜனை உற்பத்தி செய்து சருமத்தை மென்மையாக வைத்திருக்கும். முகத்தில் தேங்காய் எண்ணெயை தொடர்ந்து மசாஜ் செய்வது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது. சருமத்தில் சுருக்கம் இல்லாமல் இறுக்கமாக்கும்.
இதையும் படிங்க: முக சுருக்கத்தால் அவதிப்படுறீங்களா? கவலையை விடுங்க..இந்த ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணுங்க!
வறண்ட சருமம் அதிக சுருக்கங்களை ஏற்படுத்துகிறது. ஆனால் தேங்காய் எண்ணெய் தடவினால் இந்தப் பிரச்சனையை நீக்கலாம். தேங்காய் எண்ணெய் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் சருமத்தை வளர்க்கிறது. இதில் உள்ள இயற்கை அமிலங்கள் சருமத்தை மென்மையாக்குகிறது.
இதையும் படிங்க: முதுமையில் இளமை துள்ள இந்த பழங்களை கண்டிப்பாக சாப்பிடுங்கள்..!!
தினமும் இரவில் படுக்கும் முன் சில துளிகள் தேங்காய் எண்ணெயை எடுத்து தோலில் நன்றாக மசாஜ் செய்யவும். சருமம் எண்ணெயை முழுமையாக உறிஞ்சும் வரை மசாஜ் செய்யவும். பின் ஈரமான துணியால் முகத்தை துடைக்கவும். இதில் 3 துளி தேங்காயுடன் 2 சொட்டு ஆமணக்கு எண்ணெய் கலந்து முகத்தில் தடவலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இரவில் படுக்கும் முன் இதைச் செய்தால் சருமம் மிகவும் மென்மையாக மாறும். இதனால் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படாது. வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்களின் சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து முகத்தில் நன்கு மசாஜ் செய்யவும். இதை தினமும் இரவில் தூங்கும் முன் செய்து வந்தால், சரும செல்கள் ஆரோக்கியமாக இருக்கும்.