Dark Circles : கருவளையத்தை நீக்கும் காபி தூள்! இப்படி யூஸ் பண்ணுங்க
கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையம் போக்க காபி மாஸ்க் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Coffee Eye Mask for Dark Circles
தற்போது பெரும்பாலானோர் கருவளையங்களால் அவதிப்படுகிறார்கள். தூக்கமின்மை, மன அழுத்தம், அதிக நேரம் செல்போன் பயன்படுத்துதல், ஊட்டச்சத்து குறைபாடு, மரபணு பிரச்சனை போன்ற பல காரணங்களால் கண்களுக்கு கீழே கருவளையம் வருகிறது. இதனை போக்க பலர் சந்தையில் விற்பனையாகும் பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால், ஒரு பைசா செலவில்லாமல் வீட்டில் இருக்கும் காபி தூளுடன் சில பொருட்களை சேர்த்து மாஸ்காக போட்டால் விரைவில் கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையத்தை சுலபமாக மறைந்துவிடும். அவை என்னவென்று இப்போது இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
காபி மாஸ் செய்ய தேவையான பொருட்கள் :
காபித்தூள் - ஒரு ஸ்பூன்
பால் அல்லது தேன் - ஒரு ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
ஒரு கிண்ணத்தில் காபித்தூள் மற்றும் பால் அல்லது தேன் சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட் போலாக்கி அதை உங்களது கண்களுக்கு கீழே தடவி சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விட வேண்டும்.
காபி மாஸ்க் பயன்கள் :
காபியில் இருக்கும் காஃபின் கண்களை சுற்றி உள்ள சருமத்தில் ரத்த ஓட்டத்தை சீராக்க உதவும். இதனால் கருவளையங்கள் மறைந்து சருமம் பிரகாசமாக மாறும். மேலும் பால் மற்றும் தேனில் உள்ள சத்துக்கள் சருமத்திற்கு ஊட்டமளித்து சருமத்தை மிருதுவாக மாற்றும்.
நினைவில் கொள்:
- இந்த மாஸ்கை நீங்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தலாம்.
- இந்த மாஸ்க் போட்ட பிறகு நீங்கள் ஏதேனும் சரும அலர்ஜி பிரச்சனையை சந்தித்தால் உடனே அதை பயன்படுத்துவதை நிறுத்தி விடுங்கள்.
- உங்களுக்கு தேவைப்பட்டால் இந்த மாஸ்க்குடன் சந்தன பொடி அல்லது உருளைக்கிழங்கு சாறு சேர்த்துக் கொள்ளலாம்.