- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க
30 வயதை தாண்டிய ஆண்கள் இளமையாக தெரிய தினமும் பின்பற்ற வேண்டிய சில ஸ்கின் கேர் டிப்ஸ் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Men’s Skincare Routine 30s
சரும பராமரிப்பு என்றால் பெண்களிக்குரியது என்று பல ஆண்களின் எண்ணம். மேலும் பெண்களை போல ஆண்கள் தங்களது சருமத்தில் அக்கறை காட்டமாட்டார்கள். இதனால் சீக்கிரமே வயதான தோற்றம் முகத்தில் தெரியும். எனவே, 30 வயதை கடந்த ஆண்கள் இங்கு சொல்லப்பட்டுள்ள சிம்பிள் ஸ்கின் கேர் டிப்ஸை மட்டும் தினமும் பின்பற்றினால் போதும். இளமையாக தெரிவீர்கள். அந்த டிப்ஸ் என்னவென்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
க்ளன்சர் பயன்பாடு :
ஸ்கின் பளிச்சுன்னு இருக்க லாக்டிக் அமிலம் மற்றும் கிளைக்காலிக் போன்றவை இருக்கும் க்ளன்சரை பயன்படுத்துங்கள். அது சிறப்பாக எக்ஸ்ஃபோலியேட் ஆகும்.
மாய்ஸ்ச்சரைசர் :
க்ளன்சர் பயன்படுத்திய பிறகு அல்லது குளித்து முடித்த பின் கட்டாயம் மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்த வேண்டும். ஆனால் மாய்ஸ்ரைசர் தேர்வு செய்வது ரொம்பவே முக்கியம். ஏனெனில் 30 வயதிற்கு பிறகு சருமம் வறண்டு போய்விடும். எனவே ஹைலூரானிக் அமிலம் மற்றும் செரமைடு ஆகியவை இருக்கும் மாய்ஸ்ரைசரை பயன்படுத்துங்கள்.
சன் ஸ்க்ரீன் :
பெரும்பாலான ஆண்கள் சன் ஸ்கிரீன் பயன்படுத்தவே மாட்டார்கள்.ஆனால் 30 வயதை கடந்த ஆண்கள் கட்டாயம் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். அதுவும் spf50க்கு மேல் இருப்பதாக பார்த்து வாங்கி பயன்படுத்தவும். நீங்கள் வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கு சுமார் 15 நிமிடங்களுக்கு முன் சன் ஸ்கிரீன் அப்ளை செய்து விடுங்கள். அதுபோல வெளியில் இருக்கும் சமயத்தில் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை மீண்டும் அப்ளை செய்யவும்.
இரவு நேர ஸ்கின் கேர் :
30 வயதிற்கு மேல் இருக்கும் ஆண்கள் ஆன்டி ஏஜிங் சீரம் பயன்படுத்த வேண்டும். இதற்கு ரெட்டினால் பயன்படுத்துங்கள். ஏனெனில் இது ஒரு சக்தி வாய்ந்த ஆக்டிவ் மூலக்கூறு ஆகும். ஆனால் இதை தினமும் பயன்படுத்தக்கூடாது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் பயன்படுத்த வேண்டும்.
ரெட்டினால் பயன்படுத்தாத மற்ற சமயங்களில் வைட்டமின் சி இருக்கும் சீரத்தை பயன்படுத்தவும். இதுதவிர கோஜிக் அமிலம், ஆல்பா ஆர்ப்யூட்டன், அசிட்டிக் அமிலம் போன்ற ஏதாவது மூலக்கூறுகளும் அவற்றில் இருந்தால் நல்லது.
எனவே, ஆண்களே 30 வயதான பிறகு மேலே சொல்லப்பட்டுள்ள ஸ்கின் கேரை தினமும் செய்யுங்கள், இளமையாக தெரிவீர்கள்.

