முகத்திற்கு சோப்பு போடுறது குத்தமா? இதுல கூட பக்க விளைவுகள் இருக்கு
Face Soap Side Effects : முகத்திற்கு சோப்பு போட்டு கழுவினால் நன்றாக சுத்தம் செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு.

முகத்திற்கு சோப்பு போடுறது குத்தமா? இதுல கூட பக்க விளைவுகள் இருக்கு
முகத்தை கழுவுதல் என்பது தோல் பராமரிப்பு வழக்கத்தில் இன்றியமையாது ஒரு பகுதியாகவும். முகத்தை சுத்தம் செய்வதன் மூலம் அழுக்குகள், கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களில் இருந்து விடுபடலாம். ஏனெனில், அவை பின்னர் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை ஏற்படுத்தும். பொதுவாக நம்மில் பல முகத்தை சுத்தம் செய்வதற்கு சோப்பு பயன்படுத்துகிறோம். மேலும் பல பெண்களுக்கும் முகத்தில் சோப்பு போடலாமா கூடாது என்று கேள்வியும் உள்ளது. எனவே, இந்த பதிவில் முகத்திற்கு சோப்பு போடலாமா இல்லையா என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
முகத்திற்கு சோப்பு போடலாமா?
உடலில் மற்ற பகுதிகளை விட முகத்தின் தோல் மிகவும் மென்மையானது. இத்தை சூழலையில் நீங்கள் முகத்திற்க்கு சோப்பு போடும்போது முகத்தின் தோலில் எரிச்சல் உணர்வு ஏற்படும். இது தவிர வறட்சி, அரிப்பு மற்றும் வெடிப்புகள் போன்ற பிற சருமப் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். முக்கியமாக முகத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெயை அகற்றி முகப்பருக்களை ஏற்படுத்தும். காரணம் சில சோப்புகளில் pH அளவு அதிகமாக உள்ளன. சோப்பு மட்டுமல்ல நீங்கள் உங்களது உடலை சுத்தம் செய்ய பயன்படுத்தும் எந்த ஒரு பொருட்களையும் உங்களது முகத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
முகத்திற்கு சோப்பு போடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்:
சோப்பு நம் முகத்தில் இருக்கும் அழுக்கு, தூசி, கிருமிகள், எண்ணெய் மற்றும் மேக்கப் ஆகியவற்றை திறம்பட அகற்றிவிடும். இருந்தாலும் இது சருமத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெயை அகற்றிவிடும். இதனால் சருமத்தில் வறட்சி அரிப்பு, எரிச்சல் வெடிப்பு கூட ஏற்படும். இதற்கு முக்கிய காரணம் சோப்பில் இருக்கும் pH அளவானது முக சருமத்திற்கு ஏற்றதை விட அதிகமாக இருப்பதால்தான். இதனால் முகத்தின் தோலானது அதன் மென்மையை இழந்து பல சிக்கல்களை சந்திக்கும்.
இதையும் படிங்க : சோப்பு சுத்தம் தரும்.. ஆனா இந்த '6' பொருள்களை சோப்பு போட்டு கழுவினால் பாதிப்பு வரும்!!
வறட்சி
முகத்திற்கு சோப்பு பயன்படுத்துவதால் ஏற்படும் மற்றொரு பக்க விளைவு என்னவென்றால், வறட்சி மற்றும் எரிச்சல். சில சோப்புகளில் கடுமையான ரசாயனங்கள் கலந்திருப்பதால், அவை முகத்தின் தோலில் இருக்கும் இயற்கையான எண்ணெயை அகற்றி சருமத்தை இருக்கமாக்கி வறண்டதாக மாற்றிவிடும். அதுவும் குறிப்பாக உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களின் முகத்தில் தடிப்பு, சிவத்தல், அரிப்பு போன்ற சரும பிரச்சனையை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க : பிறப்புறுப்பில் சோப்பு போடுறப்ப இந்த '1' விஷயம் கவனம்.. 'இப்படி' சுத்தம் பண்றது தான் பெஸ்ட்!!
முகப்பருக்கள், வெடிப்புகள்
முகத்திற்கு சோப்பை பயன்படுத்துவதால் முகப்பருக்கள் வெடிப்புகள் ஏற்படும். மேலும் முகப்பருவை மோசமாக்கும் சில பொருட்கள் சில சோப்புகளில் உள்ளன. இதனால் முகத்தில் அதிக பொருட்கள் கரும்புள்ளிகள் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். முக்கியமாக உங்களது முகத்தில் பருக்கள் அதிகமாக இருந்தால், நீங்கள் முகத்திற்கு சோப்பு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக நீங்கள் மென்மையான ஃபேஸ் வாஷ் பயன்படுத்துங்கள்.
சோப்பிற்கு பதில் என்ன பயன்படுத்தலாம்?
நீங்கள் உங்களது முகத்திற்கு சோப்பு பயன்படுத்துவதற்கு பதிலாக மென்மையான ஃபேஸ் வாஷ் பயன்படுத்தலாம். இது தவிர உங்களது முகத்தை சுத்தம் செய்வதற்கு மென்மையான கிளிசரின் கொண்டு சுத்தம் செய்யலாம். முக்கியமாக உங்களது முகத்திற்கு நீங்கள் பயன்படுத்துவது எந்த பொருட்களின் pH அளவை கண்டிப்பாக சரிப்பார்க்கவும்.