குளிர்காலத்தில் பொடுகு தொல்லை? தடுப்பதற்கான சூப்பர் வழிகள் இதோ..!
ஒழுங்கான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் பலர் பொடுகு பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். அதுவும் குளிர் காலம் என்றால் சொல்லவே வேண்டாம். எனவே, குளிர்காலத்தில் ஏற்படும் பொடுகு பிரச்சனையை தடுக்க இந்த குறிப்புகளை பின்பற்றவும்..
தற்போது குளிர்காலம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த காலகட்டத்தில், நம் தலைமுடியை சரியாக பராமரிக்காமல் விட்டால் முடி உதிர்தல் மற்றும் எண்ணெய் பசை போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும். குறிப்பாக குளிர்காலத்தில் பொடுகு தொல்லை மிகப்பெரிய பிரச்சனையாகும்.
குளிர்காலத்தில் பலர் பொடுகு தொல்லையால் அவதிப்படுவார்கள். மேலும் இச்சூழ்நிலையில், பொடுகு எளிதில் நீங்காது. இதனால், உச்சந்தலையில் அரிப்பு அதிகரிக்கும். எனவே, அடிக்கடி தலையை சுத்தம் செய்ய வேண்டும். எனவே, இந்த குளிர்காலத்தில், பொடுகு பிரச்சினையை தடுக்க இந்த குறிப்புகளை பின்பற்றவும்..
நீங்களும் பொடுகு தொல்லையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், உங்கள் தலைக்கு தேங்காய் எண்ணையை பயன்படுத்துவதற்கு முன், அதை சிறிது சூடாக்கி, மிதமான சூட்டில் தலையில் பயன்படுத்தவும். மற்றொரு வழி என்னவென்றால், தேங்காய் எண்ணெயில் சிறிதளவு எலும்பிச்சை சாறு கலந்து தலைக்கு தடவி வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
இதையும் படிங்க: பொடுகு தொல்லைகள் அவதிப்படுறீங்களா? நிரந்தரமாக ஒழிக்க சூப்பரான டிப்ஸ் இதோ..!!
தோல் வறட்சி மற்றும் தொற்று காரணமாக சிலருக்கு பொடுகு பிரச்சனைகள் வரும். இதற்கு ஒரே வழி என்னவென்றால், பாதாம் எண்ணெயுடன் சில துளிகள் தேயிலை மர எண்ணெயை கலந்து தலையில் தடவவும்.
இதையும் படிங்க: காசே செலவு செய்யாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே பொடுகை வேறோடு அழிக்க இப்படி செய்தால் போதும்.
அதுபோல, கற்றாழை ஜெல்லுடன் வேப்ப இலை பொடி அல்லது வேப்பிலை பேஸ்ட்டை கலந்து தலையில் தடவவும். 30 நிமிடங்களுக்குப் பிறகு, ஷாம்பூ பயன்படுத்தி குளிக்கவும். குறிப்பாக, பொடுகு எதிர்ப்பு ஷாம்பு பயன்படுத்துவது நல்லது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D